வெள்ளை நிற ஐபோனை (4) அறிமுகப்படுத்திய பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஆப்பிள் நிறுவன உயர் அதிகாரி பில் ஷில்லர் கூறியதாவது, தற்போது நடைமுறையில் உள்ள ஐபோனுக்கும், இந்த வெள்ளை ஐபோனுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்றாலும், இது சற்று தடிமனானது. கருப்பு ஐபோனை விட, இந்த வெள்ளை ஐபோன் 4, 0.2 மிமீ தடிமன் கொண்டது என்றும், மெட்டல் ஆண்டெனா இரண்டிலும் ஒரேபோல் உள்ளபோதிலும், கிளாஸ் பேனல்கள், புதிய ஐபோனில் சற்று தடிமனாக உருவாக்கப்பட்டுள்ளது. புறஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் விதமாக, இதில் சிறப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Saturday, April 30, 2011
Thursday, April 28, 2011
பள்ளி பாடப்புத்தகங்கள்
தமிழ்நாடு அரசு பள்ளி பாடப்புத்தகங்கள்(1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை ) பிடிஎப்(PDF) வடிவில்..டவுன்லோட்( Download ) செய்ய இங்கே செல்லவும்
http://www.textbooksonline.tn.nic.in
சமச்சீர் கல்வி 10ம் வகுப்பு பாட நூல்கள் டவுன்லோட்( Download ) செய்ய
Wednesday, April 27, 2011
இலவசமாக மொபைல் அப்பிளிகேஷன்ஸ்
இலவசமாக மொபைல் அப்பிளிகேஷன்ஸ்( Free Mobile Applications) டவுன்லோட்( Download ) செய்ய இங்கே செல்லவும்..
http://www.freewarelovers.com/
அன்ட்ராய்டு(ANDROID), பால்ம்(PALM OS), பிளாக்பெர்ரி(BLACKBERRY), சிம்பியன்(SYMBIAN) போன்ற மொபைலுக்கான இலவச அப்பிளிக்கேஷன்கள் இங்கே கிடைக்கின்றன.
Tuesday, April 26, 2011
உங்கள் வெப்சைட் மதிப்பு எவ்வளவு?!
ஒரு வெப்சைட்டினை மதிப்பீடு(website value) செய்வது எப்படி? வெப்சைட்டின் பண விகிதம், விளம்பரங்கள் மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டும்? என்பதை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்..
இந்த பிளாக்கின் மதிப்பு $58 என காட்டுகின்றது..பலே!! பலே!!
அலக்ஸா ரேங்க்(Alexa Traffic Ranking): 9,067,664
Monday, April 25, 2011
விண்டோஸ் கிளினர்

விண்டோஸ் சிஸ்டம் இயக்கத்தில், பைல்களை நிர்வகிப்பதில் உலகளவில் பயன்படுத்தப்படும் புரோகிராம்களில் புகழ் பெற்றது சிகிளீனர் (CCleaner) ஆகும். அவ்வப் போது ஏற்படும் தற்காலிக பைல்கள், குக்கீஸ், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்றவற்றை நீக்கி, ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்து வதில் சிறப்பாக இது இயங்குகிறது. இதனைத் தயாரித்து வழங்கும் பிரிசாப்ட் (Pirisoft) நிறுவனம், அண்மையில் இதன் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பினை (பதிப்பு 3.0.5) வெளியிட்டுள்ளது. http://www.piriform.com/ccleaner/download/standard என்ற முகவரியில் உள்ள இதன் இணைய தளத்திலிருந்து இந்த புரோகிராம் பைலை இறக்கி, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
Wednesday, April 20, 2011
வெப்சைட் - VOIP கைடு
உலக நாடுகளுக்கு போன் பேச வேண்டுமா?அதற்கு ஏற்ற VOIP சாப்ட்வேர் எது? மிகவும் குறைவான கட்டணம் வசூலிப்பது எந்த சாப்ட்வேர். காலின்(calling) தரம் சாப்ட்வேர் உபயோகிக்கும் முறை அனைத்தும் சரியாக உள்ளதா? இப்படி பல விசயங்களை ஆராய்கின்றது இத்தளம். மிகவும் உதவியான தளம்.
வெளிநாடுகளுக்கு VOIP மூலம் கால்(call) பண்ண வேண்டும் என நினைப்பவர்களுக்கு இத்தளம் உதவியாக உள்ளது.
Monday, April 18, 2011
C புரோகிராமிங் - பகுதி 3
சி 1969 முதல் 1973 இடையேயான காலத்தில் டென்னிஸ்ரிச்சி(Dennis Ritchie) என்பவரால் பெல் (AT&T Bell Telephone Laboratories) சோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்டது.
யுனிக்ஸ் என்பது ஒரே நேரத்தில் பல வேலை செய்யக்கூடிய (Multi-tasking) மற்றும் பல பயனாளர்கள் (Multi-User) கையாளக் கூடிய இயக்குதளமாகும்(Operating System).1969ல் முதலில் யுனிக்ஸானது அஸம்பிளி லாங்குவெஜால் (Assembly Language) AT&T Bell Telephone Laboratories நிறுவன பணியாளர்களால் உருவாக்கப்பட்டது. அதில் டென்னிஸ் ரிச்சியும் ஒருவர்.
பின் 1973ல் யுனிக்ஸ் முழுமையும் சியால் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. இதில் சியானது மேலும் பல சிறப்புகளை புகுத்த உதவியது. மேலும் வேறுபட்ட வன்பொருளிளும் யுனிக்ஸை எளிதாக புகுத்தி (Portable)இயங்கும்படி செய்வதில் சி உதவியது.
சியில் எழுதப்பட்ட புரோகிராமானது எந்தவொரு ஆப்பரேட்டிங்சிஸ்டத்திலும் கம்பைலர் உதவிகொண்டு மெசின் கோடாக மாற்றி நாம் இயக்கவல்லது. இதற்கு நாம் கோடில் ஒருசில மாற்றங்களை செய்தாலே போதுமானது.சியானது எளிதாக வன்பொருளின் நினைவகத்தை கையாளக்கூடியது. எனவேதான சி-யானது மைக்ரோ கண்ரோலர் (Micro Controller) முதல் சூப்பர் கம்யூட்டர் (Super Computer) வரை உபயோகிக்கப்படுகின்றது.
சி-யில் எழுதப்பட்ட புரோகிராமை இயக்க நமக்கு கம்பைலர் உதவியாக உள்ளது. டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சி கம்பைலர்கள், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் கம்பைலர்கள், யுனிக்ஸ் இயக்கத்தில் இயங்கும் கம்பைலர்கள் உள்ளன். இவற்றிற்குள்ள ஒரே வேறுபாடு பிராசசர் அளவு மட்டுமே.
நீங்கள் உங்களுக்கு பிடித்த, தகுந்த கம்பைலரை உபயோகித்து புரோகிராம் எழுதிபார்க்கலாம்.சில கம்பைலர்களை பற்றி அடுத்த பதிப்பில் பார்க்கலாம்..
Subscribe to:
Posts (Atom)