Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Tuesday, July 23, 2013

பேப்ளேட்(Phablet) என்றால் என்ன?

திரை அளவு 5 முதல் 7 இன்ச் வரை உள்ள ஸ்மார்ட் போன்களே பேப்ளேட்(Phablet) என அழைக்கப்படுகின்றன. இது ஸ்மார்ட் போன்(Smart Phone) மற்றும் டேப்லெட்ன்(Tablet) அனைத்து சிறப்புகளையும் கொண்டது. அதாவது ஸ்மார்ட், டேப்லெட் என இரண்டு வெவ்வேறு வகையான சாதனங்களை உபயோகிப்பதை தவிர்க்கவே வந்ததுதான் பேப்ளேட்.

இனி நீங்கள் வாங்கப்போவது பேப்ளேட் தானே??!!


  • Samsung Galaxy Note
  • Nokia N810
  • Dell Streak

Sunday, July 21, 2013

Auxus Nuclea N1 முன்பதிவு

சிறப்புகள்:

  • 5 இன்ச் FULL HD டிஸ்பிளே
  • 1.5GHz குவார்ட் கோர் டர்போ பிராசசர்
  • கொரில்லா கிளாஸ்3
  • 13MP கேமரா
  • 8MP முன்பக்க கேமரா
  • ஆன்ட்ராய்ட் 4.2
  • இரட்டை சிம் வசதி
  • விலை 15990 ரூபாய்

வெப் லிங்க்

Thursday, May 16, 2013

முதல்வர் கணினித் தமிழ் விருது

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கணினித் தமிழுக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோருக்கு, "முதல்வர் கணினித் தமிழ் விருது" வழங்கப்படும். இவ்விருது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை கொண்டிருக்கும்.

Thursday, February 7, 2013

உங்களுக்கு தமிழில் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வேண்டுமா?

இந்த லிங்கை கிளிக் செய்து அது என்ன என்று கூறுங்கள்..

https://docs.google.com/forms/d/1eRPic7cTzfVR4vx3NOD1DDMj8DiFxBqb7yGJqfP6xns/viewform

நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன் சாத்தியம் என்றால் உங்களுக்கு விரைவில் கிடைக்கலாம்..

அதிகம் விரும்பப்படும் தமிழ் ஆன்ராய்டு அப்ளிகேஷன் வெளியிட இது உதவும்..

நன்றி..

Friday, August 24, 2012

புதிய 'லோகோ'

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய லோகோவை (logo) 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மாற்றி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்டின் வெப்சைட்டில் இந்த புது லோகோவை காணலாம்..இந்த லோகோ டைடன்(titan) சாப்ட்வேர் கம்பெனியால் உருவாக்கப்பட்டுள்ளது. O S (Operating System) ‌எழுத்துகளை இணைத்து விட்டு நாங்கள் ஆப்‌பரேட்டிங் சிஸ்டத்தில் சிறந்தவர்கள்‌ ‌என்பதை காட்டுகின்றது இந்த லோகோ.


குகிளும்(google) தற்சமயம் தன்னுடைய பேவி ஐகானை (favi icon)மாற்றியுள்ளது..google.comஐ திறந்து, வெப் புரவுசரின் டைட்டில் பாரின் மே ல் இடது புறத்தில் இந்த ஐகான் மாற்றத்தை நீங்கள் காணலாம்.

Monday, July 30, 2012

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2013

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் 2013 தொகுப்பு வெளியாகிறது. இதன் நுகர்வோருக்கான முன்னோடி (Consumer Preview Consumer Preview) தொகுப்பு அண்மையில் ஜூலை 16ல் வெளியானது. இதில் பல புதிய டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களும், சர்வர் இயக்கம் சார்ந்த பல புரோகிராம்களும், வசதிகளும் தரப்பட்டுள்ளன. இதனை http://www.microsoft.com/office/preview/en என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, July 18, 2012

விண்டோஸ்-8 & நெக்சஸ் 7


 உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி கனடாவில் உள்ள டோரன்டோவில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.மைக்ரோசாஃப்டின் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளம் 2,233 டாலர் இருக்கும் என்றும், விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் 231 சர்வதேச சந்தைகளில் வெளியிட உள்ளதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற கூகுள் இணையதள நிறுவனமானது ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக தனது முதல் டேப்லட்டை அறிமுகம் செய்துள்ளது. 7 அங்குல திரை அகலம் கொண்ட இந்த டேப்லட்டானது, கூகுளின் ஜெல்லிபீன் மென்பொருள், அதிநவீன கேமரா உள்ளிட்ட சிறப்பு வசதிகளை கொண்டுள்ளது. மேலும், ஜெல்லிபீன் மென்பொருளானது வேகமாக செயல்படும் திறன் கொண்டது என்றும், குரல் தேடல் போன்ற புதிய வசதிகளை கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்துக்குப் போட்டியாக சர்ஃபேஸ் டேப்லெட்டுகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், கூகுள் நிறுவனம் நேற்று வெளியிட்ட நெக்சஸ் 7 டேப்லெட்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Sunday, July 8, 2012

DNS எக்ஸ்சேஞ்சர் மூலம் வைரஸ்


டி.என்.எஸ்.,( டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது. தற்போது டி.என்.எஸ்.,சேஞ்சர் ( அலூரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயல் இழக்கச்செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கினர் . இது கடந்த நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ., மாற்று சர்வரை நிறுவி உதவியது. இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் 9 ம் தேதி(‌இன்று) செயல்பட துவங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே டி.என்.எஸ்., சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் www.dns-ok.us கிளிக் செய்தால் பாதிக்கப்டாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். 9 ம்தேதி(‌இன்று) என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள்.

Friday, July 6, 2012

ஸ்கைப் 5.10.0.114


உலகின் எந்த மூலையில் இருப்பவர்களுடனும் தொடர்பு கொண்டு பேச, இலவசமாக நமக்குக் கிடைக்கும் புரோகிராம் ஸ்கைப். ஸ்கைப் பயன்படுத்தும் எவருடனும் இலவசமாக நாம் தொடர்பு கொண்டு பேச முடியும். உலகில் பெரும்பாலானவர்கள் இதனையே பயன்படுத்தி வருகின்றனர். இதன் புதிய பதிப்பு சென்ற ஜூன் 14 அன்று வெளியாகியுள்ளது. இதனை http://download. skype.com என்ற இந்நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். 
புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட இந்த புரோகிராம், புதிதாக இதனைப் பயன்படுத்துபவர்களும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கைப் இயக்கப்பட்டவுடன் கிடைக்கும் ‘Getting Started Wizard’ மூலம், நாம் அடிக்கடி மேற்கொள்ளும் பணிகளைச் செயல்படுத்தலாம். தொடர்புகளை கண்டறிதல், பெர்சனல் தகவல்களை எடிட் செய்தல், சோதனை அழைப்புகளை மேற்கொள்ளுதல் போன்றவை இப்போது எளிமையாக்கப்பட்டுள்ளன

Wednesday, June 20, 2012

தும்பி & விஸ்காபுலரி


தும்பி

www.tumbhi.com

இந்த இணையதளத்தில் உங்களின் தனித் திறமைகளை உலகுக்கு சொல்ல வாய்ப்பளிக்கிறது. இசை, ஆவணப்படம், போட்டோகிராபி, அனிமேஷன், எழுத்து, ஃபைன் ஆர்ட்ஸ், ஃபேஷன், கலை போன்ற எட்டு துறைகளிலிருந்து படைப்புகளை அனுமதிக்கிறது இத்தளம்.

இதற்கென தனியாக ஆலோசனை குழு இருக்கிறது. போட்டோகிராபி, மியூசிக், ஆவணப்படம் என ஒவ்வொன்றுக்கும் தனி குழு செயல்படுகிறது. அந்தந்த குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் அந்த துறையைச் சார்ந்த வல்லுனர்கள். இவர்கள் இந்த இணையதளத்திற்கு வரும் படைப்புகளை ஆராய்ந்து, இந்த வலைதளத்தில் வெளியிடுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் அவர்களது திறமையை வெளிக்கொணர  மாதத்திற்கு ஒருமுறை  போட்டியும் நடத்துகிறார்கள்.

விஸ்காபுலரி

http://www.wizcabulary.com/

ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கான, ஆங்கிலச் சொல் அறிவினைச் சோதித்து வளர்த்திடும் தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வெளியே வெய்யிலோ அல்லது மழையோ இருப்பின், சிறுவர்களை வீட்டுக்குள் கட்டிப் போடும் வகையில், சவால் விடும் தளமாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது.


Friday, May 11, 2012

பிளாக்வேர்

பிளாக்வேர் (Blogware) என்பவை பிளாக்குகள் தயாரிப்பதிலும் நிர்வகிப்பதில் மேம்படுத்துவதிலும் உதவும் சாப்ட்வேர் தொகுப்புகள். இவற்றை வெப்லாஃக் சாப்ட்வேர், பிளாக்கிங் சாப்ட்வேர்(weblog software, blogging software) என்றும் அழைப்பார்கள்.

பிளாக்வேர்க்கு வேர்டு பிரஸ்( Word Press ) டூலை உதாரணத்திற்கு கூறலாம்.

Sunday, April 22, 2012

அக்ஷய திருதியை

அக்ஷய திருதியை அன்று தங்கம் விலை விவரம்,

Year      Price
2008     1050 Rs.
2009     1400 Rs.
2010     1600 Rs.
2011      2064 Rs.
2012      2680 Rs.( Expected Price )


தங்கத்திற்கு தட்டுப்பாடு ..
நமக்கு கட்டுப்பாடு..

Happy Akshaya Tritiya..

'பங்கு சந்தை தமிழில்' ப்ளாகில் இருந்து செய்தி..

Friday, April 20, 2012

கூகுள் கிளாஸ்


குடிக்குற கிளாஸ் இல்லப்பா இது.. 

கூகுள் கண்ணாடி( Google Glass ) எப்படிச் செயல்படும் என்பதை விளக்கி வீடியோ ஒன்றைத் தயாரித்திருக்கிறது கூகுள். அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்த பயனீட்டாளர், கூகுள் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு அந்த நாளை ஆரம்பிக்கிறார். காபி குடிக்கும்போது அன்றைய நாளுக்கான திட்டங்களை அவரது காலண்டரில் இருந்து எடுத்துக்காட்டுகிறது கூகுள் கண்ணாடி. மதியம் 2 மணிக்கு நண்பரைப் புத்தகக் கடை ஒன்றில் சந்திக்கும்படி சொல்லிவிட்டு வீட்டைவிட்டுக் கிளம்புகிறார். பிடித்த இசையை ஒலிக்கச் செய்துகொள்கிறார். ரயில் நிலையம் அருகில் வரும்போது, ரயில் ரத்தாகிவிட்டது என்ற செய்தி வருகிறது. 'அதற்குப் பதில் நடந்து செல்கிறீர்களா?’ என்றபடி நடந்துபோகும் பாதையைத் தெளிவாகக் காட்டுகிறது. செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சியின் போஸ்டர் பார்த்து, அதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும் என்பதைப் பதிவுசெய்கிறார். புத்தகக் கடை யில் நுழைந்து நண்பருக்குக் காத்திருக்கிறார். ஒரு புத்தகம் வாங்குகிறார். நண்பர் எங்கே இருக்கிறார் என்பதைக் கேட்கிறார். நண்பர் அவரது இருப்பிடத்தை 'ஷேர்’ செய்யவும் இருவரும் சந்திக்கிறார்கள்.  இருவரும் ஒரு காபிக் கடையில் காபி அருந்துகிறார்கள். அந்த இடத்தை கூகுள் கண்ணாடியில் பதிந்துகொள்கிறார். பிறகு, நடந்து வரும் வழியில் இருக்கும் அழகான ஓவியம் ஒன்றைப் புகைப்படம் எடுத்து தனது கூகுள் ப்ளஸ்ஸில் தரவேற்றம் செய்கிறார். வீடு வந்து சேர்ந்ததும், மாடிக்குச் செல்கிறார். அவரது காதலி அழைக்க 'பாடலை நிறுத்து’ என்று கட்டளையிட்டு, அவருடன் வீடியோ சாட்டில் பேசுகிறார். 'உனக்கு ஒரு ஆச்சர்யம்!’ என்றபடி மொட்டைமாடியின் முகப்பில் நின்றுகொண்டு கிதாரை வாசிக் கிறார். எதிரே கடலின் பின்னணியில் சூரிய அஸ்தமனக் காட்சியைக் காதலியும் பார்க்கும் வகையில் ஷேர் செய்துவிட்டு கிதார் வாசிக்கிறார். காதலி அதை ரசிக் கிறார்.

மேலும் தெரிந்து கொள்ள,
https://plus.google.com/111626127367496192147/posts

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9c6W4CCU9M4

Wednesday, April 18, 2012

பி.எஃப் கணக்கு தகவல் - ஆன்லைனில்


பி.எஃப்.( PF - Provident Fund ) கணக்குதாரர்கள் அவர்கள் கணக்கில் இருக்கும் இருப்பு தொகையை இணையதளத்திலேயே (ஆன்லைன்) பார்க்க முடியும்.

இதற்கு கீழே உள்ள பி.எஃப். அமைப்பின் இணையதள இணைப்பை கிளிக் செய்யவும்.

http://epfoservices.in/epfo/member_balance/member_balance_office_select.php

அதன் அடியில் 'Click Here to know the balance' என்கிற பகுதியை சொடுக்கினால், இன்னொரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் மாநிலம், நகரத்தை தேர்வு செய்ய வேண்டும்

அதன் பிறகு உங்கள் பி.எஃப். எண் மற்றும் உங்களின் பெயர் (பி.எஃப்.கணக்கில் இருப்பது போல்), உங்களின் செல்போன் நம்பர் ஆகியவற்றைக் கொடுத்தால் எஸ்.எம்.எஸ் மூலம் உங்களுக்குத் தகவல் வந்து சேரும்.


Tuesday, April 10, 2012

மிகவும் பிரபலமான வெப்சைட்டுகள்



மக்களிடையே மிகவும் பிரபலமான வெப்சைட்டுகள் இவை,
Google.com - www.google.com
Facebook.com - www.facebook.com
Youtube.com - www.youtube.com
Yahoo.com - www.yahoo.com
Baidu.com - www.baidu.com
Wikipedia.org - www.wikipedia.org
Live.com - www.live.com
Qq.com - www.qq.com
Twitter.com - www.twitter.com
Blogspot.com - www.blogspot.com

Amazon.com - www.amazon.com
Linkedin.com - www.linkedin.com
Google.co.in - www.google.co.in
Taobao.com - www.taobao.com
Msn.com - www.msn.com

சின்ன தகவல்
https://play.google.com/
இது கூகுள் வழங்கிடும் சேவை. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் எளிதாக அப்பிளிக்கேஷனை(Applications) டவுன்லோட் செய்து உபயோகிக்க உதவுகின்றது. இந்த வெப்சைட்டில் 'INSTALL' பட்டனை கிளிக்செய்து இன்ஸ்டால்(Install) செய்தவுடன் சில நிமிடங்களில் அந்த அப்பிளிக்கேஷன் ஸ்மார்ட் போனிலும் இன்ஸ்டால் ஆகிவிடுகிறது. இதற்கு நீங்கள் ஆன்ராய்டு போனில் ஜிமெயில் அக்கவுன்டில் லாகின் செய்து இருக்க வேண்டும். மேலும் உங்கள் மொபைல் இன்டர்நெட் இணைப்பை பெற்றிருக்க வேண்டும். பல அப்ளிக்கேஷன் இலவசமாக கிடைக்கிறது.




Monday, March 12, 2012

விண்டோஸ் 8


மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத் தொகுப்பினை, சென்ற பிப்ரவரி 29 அன்று, நுகர்வோர்களுக்கு வெளியிட்டுள்ளது. வெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இத்தொகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.


1. ப்ராசசரின் இயக்க வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் அல்லது அதற்கும் மேலாக.
2.கம்ப்யூட்டர் 32 பிட் எனில் ராம் மெமரி 1 ஜிபி; 64 பிட் எனில் ராம் மெமரி 2 ஜிபி குறைந்தது இருக்க வேண்டும்.
3. எப்போதும் தேவையான காலி டிஸ்க் இடம், 32 பிட் எனில் 16 ஜிபி. 64 பிட் எனில் 20 ஜிபி.
4. டைரக்ட் எக்ஸ்9 கிராபிக்ஸ் டிவைஸ் WDDM 1.0 உடன் இருக்க வேண்டும். அல்லது இதனைக் காட்டிலும் உயர்வாக இருக்க வேண்டும்.

விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் சில வசதிகளைப் பயன்படுத்த, சில கூடுதல் ஹார்ட்வேர் தேவைகள் அவசியம். அவை, Snap feature பயன்படுத்த வேண்டும் எனில், உங்கள் கம்ப்யூட்டரின் ரெசல்யூசன் குறைந்த பட்சம் 1366x768 என இருக்க வேண்டும். நீங்கள் தொடுதிரை பயன்பாட்டினை மேற்கொள்வதாக இருந்தால், மல்ட்டி டச் ஏற்கக்கூடிய லேப்டாப், டேப்ளட் அல்லது டிஸ்பிளே திரை கொண்ட மானிட்டர் இருக்க வேண்டும். விண்டோஸ் 8 சிஸ்டம், ஒரே நேரத்தில் ஐந்து டச் பாய்ண்ட்களை இயக்கும் திறன் கொண்டது என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். விண்டோஸ் ஸ்டோர் பயன்படுத்த கட்டாயம் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும். 

Monday, January 23, 2012

பணிபுரிய சிறந்த நிறுவனம்


பணிபுரிய சிறந்த நிறுவனம்.. முதல் இடத்தில் கூகுள்.. 

இன்டர்நெட் உலகில் உலக அளவில் புகழ் நிறுவனமான கூகுள் பணிபுரிபவதற்கான சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம், ஃபார்சூன் பட்டியலில் நான்வது இடத்தில் இருந்தது.

ஆட்டம், பாட்டம், உணவு என்பதாக கூகுள் அலுவலகம் பணியாளர்களை கவர்வதாக இருக்கிறது. நியூயார்க் அலுவலகத்தில் மட்டும் சுமார் 25 கபே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...!

அடுத்த இடங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் (12), கோல்டுமேன் சாஷெ ( 33), அடோப் (65), இன்டெல் (45), மற்றும் மைக்ரோசாஃப்ட் (76) ஆகிய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. 

Wednesday, January 11, 2012

ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..!


உலக அளவில் இணைய தளத்தை பயன்படுத்துபவர்களில் சுமார் 55% பேர் ஃபேஸ் புக்கில் கணக்கு வைத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில், ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகளும் இருக்கின்றன.

பிரெசில் நாட்டில் இன்றைக்கும் ஆர்க்குட் தான் ராஜாவாக இருக்கிறது.

ஜப்பானில் ஃபேஸ் புக்கை பின்னுக்கு தள்ளிவிட்டு டூவிட்டர் குருவி முதல் இடத்தில் இருக்கிறது

போலந்தில் நாஸ்சா கியாசா என்கிற சமூக வலைதளம் பிரபலம்

வியட்னாலில் ஃபேஸ் புக் அதன் ஆதரவை படிப்படியாக இழந்து வருகிறது.

நம் போட்டி நாடான சீனாவில் சமூக இணைய தளங்களுக்கு அனுமதி இல்லை என்பதால்.... அங்கு ஃபேஸ் புக்... இல்லை.

Monday, December 26, 2011

கூகுள் ஸ்ட்ரீட் வியூ


கூகுள் ஸ்ட்ரீட் வியூ எனப்படும் தெருப் பார்வை நமக்கு என்ன வழங்கும்? இது அமல்படுத்தப்படும் நகரின் தெருக்களை மிகவும் நெருக்கமாகக் காட்டும். கூகுள் மேப்ஸ் சென்று தெருக்களை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மேப்பின் இடது பக்கம் ஆரஞ்ச் வண்ணத்தில் உள்ள “Pegman” ஐகானை இழுத்துவந்து நீல நிற வண்ணத்தில் உள்ள தெருவில் இட வேண்டும். உடன் அந்த தெருவின் தெளிவான தோற்றம் நமக்குக் கிடைக்கும்.

இந்தியாவிலும் இந்த வசதி அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது. முதல் முறையாக பெங்களூருவில் இது தொடங்கப்படுகிறது. கூகுள் நிறுவனம் பெங்களூருவில் முதலில் தெருக்களைத் தன் கேமராவிற்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் கூகுள் கேமராக்களை அமைத்து, படங்களைப் பிடித்து வருகிறது.

லிங்க்,
http://maps.google.com/intl/en/help/maps/streetview/index.html

Monday, December 19, 2011

செய்தி - கூகுள் மங்காத்தா!!

அஜீத் நடிப்பில் வெளியான 50வது படம் 'மங்காத்தா'. அஜீத் நடிப்பில் வெளியான அனைத்து படங்களின் வசூல் சாதனையும் 'மங்காத்தா' படம் முறியடித்தது. இந்நிலையில் GOOGLE நிறுவனம் 2011 ஆண்டு தங்களது இணையத்தில் அதிகமுறை தேடப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக தமிழ் படமான 'மங்காத்தா' இந்த வரிசையில் 7ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. அஜீத், த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்த இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். GOOGLE படங்களின் வரிசையில் சல்மான்கான் நடிப்பில் வெளியான 'பாடிகார்ட்' முதல் இடத்தை பிடித்திருக்கிறது. ' ரா.ஒன்' 2ம் இடத்திலும், 'ஹாரி பாட்டர்' 3ம் இடத்திலும் உள்ளன. மற்றவை
 4. டெல்லி பெல்லி
5.இந்தி 'சிங்கம்'
 6. ரெடி
 7. மங்காத்தா
 8. TRANSFORMERS-3
 9. தோக்குடு ( தெலுங்கு )
 10. Zindagi Na Milegi Dobara ( இந்தி )

 GOOGLE இணையத்தின் தேடலிலும் ' மங்காத்தா' படம் சாதனை படைத்துள்ள விஷயம் அஜீத் ரசிகர்களையும் படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.