Sunday, July 21, 2013

Auxus Nuclea N1 முன்பதிவு

சிறப்புகள்:

  • 5 இன்ச் FULL HD டிஸ்பிளே
  • 1.5GHz குவார்ட் கோர் டர்போ பிராசசர்
  • கொரில்லா கிளாஸ்3
  • 13MP கேமரா
  • 8MP முன்பக்க கேமரா
  • ஆன்ட்ராய்ட் 4.2
  • இரட்டை சிம் வசதி
  • விலை 15990 ரூபாய்

வெப் லிங்க்

Friday, July 12, 2013

சிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்கள்



கூகிளின் RSS சேவையான Google Reader கடந்த ஜூலை 1 ந்தேதி நிறுத்தப்பட்டு விட்டது. ரீடர் மூலமாக பிடித்த தளங்களைப் படித்து வந்தவர்களுக்கு மாற்று தளங்களை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கே சிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்களைக் குறிப்பிடுகிறேன். இவை அனைத்திலும் உங்களுடைய பழைய Google Reader Data வை புதிய தளத்தில் Import செய்து அப்படியே பயன்படுத்தும் வசதி இருக்கிறது. அதனால் உங்களுக்குப் பிடித்தமான

Sunday, July 7, 2013

கூகிள் ரீடர் தகவல்களை டவுன்லோடு செய்ய [கடைசி தேதி ஜூலை 15, 2013]


கூகிளின் பிரபலமான RSS சேவையான Google Reader இந்த ஜூலை 1 ந்தேதியிலிருந்து நிறுத்தப்பட்டதை அறிவீர்கள். ஆனலைனில் நமக்குப் பிடித்தமான தளங்களின் செய்திகளை உடனுக்குடன் படிக்க உதவியாக இருந்து வந்தது கூகிள் ரீடர். இதை நிறுத்தப் போவதாக அறிவித்தவுடன் பலர் அதிர்ச்சியே அடைந்தனர்.


சரி நீங்கள் கூகிள் ரீடரில் உங்களுக்குப் பிடித்த தளங்களைச் சேர்த்து வைத்திருப்பீர்கள். அந்த அமைப்புகளை டவுன்லோடு செய்து கொண்டால்

Friday, July 5, 2013

அமேஸான் இந்தியா

ஜீன் மாதத் தொடக்கத்தில் செயல்படத் தொடங்கிய அமேஸான் இந்தியா டாட் இன்(amazon.in) இணைய வர்த்தகத் தளத்தில், மொபைல் போன்களும் அவற்றிற்கான துணை சாதனங்களும் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன. நோக்கியா, எச்.டி.சி., மைக்ரோமேக்ஸ், பிளாக்பெரி, சாம்சங், ஸென்ஹெய்சர் போன்ற நிறுவனங்களின் மொபைல் போன்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன்,

 டேப்ளட் பிசிக்கள்( Tablet PC ), போர்ட்டபிள் மீடியா பிளேயர்கள், கேமராக்கள் மற்றும் போட்டோகிராபி சார்ந்த துணை சாதனங்களுடன் இடம் பெற்றுள்ளன. ஏறத்தாழ, 200 நிறுவனங்களிடமிருந்து, 20 ஆயிரம் சாதனங்கள் விற்பனைக்குப் பட்டிலிடப்பட்டுள்ளன. வாங்கப்படும் பொருட்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளிலேயே வழங்கப்படும் வசதி, வாங்கப்பட்ட பொருட்கள், வீடுகளுக்கு அனுப்பப் படும் வழியைக் கண்காணிக்கும் வசதி, பொருட்கள் பிடிக்கவில்லை எனில் திரும்ப அளிப்பதற்கான வசதி போன்ற அமேஸான் இணையதளம் வழக்கமாக தரும் அனைத்து வசதிகளையும், இந்த தளத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் தருகின்றன. தொடக்கத்தில், நூல்கள் மற்றும் திரைப்படங்கள் மட்டுமே இந்த தளத்தில் விற்பனைக்கு இருந்தன. 

தொடக்க காலச் சலுகையாக, குறிப்பிட்ட மொபைல் போன் மாடல்களுக்கு, அமேஸான் 10 சதவித விலை தள்ளுபடி அளிக்கிறது. ஒருவருக்கு ஒரு மொபைல் போனுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். சில டிஜிட்டல் கேமராக்களுக்கு 15 சதவீதத் தள்ளுபடி தரப்படுகிறது.



Wednesday, June 19, 2013

ஆபிஸ் மொபைல்

மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஆப்பிள் ஐ-போன்க்கு என தனித்துவம் வாய்ந்த அப்பிளிகேஷனை தயாரித்துள்ளது. அதுதான் ஆபிஸ் மொபைல்(Office Mobile). இதனை  உபயோகிக்க  “ஆபிஸ் 365“ல் தனி கணக்கு வைத்திருக்க‌ வேண்டும். இந்த வசதி 1 மாதத்திற்கு இலவசமாகவும் அதற்கு மேல் பணம் கட்டி தொடரவும் என மைக்ரோசாப்ட் கூறுகின்றது. இந்த அப்ளிகேஷன் மூலம் மைக்ரோசாப்ட் வேர்டு(MS-WORD),   மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட்(POWER POINT), எக்ஸல் ஷீட்(EXCEL SHEET) என அனைத்தையும் ஐ-போன் வழியாக உபயோகிக்கலாம்.

ஆபிஸ் 365 கணக்கு தொடங்க

அப்ளிகேஷன்

கீழ்காணும் ஆப்பிள் சாதனங்கள் மட்டும் இந்த அப்ளிகேஷனை உபயோகிக்கமுடியும்.

  • iPhone 4
  • iPhone 4S
  • iPhone 5
  • iPOD Touch( 3,4,5 generation )
  • iPad mini
  • IOS 6.1


இது போக மைக்ரோசாப்ட் ஆப்பிள் சாதனங்களுக்கென கீழ்காணும் அப்ளிகேஷன்களை தயாரித்துள்ளது..

  • skydrive
  • microsoft onenote
  • photo synth
  • wordament

Saturday, June 8, 2013

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-8

auxiliary equipment - துணைக் கருவி
auxiliary function - துணை செயல்கூறு
auxiliary memory - துணை நினைவகம்
auxiliary operation - துணைச் செயல்பாடு
auxiliary storage - துணைத் தேக்ககம்
availability - கிடைத்தல்
available time - கிடைக்கும் நேரம்
average search length - சராசரித் தேடு நீளம்
axes - அச்சுகள்
babble - பிறழ்ச்சி
back panel - பின்புறப் பலகம்
back plane - பின்தளம்
back space - பின்நகர்வு

Friday, June 7, 2013

வேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது, பார்ப்பது எப்படி?


இணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற வேற்று மொழிப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும் போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில் தெரியும். மொழி புரியாதவர்களுக்கு இது நலமாக இருக்கும்.

ஆனால் நிறைய படங்கள் டொரண்ட்களில் எடுக்கும் போது முக்கியமாக YouTube லிருந்து வேறு