Tuesday, January 31, 2012
பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்
கூகிளின் இணைய சேவையான பிளாக்கர் தளம் மூலம் பலரும் வலைப்பதிவுகள் எழுதி வருகிறார்கள். பிளாக்கரில் வலைப்பதிவுகளின் முகவரியானது .Com என்று முடியும். இன்று டொமைனை .in என்று முடியுமாறு மாற்றிவிட்டது. பிளாக்கர்களுக்கு இன்று காலையில் அதிர்ச்சியே எற்பட்டது. முகவரி மாற்றத்தால் முக்கிய பெருமையான (?) அலெக்சா ரேங்க் குறைந்து பாதாளத்திற்கு போய்விட்டது. பலருக்கு Followers Widget ஆன பின் தொடர்பவர்களின்
Monday, January 30, 2012
ஆன்லைனில் ரயில் டிக்கெட் வேகமாக புக் செய்ய உதவும் இணையதளங்கள்
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறையான ரயில்வே துறையின் பிரத்யேக இணையதளமான IRCTC மூலம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் டிக்கெட்டுகளைப் புக் செய்து பயணிக்கின்றனர். தட்கல் முறையிலான டிக்கெட்டுகளை எடுக்க இந்த இணையதளம் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தின் மிகப்பெரிய குறைபாடுகளான மிக மெதுவாக லோடிங் ஆவது, சர்வர் தொக்கி நின்று விடுவது போன்றவற்றால் இணையதளத்தில் புக் செய்வது சில நேரங்களில்
Sunday, January 29, 2012
பென் டிரைவ்களின் தரத்தை சோதிக்க இலவச மென்பொருள் ChkFlsh
USB கருவிகளான பென் டிரைவ், மெமரி கார்டு போன்றவை இன்றைய கணிணியுலகத்தில் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. பென் டிரைவ்களும் தற்போது போலியாக 32 GB என்றெல்லாம் சொல்லி விற்கப்படுகிறது. சிலருக்கோ தாங்கள் வாங்கிய பென் டிரைவ் தரமானதா அல்லது போலியானதா என்று கண்டறியத் தெரியாது. அதே போல தற்போது நாம்
Thursday, January 26, 2012
Way2Sms விளம்பரங்கள் : மொபைலுக்கு இலவசமாக ரீசார்ஜ் செய்திடலாம்.
Way2Sms இணையதளம் இந்தியாவிற்குள்ளும் உலகளவிலும் இலவசமாக குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படுகிறது. இதில் மின்னஞ்சல் சேவையும் தரப்படுகிறது. இங்கேயே ஜிமெயில் மற்றும் யாகூ சாட்டிங் செய்யவும் முடியும். இப்போது புதியதாக விளம்பர சேவை ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணுக்கு இலவசமாக விநாடியில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு நீங்கள் Way2Sms கணக்கு ஒன்றைத் தொடங்கியாக வேண்டும்.
Tuesday, January 24, 2012
தகவல்
மாதம் 9000 ரூபாய் வரை சம்பாதிங்கள்
இது பழைய http://tamilcomputer.blogspot.com/2011/03/9000.html பதிவின் புது தகவல்..
கணக்கில் சேர்ந்துள்ள 515 ரூபாயை கொடுக்கும்படி விண்ணப்பித்துள்ளேன். சோதனைக்கு பின்பு அனுப்புவதாக கூறியுள்ளனர். சோதனைக்கு 30 நாட்கள் எடுத்துக்கொள்வார்களாம்..
பார்ப்பதற்கு karthik MCA அவர் கமென்ட்டில் சொல்லியது போலதான் உள்ளது. ஏதும் தகவல் இருந்தால் அடுத்த பதிவில் கூறுகின்றோம்....
Monday, January 23, 2012
பணிபுரிய சிறந்த நிறுவனம்
பணிபுரிய சிறந்த நிறுவனம்.. முதல் இடத்தில் கூகுள்..
இன்டர்நெட் உலகில் உலக அளவில் புகழ் நிறுவனமான கூகுள் பணிபுரிபவதற்கான சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம், ஃபார்சூன் பட்டியலில் நான்வது இடத்தில் இருந்தது.
ஆட்டம், பாட்டம், உணவு என்பதாக கூகுள் அலுவலகம் பணியாளர்களை கவர்வதாக இருக்கிறது. நியூயார்க் அலுவலகத்தில் மட்டும் சுமார் 25 கபே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...!
அடுத்த இடங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் (12), கோல்டுமேன் சாஷெ ( 33), அடோப் (65), இன்டெல் (45), மற்றும் மைக்ரோசாஃப்ட் (76) ஆகிய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
Saturday, January 21, 2012
HD டிவி/வீடியோ என்றால் என்ன?
ஹை டெபனிசன் டிவி( High Definition TV ) என்பது டிஜிடல் டிவியின்( Digital TV) வரையறைக்குட்பட்டது. இதுவரை நாம் அனலாக்(Analog) எனப்படும் முறையிலேயே டிவி சேனல்களின் வீடியோகளை நம் வீட்டு அனலாக் டிவியில்(Analog TV) பார்த்து வந்தோம். தற்போது டிஜிட்டல் முறைக்கு நாம் சென்று கொண்டிருக்கின்றோம். அதாவது டிஜிட்டல் டேட்டாக்களை நேரடியாக வாங்கி நமக்கு வீடியோவை கொடுக்கக் கூடிய டிவிக்கள்( LCD, LED, Plasma ) தற்போது வந்துவிட்டன. இதற்கு நமக்குத் தேவை HD TV மற்றும் ஹைச் டி செட்டாப் பாக்ஸ்(HD Set-top box).செட்டாப் பாக்ஸ்ல் உள்ள HDMI போர்ட் மூலம் நாம்முடைய HD டிவியானது வீடியோவை துள்ளியமாக காண்பிக்கின்றது. அனலாக் முறையிலான வீடியோவை நாம் AV அல்லது RF கேபிள்வழியாக டிவிக்கு இணைத்து பார்க்கின்றோம். அதேபோல் HDMI கேபிளானது HD டிவியுடன் இணைந்து துள்ளியமான வீடியோவை( Digital Video ) நமக்குத்தருகின்றது. HD டிவியில் நாம் காணும் வீடியோவில் முந்தைய அனலாக் டிவியை விட 5 அல்லது 6 மடங்கு துள்ளியமாக காணவும் கேட்கவும் முடியும்.
HDடிவி 720p 1080i, 1080p வகையான நீள அகலமுடைய வீடியோவை நமக்கு காண கொடுக்கின்றது. அதாவது அகன்ற திரை(16:9) வீடியோவினை நாம் காணலாம்.
720p, 1080i, 1080p நீள அகலத்தை கீழே இருக்கும் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நடுவில் இருப்பது அனலாக் வீடியோ அதாவது நாம் தற்போது அனலாக் டிவிகளில் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவாகும். படத்தைப்பார்த்தாலே எவ்வளவு அளவிலான வீடியோவை HDடிவி மூலம் நாம் காணலாம் என்பது உங்களுக்குப்புரியும்.
1080i அல்லது 1080p யை காண்பிக்கத்தகுந்த டிவிகள் சந்தையில் ஏராளம். குறிப்பக 1080p ல் வீடியோ தெளிவு சிறப்பாக இருக்கும்..
HD வீடியோ பார்க்க உங்களிடம் இருக்க வேண்டியது ஹைச் டி செட்டாப்பாக்ஸ்( HD set-top box ) மற்றும் அதற்கான HD டிவி, HDMI கேபிள். HD செட்டாப் பாக்ஸ் அதிக கொள்ளளவு உடைய டிஜிட்டல் வீடியோவை( HD Video ) HD டிவிக்கு கொடுக்கின்றது. HD டிவியானது அதனை நமக்கு காண்பிக்கின்றது. மேலும் HD சேனலில் 5.1 ஆடியோ(audio) வசதியும் உண்டு.
Subscribe to:
Posts (Atom)

