Saturday, October 10, 2009
வலை உலவிகளை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்
உங்கள் கணிப்பொறியில் மீண்டும் விண்டோஸோ அல்லது லினக்சோ நிறுவவேண்டி வரும் போது வலை உலவிகளும் ( Internet Browsers ) சேர்ந்தே அழிந்து விடும். அதில் உள்ள உங்களுக்கு பிடித்த தளங்கள், புக்மார்குகள், அமைப்புகளும் காணாமல் போய்விடும். இந்த நிலையில் உங்களின் வலை உலவியை மொத்தமாக பேக்கப் எடுக்க எளிய மென்பொருள் ஒன்று உதவுகிறது.இதில் பேக்கப் எடுத்து வைத்து விட்டால் உங்கள் வலை உலவியின் அமைப்புகளை மீண்டும்
Saturday, September 26, 2009
முத்தான மூன்று கையடக்க DTP மென்பொருள்கள்
டிசைனராக பணிபுரியும் தோழி ஒருவர் Coreldraw மென்பொருள் வேலை செய்யவில்லை என்றும் அவசரமாக அதை பயன்படுத்த வழி இருக்கிறதா என்று என்னிடம் கேட்டார். நான் உடனடியாக Coreldraw வின் கையடக்க பதிப்பை (Portable Edition ) தரவிறக்கி கொடுத்தவுடன்மகிழ்ந்தார். மேலும் நிற்காமல் DTP ( Desktop Publishing ) துறையில் பயன்படும் மூன்று மென்பொருள்களான Coreldraw, Photoshop, Pagemaker போன்றவற்றை கையடக்கமான வகையில்
Monday, September 21, 2009
கோப்புகளை சுருக்கவும் விரிக்கவும் உதவும் இணையதளங்கள்
உங்கள் நண்பர் ஒரு சுருக்கப்பட்ட கோப்பை ( Compressed or Zipped ) .zip அல்லது .rar வகையில் கொடுக்கும் போது அதை விரிப்பதற்கு ( Extract ) உங்கள் கணினியில் Winzip அல்லது WinRar போன்ற மென்பொருள்களை நிறுவாமல் இருப்பீர்கள். அவசரத்திற்கு என்ன செய்வது என்று தடுமாறாமல் பின்வரும் இணையதளங்களில் சென்று நீங்கள் ஆன்லைனிலேயே விரித்துக்கொள்ளலாம். மேலும் உங்களிடம் உள்ள கோப்புகளை இந்த தளங்களிலேயே சுருக்கிகொள்ளலாம்.1
Sunday, September 20, 2009
கட்டற்ற இலவச மென்பொருள்களின் தேவையும் சில கருத்துகளும்
கடந்த வாரத்தில் எங்கள் பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனதுஅசல் மென்பொருள்கள் தான் பயன்படுகிறதா என்று சோதனை நடத்தியது. கரூரில் அதிகமாக டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகள் தான் உள்ளன. இந்த ஆலைகளின் சங்கத்திற்கு மைக்ரோசாப்ட் ஆணையிட்டுவிட்டு சென்றதால் அனைத்து ஆலைகளுக்கும் அசல் மென்பொருள்களையே பயன்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனால் எல்லா தொழிற்சாலைகளும் கதிகலங்கி போய் உள்ளன.ஏன் என்றால் ஒரு
Thursday, September 17, 2009
விண்டோஸ் லைவ் மூவீ மேக்கர் புதிய பதிப்பு
மைக்ரோசாப்ட் தனது வீடியோ எடிட்டிங் மென்பொருளான விண்டோஸ் மூவீ மேக்கரின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.இதில் பல வசதிகளை மேம்படுத்தி உள்ளது. பல வகையான வடிவமைப்புகள் ( Transitions and Effects ) சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் வீடியோவை உங்கள் விருப்பத்திற்க்கேற்ப எடிட் செய்து கொள்ளலாம்.மேலும் வீடியோவிலிருந்து படங்களாக ( Images ) மாற்றிக்கொள்ளலாம். விரும்பிய பாடலின் இசையை மட்டும் தேர்வு செய்து கட்
Saturday, September 5, 2009
வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்
நீங்கள் வைத்துள்ள படங்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்துஎடுக்க நினைக்கிறீர்களா ? உங்களுக்கு AoA Audio Extractor என்ற இலவச மென்பொருள் உதவும்.இந்த மென்பொருள் AVI, MPEG, MPG, FLV, DAT,WMV,MOV, MP4, and 3GP போன்ற வகைகளில் இருந்து MP3, WAV or AC3போன்ற வகைகளில் மாற்றிக்கொடுக்கும்.இது ஒரு இலவச மென்பொருள். இதில் நீங்கள் குறிப்பிடும் வீடியோவின் முன்னோட்டத்தை பார்க்கலாம். மேலும் நீங்கள் விரும்பிய
Sunday, August 30, 2009
பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்
பழுதடைந்த CD/DVD களை வைத்துக்கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் கவலைப்படுகிறீர்களா?உங்களிடம் உள்ள பழுதடைந்துள்ள CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள் உள்ளன. இவை உங்கள் தகவல்களை ஒவ்வொரு செக்டார்களாக படித்து அதை நல்ல முறையில் மீட்டு தருகின்றன.1. Isobuster தரவிறக்கச்சுட்டி :http://www.isobuster.com/2.Cd Recovery Tool boxதரவிறக்கச்சுட்டி :http://www.oemailrecovery.com/
Wednesday, August 26, 2009
ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை
Thursday, August 20, 2009
கணினி டிவைஸ் டிரைவர்களை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்
கணிப்பொறி பயன்படுத்தும் நம்மில் பலர் கணிணியில் உள்ள தகவல்களை அல்லது முக்கியமான மென்பொருள்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறையாவது காப்பு நகல் எடுப்பதே இல்லை. ( Backup Copy ). இதனால் நீங்கள் திடிரென்று எதாவது பிரச்சினை என்று கணிணியை முழுதும் Format செய்யும் போது உங்களுடைய மென்பொருள்கள் அல்லது தகவல்கள் திரும்பக்கிடைக்குமா என்று பார்த்தால் சந்தேகமே வரும்.இதில் முக்கியமான விசயம் எதுவென்று
Sunday, August 16, 2009
ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய...
Start மெனுவில் சென்று உங்கள் கணினியை Restart செய்வது தாமதமானசெயலாக இருக்கிறதா ? நீங்கள் விரும்பினால் ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய வைக்கலாம். அது மட்டும் இன்றி எவ்வளவு நேரம் கழித்து Restart ஆகவேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். அரை நிமிடம் அல்லது ஒரு நிமிடம் என்று அமைத்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் வேலையும் எளிதாகிறது. நேரமும் குறைகிறது. மின்சார செலவும் குறைய வாய்ப்பல்லவா ? இதை நீங்கள்
Wednesday, August 12, 2009
பங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2
1.உங்களது வங்கி கணக்கு Axis Bank அல்லது State Bank ஆக இருந்தால் நல்லது.பணப்பரிமாற்றமும் உடனே நடக்கும். கமிசன் தொகையும் இருக்காது. நீங்கள் பங்குகளை விற்றால் 4 வது நாள் பணம் உங்கள் வங்கி கணக்கில் ஏறிவிடும்.2. நீங்கள் பங்குகளை வாங்கப்போவதற்கான பணம் Trading கணக்கில் தான் இருக்கும். இதில் வங்கி கணக்கைப்போல பணத்தை போட்டுவைத்து கொள்ளலாம். பிறகு எப்போது வேண்டுமானாலும் பங்குகளை வாங்கிகொள்ளலாம். Trading
Friday, August 7, 2009
பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1
பங்குச்சந்தை பற்றிய எனது அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதியதில்எனக்கு நிறைய நண்பர் வட்டாரமும் வரவேற்பும் கிடைத்தது. பல வாசகர்கள்பங்குச்சந்தை குறித்த அடிப்படையும் எவ்வாறு அதில் ஈடுபடுவது என்றும்கேள்வி கேட்டிருந்தார்கள். அதனாலே தொழில்நுட்பம் தவிர்த்த இப்பதிவுஎழுத வேண்டிய சூழ்நிலை. ஆனாலும் நண்பர்கள் இதையும் படிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.1. பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளுங்கள் :முதலில்
Thursday, July 30, 2009
My Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...
உங்கள் கணினியில் My documents போல்டர் வழக்கம் போல "C" டிரைவில்தான் அமைந்து இருக்கும். நண்பர்கள் எல்லோரும் தங்களது கோப்புகளையோ அல்லது வேறு ஏதேனும் பைல்களை சேமிக்கும் போது அவை எப்போதும்My documents போல்டரில் தான் சேமிக்கப்படும். நண்பர்களும் ஏதேனும் அவசரத்தில் சேமித்து விடுவார்கள். அதுவும் நல்லது தான். ஏன் என்றால் நமது பர்சனல் கோப்புகள் ஓரிடத்தில் தான் சேமித்து வைக்க விரும்புவோம். இதனால் ஒன்றும்
Monday, July 27, 2009
புதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்
புதியதாய் கணிணி இப்போது தான் வாங்கி இருக்கிறீர்களா ? அப்படி என்றால்நீண்ட நாட்களுக்கு உங்கள் கணினியை பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றவேண்டும். இந்த பாதுகாப்பு வழிமுறைகள் புதிய கணிணிகளுக்கு மட்டும்அல்ல , எல்லோரும் பயன்படுத்தலாம். கணிணி புதியது என்றால் பாதுகாபப்பை இப்போதிருந்தே பலப்படுத்த வேண்டும்.1. Sequrity Update களை நிறுவுங்கள்.உங்கள் புதிய கணினியில் விண்டோஸ் நிறுவிய உடனே
Tuesday, July 21, 2009
பென் டிரைவின் ஐகான் படத்தை மாற்றுவது எப்படி?
நீங்கள் பென் ட்ரைவினை ஒவ்வொரு முறை சொருகும் போதும் கணினியில்அதற்கான ஐகான் ஒன்று எப்போதும் போல தோன்றும். இதை பார்த்து பார்த்துசலிப்படைந்து விட்டீர்களா? இந்த படத்தை மாற்றி உங்களுக்கு பிடித்த படத்தை எப்படி வைப்பது என்று பார்ப்போம்.1. முதலில் உங்களுக்கு பிடித்த படத்தை தேர்வு செய்துவிட்டு அதை ஐகானாக மாற்றுங்கள்.இதற்கு IconSushi என்ற இலவச மென்பொருள் உதவும். இது பல வடிவங்களிலிருந்து ஐகானாக மாற்றுகிறது
Tuesday, July 14, 2009
உங்கள் கணினியை ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ்களில் சோதிக்கலாம்!
உங்கள் கணினியில் வைரஸ்களின் தொல்லை வந்தால் நீங்கள் கண்டிப்பாய்ஒரு ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை நாடுவீர்கள். ஆனால் உங்களின் ஆன்ட்டிவைரஸ் மென்பொருள் எல்லாவிதமான வைரஸ்களையும் அழித்துவிடும் என்று சொல்ல முடியாது.வேறு ஒன்றை உபயோகப்படுத்த வேண்டும் என்றால் பழையதை நீக்கி புதியதை நிறுவ வேண்டும். இப்படி இருக்கும் போது ஒரே நேரத்தில் நான்கு ஆண்டிவைரஸ் மென்பொருள்களை நிறுவாமலே இயக்கலாம் என்றால் உங்களுக்கு எவ்வளவு
Wednesday, July 8, 2009
பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்
பங்குச்சந்தை என்றாலே நிறைய பேர் அது ஆபத்தான விஷயம் என்றுஒதுங்கி விடுகிறார்கள். எனக்கும் சில வருடங்களாகவே பங்குச்சந்தையில்பணத்தைப்போட்டு நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.லாபம் வரவில்லை என்றாலும் அதைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டும்என்ற ஆசை அதிகமிருந்தது.எனவே Pan Card ( நிரந்தர வருமானக் கணக்கட்டை ) விண்ணப்பித்து வாங்கியும்Appllo Sindhuri என்ற தரகு நிறுவனத்தில் டீமேட் கணக்கு ( Demat Account
Monday, July 6, 2009
உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப்பது எப்படி ?
ஒவ்வொரு வலைத்தளங்களில் மேயும் போது அவற்றின் முகவரி இருக்கும்Address bar இல் அவர்களின் சிறிய லோகோ ( Logo ) இடம் பெற்றிருக்கும். அதே போல அந்த தளத்தின் தலைப்பு இடம்பெறும் வலை உலவியின் டேப் இல் கூட அந்த லோகோ இடம் பெற்றிருக்கும். இதனைத்தான் Favicon அல்லது Logo என்று சொல்வார்கள். என்னுடைய வலைப்பக்கத்தில் கூட நீங்கள் பார்க்கலாம்.இதனை உங்கள் வலைப்பக்கத்தில் எப்படி இடம் பெறச்செய்வது எப்படி என்று
Sunday, July 5, 2009
அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்தமுக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல்Format செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை.வலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த கோப்புகளை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்தமென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம்
Thursday, July 2, 2009
பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி?
பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது சில நேரம் கீழ்க்கண்ட பிழைச்செய்தியைக் காட்டும்.
"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk"
என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்கு வைரஸ்
Monday, June 29, 2009
எந்த கோப்பிலிருந்தும் ஐகான் பெற மென்பொருள்
நிரலாக்கம் ( Programming ) செய்யும் அல்லது வலை வடிவாக்கம் (Web Designing ) செய்யும் நண்பர்களுக்கு ஐகான்களின் தேவை கண்டிப்பாக உண்டு. சில தளங்களில் ஐகான்கள் இலவசமாகவும் சிலவற்றில் கட்டணத்திற்கும் கிடைக்கின்றன. ஆனால் இதிலிருந்து மாறுபட்டு எந்த பயன்பாட்டு கோப்பிலிருந்தும் ( Exe Files ) மற்றும் DLL கோப்பிலிருந்தும் அவற்றின் ஐகான்களை நீங்கள் பெறலாம். அதற்கு தேவையான ஒரு மென்பொருள் தான் இது. கீழே
Wednesday, June 10, 2009
உங்கள் வலைத்தளத்திற்கு சிறந்த விருதுகள் வேண்டுமா?
நீங்கள் வைத்துள்ள வலைத்தளங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்கும் தளங்கள் இணையத்தில் உள்ளன. அவை உங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பு, பார்வையிடுவோரின் எண்ணிக்கை, சிறந்த கருத்துகள், படைப்புத்திறன் மற்றும் சில கூறுகளை வைத்து அளவிடப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த தளங்களில் உள்ள படிவத்தை நிரப்பி உங்கள் தளத்தையோ அல்லது நண்பரின் தளத்தையோ பரிசீலனைக்கு அனுப்பலாம்.1. Webby Awards.இது தான் இணையத்தின்
ஆப்பிளின் வலை உலவி சபாரியின் புதிய பதிப்பு 4.0
இன்று ஆப்பிள் நிறுவனம் தனது வலை உலாவியான சபாரியின்மேம்படுத்தப்பட்ட 4.0 பதிப்பை வெளியிட்டுள்ளது. இன்றையவலை உலாவிகளுக்கு இடையே நடக்கும் கடும் போட்டிகளைசமாளிக்கும் விதமாக தனது சபாரியை தந்துள்ளது.கவர்ச்சிகரமான தோற்றம், எளிமையான விண்டோஸ்க்கு ஏற்றவடிவமைப்பு, அதிவேகமான பக்கங்களை திறக்கும் திறன், அதிகமெனுக்கள், டூல் பார்கள் போன்றவை இல்லாமை கண்களுக்குஎளிமையாக உள்ளன. இதில் உள்ள Nitro Engine இன்
Tuesday, June 9, 2009
அதிரடி விலைக்குறைப்பில் புதிய ஆப்பிள் ஐபோன் 3GS
ஆப்பிள் நிறுவனம் iPhone - இன் புதிய மாடலை வெளியிட்டுள்ளது.இதற்கு iPhone - 3GS என்று பெயரிட்டுள்ளது. இதில் S என்பதுவேகத்தைக் குறிக்கிறது. ( Speed ). முந்தைய அலைபேசிகளின்விலையை விட பாதியாக குறைத்துள்ளது. பழைய ஐபோனின்விலையை Rs. 5000 ஆக குறைத்துவிட்டார்கள். இவை 19 ஆம்தேதியிலிருந்து சந்தைக்கு வருகிறது. இதனால் எல்லோரும்வாங்கும் போனாக ஐபோன் மாறுகிறது.விலை :iPhone 3GS 16 Gb - 10,000iPhone 3GS 32
Monday, June 8, 2009
வலைத்தளம் உருவாக்க 30 இலவச மென்பொருள்கள்
(Nvu Web Editor )HTML அடிப்படை இல்லாமல் வலைப்பக்கங்களை உருவாக்குவதுகொஞ்சம் சிக்கல் தான் . பலர் HTML அடிப்பதற்காக நோட்பேட் ( Notepad ) மென்பொருளை உபயோகிப்ப்பார்கள். ஆனால் அதை விடசிறந்த மென்பொருள்கள் ( Web Editors ) இலவசமாக பல உள்ளன. இவை முக்கிய வரிகளை ( Syntax ) வண்ணமிட்டுக்காட்டுகின்றன. மேலும் Wysiwyg ( What you see is What you get ) தன்மை கொண்டவை . அதாவது மைக்ரோசாப்ட் வோர்ட் மென்பொருளை
Wednesday, June 3, 2009
உங்கள் வலைப்பதிவில் எளிய மெனு உருவாக்கலாம் வாங்க!
சில வலைப்பதிவுகளில் தலைப்புக்கு கீழே ஒரு Navigation மெனு பார் வைத்திருப்பார்கள். அதிலிருந்து சில பக்கங்களுக்கு இணைப்பு கொடுத்திருப்பார்கள் (Link). இதை உருவாக்க எங்கேயும் Javascriptகோடிங் தேடி அலைய வேண்டியதில்லை.பிளாக்கர் லேயே ஒரு வசதி உள்ளது.1.உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து Layout பிரிவிற்கு செல்லுங்கள்.2. Add a Gadget -> Text என்பதை தேர்வு செய்யுங்கள்.3. உங்களுக்கு வேண்டிய தலைப்பை
Saturday, May 30, 2009
Autorun.inf வைரஸ் நீக்கும் பயனுள்ள எளிய மென்பொருள்
Autorun.inf கோப்புகள் என்றால் என்ன? இந்த கோப்புகள் CD / DVD மற்றும் USB drive கள் கணினியில் உள்ளே நுழைத்தவுடன் தானாகவே இயங்குமாறு செய்யஎழுதப்படும் கோப்புகளாகும். இவை தானாகவே அந்த கோப்பில் எழுதப்பட்டுள்ள முக்கிய பயன்பாட்டுக்கோப்பை (Application or Exe )இயக்கிவிடும். ஒரு எளிய autorun.inf கோப்பானது இப்படி இருக்கும்.[autorun] open=autorun.exeicon=autorun.icoஇது என்ன வைரஸா ?
Friday, May 29, 2009
கூகுளின் புதிய வசதி : எந்த வலைப்பக்கத்திலும் தமிழில் அடிக்கலாம்
நீங்கள் வலைப்பக்கத்தில் உலவும் போது எங்கேயாவது தமிழில்தட்டச்சு செய்ய வேண்டி இருந்தால் கூகுளின் Indic Translate அல்லது வேறு எதாவது தமிழ் உரை மாற்றிகளை கொண்டுபயன்படுத்துவீர்கள். இப்போது கூகிள் எந்த பக்கத்திலும் தமிழ்மொழியில் அடிக்குமாறு ஒரு புதிய வசதியை வெளியிட்டுள்ளது. இதனைக்கொண்டு நீங்கள்,1. தமிழில் மின்னஞ்சல் அடிக்கலாம்.2. Google Search இல் தேடலாம்.3. தமிழில் உரையாடலாம் (chat )4. பிற சமுக
Thursday, May 28, 2009
கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்
கணினியில் செய்கிற தொடர்ச்சியான செயல்களை நாம் படமாக எடுத்துக்கொள்ளலாம். எதாவது ஒரு சேவை அல்லது பொருள்களை காட்சிப்படுத்த அல்லது விளக்க இது உதவும். எதாவது மென்பொருள் நிறுவும் போது அதை மற்றவர்களுக்குப்புரியும் படியாக பயன்படுத்தலாம்.மேலும் இதனை உங்களுக்கு வேண்டிய வலைப்பக்கத்தில் பயன்படுத்தலாம்.இணையத்தில் திரையைப்படம் பிடிக்கும் மென்பொருள்கள் இலவசமாக நிறைய கிடைக்கின்றன.எங்கேயும் தேடாமல் இங்கிருந்தே
Saturday, May 2, 2009
கணினியில் உட்காரும் போது சில யோசனைகள்
நாள் தோறும் கணினியில் பணிபுரிபவர்கள் சில விசயங்களைகவனிப்பதில்லை. விசைப்பலகை மற்றும் மவுஸ் எப்படிஉபயோகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவதில்லை.இதை சாதாரணமாக நினைத்தால் பின்னாளில் பெரியஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். கார்பல் டன்னல் சிண்ட்ரோம் (Carpal tunnel Syndrome) என்ற நோய் இதனால்ஏற்படுகிறது தெரியுமா? இந்த நோய் வந்தவர்களுக்கு செய்யப்படும்சிகிச்சை பற்றிய படங்களை கீழே பாருங்கள்தவறாக
Wednesday, April 29, 2009
விசுவல் பேசிக் – DLL கோப்புகளை Register செய்வது எப்படி ?
விசுவல் பேசிக்கில் அதனோடு இணைந்த பல Active X Control கள்உள்ளன. அவை விசுவல் பேசிக்கை நிறுவும் போதே முறைப்படி பதிவு (Register) செய்ய்ப்பட்டு விடும். உதாரணத்திற்கு,Microsoft Winsock control - mswinsck.ocxMicrosoft Windows common controls -mscomctl.ocxஇது போல பல உள்ளன.நாம் பயன்பாட்டை மேலும் மெருகேற்ற வெளியில் கிடைக்கும்சில ActiveX Control களை பயன்படுத்தலாம். ஆனால் அவை நிறுவும் வகையில் இல்லாமல் “
Sunday, April 26, 2009
உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்!
நீங்கள் gmail அல்லது yahoo.co.in மெயில் கணக்கை பயன்படுத்துவராக இருந்தால்,உங்கள் மொபைல் போனில் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் பற்றிய அறிவிப்பைப் பெறலாம்.நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் அறிவிப்பில் யார் அனுப்பியது என்றும் மின்னஞ்சலின் பொருளும் (Subject)மொபைல் போனில் வந்து சேர்ந்து விடும் . நீங்களும் உங்கள் கணக்கில் ( Mail Account) நுழைந்து உடனடியாக பார்த்துக்கொள்ளலாம்.இந்த
Friday, April 24, 2009
MS-Access கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்க இலவச மென்பொருள்
சிலர் அக்சஸ் கோப்புகளுக்கு ரகசியச்சொல் ( Password ) அமைத்து வைத்திருப்பார்கள். நாம் அதனை திறக்க முற்பட்டால் ரகசியச்சொல் இன்றி உள்ளே விட மாட்டார் அண்ணன் Microsoft. அதனை எளிதாக மீட்க மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைக்கிறது. கீழே உள்ள முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.http://www.nirsoft.net/utils/accesspv.htmlதரவிறக்கம் செய்யப்பட்ட கோப்பை விரித்து அதில் உள்ள பயன்பாட்டுக்கோப்பை (Application
Wednesday, April 8, 2009
எளிய தமிழில் கணினி புத்தகங்கள்
விண்டோஸ் எக்ஸ்பீhttp://www.scribd.com/doc/3068477/Tamil-Computer-Book-Windows-XPபோடோஷாப்http://www.scribd.com/doc/3068069/Tamil-Computer-Book-Adobe-Photo-Shopவலை வடிவமைப்புhttp://www.scribd.com/doc/3068410/Tamil-Computer-Book-Web-Designகணினி அறிவியல் தொழில்நுட்ப அகராதிhttp://www.scribd.com/doc/2421484/Tamil-Technical-Computer-Dictionaryலினக்ஸ்http://www.scribd.com/doc/3068327/
Subscribe to:
Comments (Atom)