Saturday, October 30, 2010

விளையாடலாம் வாங்க! வீரதீர Claw விளையாட்டு

விளையாட எத்தனையோ விளையாட்டுகள் தற்பொழுது வந்து கொண்டிருந்தாலும் சில விளையாட்டுகள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளன. அப்படியொரு விளையாட்டு தான் Monolith productions நிறுவனத்தின் படைப்பான Claw game ஆகும். வீரதீர சாகசங்கள் இந்த விளையாட்டில் நிறைந்திருக்கின்றன. சிறுவர்களுக்கு விட்டுவிட்டால் பொழுது போவதே தெரியாது.இந்த விளையாட்டில் 14 நிலைகள் உள்ளன. ஒவ்வொன்றாகத்தான் கடந்து செல்ல முடியும். இதுவும் Arcade

Thursday, October 28, 2010

ஜாவா புரோகிராமிங்-மாணவர்களுக்கு உதவும் எளிய நிரல்கள்

ஜாவாவில் எளிய முறையில் சில கணிதங்களை பயன்படுத்த நிரல்களை கீழேதந்துள்ளேன். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். 1.ஒரு முழு எண்ணில் உள்ள எண்களின் கூடுதல் கண்டறிய...import java.io.*;public class sum{public static void main(String[] args)throws IOException{DataInputStream in= new DataInputStream(System.in);int n=0,n1,n2=0,i,x;System.out.Println(“Enter the number”);n=Integer.parseInt

Wednesday, October 27, 2010

வரப்போகிறது விண்டோஸ் 8 இயங்குதளம் !

கடந்த வருடம் அக்டோபர் மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 7 இயங்குதளம் நல்ல வளர்ச்சியில் சென்று கொண்டுள்ளது. இதுவரை 240 மில்லியன் பதிப்புகள் விற்று தீர்த்திருப்பதாக நிறுவனம் சொல்லியுள்ளது. இதற்கு முன்பை விட அழகிய தோற்றத்துடனும் வேகத்துடனும் விண்டோஸ் 7 உருவாக்கப்பட்டதே ஆகும். பயன்படுத்தவும் எளிமையாக உள்ள இந்த இயங்குதளத்தின் அடுத்த பதிப்பு எப்போது என்பதே பலரின் கேள்வியாய்

Tuesday, October 26, 2010

நம் கண்கள்


நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனாலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த
ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.

1. கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு நம் கண்களுக்கு பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடிவமைப்பார்கள்.

3. 20:20:20 விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.

பொதுவாக ஒரு நிமிடத்தில் நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.

ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின்
திரும்ப பணியாற்ற வரவும்.

3. இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

4. தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

5. தேயிலை பைகள்: பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப்பட்ட துணியை, அலுவலகத்திற்குச் செல்கையில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்தவுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்கவும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.

6. வைட்டமின்கள்: ஊட்டச் சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.
கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும்.

PDF பைல் தயாரிக்க இலவச மென்பொருள்

PDF பைல் தயாரிக்க வேண்டுமா? இங்கே சென்று http://www.dopdf.com/ இறக்குமதி செய்து கொள்ளுங்கள்.

Thursday, October 14, 2010

புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் - விண்டோஸ் போன் 7

மைக்ரோசாப்ட் நிறுவனம், மொபைல் போனுக்கான புதிய ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தினை அண்மையில், தன்னுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல்பாடு களில் இது ஒரு பெரிய சாதனை என அனைவரும் எண்ணுகின்றனர். மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு இதனை வழங்கும் முன், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் மாடல்களில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் சோதனை செய்து பார்க்கப்பட்டது.

பல்வேறு சோதனைகள் 35 லட்சம் மணி நேரப் பயன்பாட்டில் மேற்கொள்ளப் பட்டன. வெகு விரைவில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் மொபைல் ஃபோன்கள் நமக்குக் கிடைக்க இருக்கின்றன. ஒரு மாதத்திற்குள் இவை வெளிவரலாம். எந்த நிறுவனம் நமக்கு இந்த புதிய அனுபவத்தினைத் தரப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

AVG Antivirus Free Edition 2011

ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு என்ற அளவில் மிகவும் பிரபலமான ஒரு நிறுவனம் ஏவிஜி நிறுவனம் ஆகும். கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்புடன், இலவசமாகப் பயன்படுத்தவும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, இந்த நிறுவனம் தந்து வருகிறது. அந்த வரிசையில், அண்மையில் இதன் மேம்படுத்தப்பட்ட இலவச தொகுப்பு வெளியாகியுள்ளது.

'AVG Antivirus Free Edition 2011' என அழைக்கப்படும் இந்த தொகுப்பில், வைரஸ் எதிர்ப்பு தொகுப்பு, ஸ்பைவேர் தொகுப்பு,இமெயில் ஸ்கேனர்,ரெசிடென்ட் ஷீல்ட் என்னும் பாதுகாப்பு வளையம், இணைய தள தொடர்புகளை அலசிப் பார்த்து எச்சரிக்கும் லிங்க் ஸ்கேனர், ஆண்ட்டி ரூட் கிட் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் ஸ்கேனர் ஆகியவை அடங்கியுள்ளன. இதற்கு முன் வெளியான ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளுடன் இணைந்து இயங்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

இதனை இலவசமாகத் தரவிறக்கம் செய்திட http://free.avg.com/in-en/download-avg-anti-virus-free என்ற இணைய முகவரிக்குச் செல்லவும்.

Thursday, October 7, 2010

விசுவல் பேசிக்கில் அசத்தலான புதிய Grid கண்ட்ரோல் உருவாக்க...

விசுவல் பேசிக் ஒரு அருமையான நிரலாக்க மொழி. எளிதான முறையில் பலவித சாப்ட்வேர்களை இதில் உருவாக்கலாம். நிரலாளர்களின் விருப்பமாக இருக்கும் இதில் அவ்வளவாக அசத்தலான தோற்றத்தை உருவாக்க கண்ட்ரோல்கள் இல்லை.இப்போது vb.net வந்ததும் சிலர் அதற்கு மாறிவிட்டார்கள்.ஆனால் விசுவல் பேசிக்கிலேயே ஒருசில கண்ட்ரோல்களை இணைப்பதன் மூலம் நாம் உருவாக்கும் சாப்ட்வேரை மேலும் பயனுள்ளதாகவும் அழகாகவும் மாற்றலாம். இப்போது நாம்

Saturday, October 2, 2010

கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள்

கம்ப்யூட்டரைப் பராமரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அந்த வகையில் அண்மையில் கிடைக்கும் ஒரு தொகுப்பு மிகப் பயனுள்ள வகையில் பல பராமரிப்பு பணிகளை, எளிதாக மேற்கொள்கிறது. இதனை இயக்க, நமக்கு தொழில் நுட்ப உத்திகள் எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இதன் பெயர் ஸ்லிம் கிளீனர் (Slim Cleaner). இதன் சோதனைத் தொகுப்பு தான் இப்போது வந்துள்ளது. இருப்பினும் செயல்பாட்டில் எந்த குறையும் இல்லாமல் இது பயனுள்ள முறையில் இயங்குகிறது.

இந்த வகையில் ஏற்கனவே பலருக்குத் தெரிந்த தொகுப்பான CCleaner போலவே இந்த புரோகிராமும் செயல்படுகிறது. சுத்தப்படுத்துவதற்கென நீக்கப்படும் டேட்டாவினை Windows, Applications மற்றும் Browsers என்ற மூன்று பிரிவுகளில் காட்டுகிறது. இந்த டேப்கள் மேலும் சில பிரிவுகளாக (Windows History, Productivity மற்றும் FileSharing) அமைக்கப் படுகின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் ஒரே புரோகிராமில் உள்ள தேவையற்ற டூப்ளிகேட் டேட்டாக்கள் காட்டப்பட்டு நீக்கப்படுகின்றன. Analyze என்ற பட்டனில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் சிஸ்டம் முழுமையாக ஸ்கேன் செய்யப்படுகிறது. இறுதியில் ஒவ்வொரு புரோகிராம் பிரிவிலும், நீக்கப்பட வேண்டிய டேட்டா காட்டப்படுகிறது. இப்படி ஒவ்வொரு பிரிவிலும் டேட்டாவினைப் பார்த்திடாமல், நேரடியாகவே அனைத்து வேண்டாத டேட்டாக்களையும் நீக்கும் வழியும் உள்ளது.

இந்த புரோகிராமினை http://slimcleaner.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக, டவுண்லோட் செய்திடலாம்.