Wednesday, May 14, 2014

கடவுள்முறை( GOD MODE ) Win7

 விண்டோஸ் 7 டிப்ஸ்

விண்டோஸ் 7 ல் கீழ்காணும் பெயரில் போல்டர் புதியதாக உருவாக்கினால் , அது உங்களை கடவுள்முறைக்கு( GOD MODE ) எடுத்துச்செல்லும்.. அதில் அனைத்து விண்டோஸ் அமைப்புகள்(Settings) அனைத்தும் காட்டப்படும். உங்களுக்கு வேண்டியவற்றை தேர்வு செய்துகொள்ளலாம்..அதாவது கிட்டதட்ட Control Panelல் வரும் அனைத்து அமைப்புகளும் ஒரே இடத்தில் காட்டப்படும்..

GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

Wednesday, April 9, 2014

அல்ட்ரா ஹச்.டி(UltraHD)

இந்த வீடியோ தொழில்நுட்பம் கீழ்காணும் பெயர்களில் அழைக்கப்படுகின்றது,
Ultra HD television, UltraHD, UHDTV, or UHD.

இந்தவகை வீடியோ வகையில் 4K UHD ( 2160p ( Resolution 3840 × 2160 ) ) and 8K UHD ( 4320p (Resolution 7680x4320 ) ) ஆகிய பிரிதிறன்(Resolution)  உள்ளது. 

இதுவரை நாம் பார்த்த 720p(HD), 1080p(FULL HD) ஆகிய பிரிதிறனை விட அதிகம்.இந்த வீடியோ தொழில்நுட்பதில் மிக அதிக துல்லியத்துடன் வீடியோவை பார்க்கலாம். இதற்கென பிரத்யோக டிவிகள் வந்துள்ளன அவைதான் அல்ட்ரா ஹச்.டி டி.வி( ULTRA HDTV). HD தொழில்நுட்பம் சென்று Ultra HD தொழில்நுட்பம் விரைவில் வர உள்ளது. டிஜிடல் சினிமா இந்த தொழில்நுட்பத்தை உபயோகிக்கின்றது.




Saturday, April 5, 2014

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-11


Batch - தொகுதி
Batch Processing - தொகுதிச் செயலாக்கம்
Batch Total - தொகுதிக் கூட்டல்
Basic Linkage - அடிப்படை ணைப்பு
Batten System - பேட்டன் அமைப்பு
Battery Backup - மாற்று மின்கல அடுக்கு
Baudot Code - பாடாட் குறிமுறை
bebugging - பிழை விதைத்தல்
Beep - விளி
Bench mark Problems - மதிப்பீட்டு நிரல்கள்
Bench mark tests - மதிப்பீட்டு சோதனைகள்
Bench Marking - மதிப்பீட்டு செய்தல்
Beta testing - இரண்டாம் கட்ட சோதனை
Bias - சாய்வு, சார்வு
Bidirectional - ருதிசை
bidirectional printer - ருதிசை அடிப்பு அச்சுப்பொறி
bifurcation - ருகூறாக்கம்
binary - ரும
binary arithemetic - ருமக் கணக்கீடு
binary code - ருமக் குறிமுறை

Tuesday, April 1, 2014

மெமரி அளவுகள் - பிட் முதல் யோட்டா வரை

 1 பைட்(1 byte ) = 8 பிட்ஸ்(bits( 0 & 1's))

 ஒரு கிலோ பைட் ( 1 KiloByte)= 1,024 பைட்ஸ்(1024 bytes)

ஒரு மெகா பைட் (1 megabyte)=1,024 கிலோ பைட்ஸ்(1024 KB)

ஒரு கிகா பைட் (1 gigabyte)=1,024 மெகா பைட்ஸ்( 1024 MB)

ஒரு டெரா பைட் (1 terabyte)= 1, 024 கிகா பைட்ஸ்(1024 GB)

ஒரு பெட்டா பைட் (1 petta byte) = 1,024 டெரா பைட்ஸ்(1024 TB)

ஒரு எக்ஸா பைட் (1 exa byte)=1,024 பெட்டா பைட்ஸ் (1024 PB)

ஒரு ஸெட்டா பைட் (1 zetta byte)=1,024 எக்ஸா பைட் ஸ்(1024 EB)

ஒரு யோட்டா பைட் (1 yotta byte(YB)) = 1,024 ஸெட்டா பைட்ஸ்( 1024 ZB)

எந்திரனில் ரஜினி ரோபோ 1 ஸெட்டா பைட் மெமரியை கொண்டுள்ளதாக காட்டப்பட்டது..அதையும் தாண்டி யோட்டோபைட் உள்ளது. ஓகே எந்திரன் பாகம்-2 ல் இதை செல்லுவார்களோ?!

Monday, March 31, 2014

எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்


ஃபேஸ்புக் (Facebook)  பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவதால் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் பேஸ்புக் பயன்படுத்துவோர் விடுவதாக இல்லை. இப்போது ஒரு புதிய ட்ரிக் மூலம் MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.




நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் தெரியாமல் பேஸ்புக்

Sunday, March 30, 2014

ப்ளாக்கரில் நீளமான விட்ஜெட்களை Scrolling முறையில் வைப்பது எப்படி?


நமது ப்ளாக்கில் பல வகையான விட்ஜெட்களை (Widgets) வைத்திருப்போம். உதாரணத்திற்கு Blog Archive, Labels, Popular Posts, Recent Posts போன்றவற்றைச் சொல்லலாம். இவைகளை வலது ஒர சைட்பாரில் (Sidebar) வைப்போம். குறைந்த பதிவுகள் உடையவர்களுக்கு Labels மற்றும் Blog Archive பகுதிகள் சரியான அளவில் இருக்கும். இதே அதிக வருடங்கள் எழுதி வரும் பதிவர்களின் ப்ளாக்கில் இவை நீளமாகத் தோன்றும். மேலும் இடத்தையும் அடைத்துக்

Friday, March 28, 2014

ஜிமெயிலில் விளம்பர மெயில்களை படங்களாகப் பார்க்க Preview வசதி


நாள்தோறும் பல வகையான விளம்பரங்கள் நமக்கு மின்னஞ்சலில் வருகின்றன. அதில் சில தளங்களில் நாமாகவே இணைந்து தினசரி சலுகைகள் மற்றும் விளம்பரங்களை மின்னஞ்சலில் பெறுவோம். உதாரணமாக Ebay, Magazine sites, Domain Hosting, Matrimonial, Shopping deals போன்றவை. இவைகள் Promotion Mails எனப்படும். ஆனால் பல சமயங்களில் நாம் இணையாத சில தளங்களிலிருந்தும் மின்னஞ்சல் வந்து நம்மை தொல்லை செய்யும்.  சிரமப்பட்டு அழித்தாக

Monday, March 24, 2014

தமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க




ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் (Facebook, Google+, Twitter) ஓட்டுப்பட்டைகளும் மற்றும் திரட்டிகளின் (Indli, Tamil10) ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில்  பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் நமது ப்ளாக்கிற்கு வருவார்கள். வழக்கமாக ஓட்டுப்பட்டைகள் நேர்க்கோட்டு வரிசையில் (

Thursday, March 20, 2014

எல் ஜி-G ஸ்மார்ட் வாட்ச்

எல் ஜி-G ஸ்மார்ட் வாட்ச்

ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வேலை செய்யும் ஸ்மார்ட் வாட்சை எல் ஜி நிறுவனம் தனது இரண்டாம காலாண்டில் வெளியிட முடிவு செய்துள்ளது.இதே போல் HTC, Samsung, Asus, SONY, Motorola(MOTO 360) நிறுவனங்களும் தங்களுடைய ஸ்மார்ட் வாட்ச்ஐ வெளியிட முனைப்பாக செயல்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் அனைவரின் கைகளையும் ஸ்மார்ட்  வாட்சுகள் அலங்கரிக்கும் என்பதில் ஐயமில்லை. 






வாட்சிலேயே ஆன்ட்ராய்ட் இயங்குதளம்(Operating System) இருப்பதால் பாடல் கேட்பது, இன்டர்நெட், புகைப்படங்கள், வீடியோ, மெயில் பார்ப்பது என பல பரிணாமங்களுடன் வர காத்திருக்கின்றது ஸ்மார்ட் வாட்ச்கள்.

Monday, March 17, 2014

Manager – சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள்


சிறிய நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் வரவு செலவுக் கணக்குகளை நோட்டுகளில் எழுதி அல்லது Excel மென்பொருளில் ஏற்றி சரிபார்த்து வருவார்கள். இல்லையெனில் அக்கவுண்டிங் மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் மென்பொருளை Accounts தெரியாதவர்களுக்கு எளிமையாக புரிந்து விடாது. எளிமையாகவும் இலவசமாகவும் அக்கவுண்ட்ஸ் மென்பொருள் கிடைத்தால் நன்றாக இருக்குமல்லவா?




அது தான் Manager என்ற

Saturday, March 15, 2014

கூகிள் அலர்ட்

Google Alert  இந்த சேவையின் மூலம் உங்களுக்கு தேவையான தேடுதல் தகவல்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பி விடும்.நீங்கள் உங்களுக்கு தேவையான தேடு வார்த்தையை(Search query)இங்கே பதிவு செய்து விட்டால் போதும் எப்போதெல்லாம் உங்கள் தேடு வார்த்தை பற்றிய செய்தி கூகிளுக்கு தெரிகின்றதோ அதை அப்படியே சேகரித்து உங்கள் இமெயிலுக்கு அனுப்பிவிடும். மேலும் நீங்கள் வீடியோ, புத்தகம், செய்தி, பிளாக் போன்ற வகைகள் படி செய்தி தரும்படி கூகுளை கேட்கலாம்.

முயற்சி செய்து பாருங்கள்..லிங்க்:
http://www.google.com/alerts

AUXUS NUCLEA N1 @12375 INR



புதிய AUXUS NUCLEA N1 சலுகை விலையில்( 12,375 INR ) + இலவச அக்சசரிஸ்(accessories)

மார்ச் 15 முதல் 17  வரை இந்த சலுகை உள்ளது. மோட்டோ ஜிக்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது.


  • 5 இஞ்ச் FULL HD திரை
  • 1.5GHZ QUAD CORE புராசசர்
  • 13MP/8MP  கேமரா
  • கொரில்லா கிளாஸ் 3
  • 1GB RAM
  • 8GB உள்கட்ட நினைவகம்
  • இரட்டை சிம் வசதி
  • ஆன்ட்ராய்டு 4.2


லிங்க்:
http://www.ebay.in/itm/Auxus-Nuclea-N1-FHD-Display-8GB-Version-GorillaGlass-1-5GHz-QuadCore-Turbo-PROMO-/141212052785?

Friday, March 7, 2014

Indoor Maps - பிரபல கட்டிடங்களின் உள்வரைபட அமைப்பினை கூகிள் மேப்பில் பார்க்க


கூகிள் மேப்ஸ் (Google Maps) சேவை பல நாடுகளின் தெளிவான வரைபடங்களைப் பார்க்க உதவும் ஒன்றாகும். இதன் மூலம் போக்குவரத்து, நகரங்கள், கடைகள் போன்ற பலவற்றை வரைபடத்தில் எளிதாகப் பார்த்துக் கொள்ள முடியும். இதிலிருக்கும் ஒரு வசதி தான் Indoor Maps.

இதன் மூலம் நகரத்தில் உள்ள முக்கியமான / பிரபலமான கட்டிடங்களின் உள் வரைபடத்தினைத் தெளிவாக பார்க்க முடியும். இதில் ஷாப்பிங் மால்கள், ரயில் நிலையங்கள், ஏர்போர்ட்,

Tuesday, February 25, 2014

நோக்கியா + ஆன்ட்ராய்டு

புதிய முயற்சியாக ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய நோக்கியா X, நோக்கியா X + ஆகிய இரண்டு 4 இன்ச் போன்களையும், நோக்கியா XL என்ற 5 இன்ச் போனையும் அறிமுகப்படுத்தவுள்ளது, இதன் விலை சுமார் 7500 ரூபாயில் தொடங்கி 10,000 ரூபாய் வரை இருக்கும் என அறிவித்துள்ளது.

http://www.gsmarena.com/nokia_announces_androidapp_running_nokia_x_and_nokia_x-news-7909.php

Sunday, February 23, 2014

யு டியூப் டிவி( Youtube TV )


யு டியூப்ல்(youtube) உள்ள வீடியோக்களை நீங்கள் உங்கள் லேப்டாப் அல்லது ஸ்மார்ட் டிவி மூலம் பிளே(play) செய்து பின் உங்கள் மொபைல் மூலம் அவற்றை கையாளலாம். அது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

உங்கள் லேப்டாப்(laptop) அல்லது ஸ்மார்ட் டிவியில்(Smart TV) கீழ்காணும் முகவரிக்கு செல்லவும்( வெப் பிரவுசர் மூலம் ),
https://www.youtube.com/tv

பின்பு இடது புறத்தில் Settings உள்ள ஐக்கானை கிளிக் செய்யவும்.

கீழ்காணும் விண்டோ காட்டப்படும்.அதை கிளிக் செய்யவும்


அதில் உங்கள் டிவைசை(device( tablet, smart phone, laptop ) இணைக்க கோடு(Pair code) காட்டப்படும். மேலும் ஒரு லிங்க்(youtube.com/pair) கொடுக்கப்படும்.


இந்த லிங்கை(youtube.com/pair) உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள பிரவுசர் மூலம் திறக்கவும். அது  உங்களிடம் லேப்டாப்பில் அல்லது ஸ்மார்ட் டிவியில் காட்டப்பட்ட கோடினை(pair code) தரும்படி கேட்கும்.
அவ்வாறு நீங்கள் அந்த கோடை தரும் பட்சத்தில் லேப்டாப் அல்லது ஸ்மார்ட் டிவின் யு டியூப் வீடியோகளை நீங்கள் மொபைல் போனில் இருந்து கையாளலாம்(அடுத்த வீடியோக்கு செல்வது, வீடியோகளை நிறுத்த, பிளே(play) செய்ய, வீடியோகளை தற்காலிகமாக நிறுத்த).
அதாவது கிட்டதட்ட ஒரு ரிமாட் கன்ரோல் போல் உங்கள் ஸ்மார்ட் போனானது செயல்படும்.

இதற்கு தேவை இன்டர்நெட் இணைப்பு மட்டுமே.ஒரு டிவைசை இன்னொரு டிவைசுடன்(device) இணைத்து நாம் பயன்பெறுகின்றோம்.இந்த டெக்னாலேஜ்க்கு யுடியூப் லீன்பேக்( youtube leanback) என பெயர்.

Monday, February 17, 2014

படங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.


வேறு மொழிப்படங்கள் பார்க்கும் போது ஆங்கிலத்தில் சப்-டைட்டில் (Sub-titles) இருந்தால் மட்டுமே வசன உரையாடல்களை சிலரால் புரிந்து கொள்ள முடியும். இணையத்திலிருந்து டவுன்லோடு செய்யும் படங்களில் சப்-டைட்டில்கள் கூடவே வர வில்லையெனில் அதனை எப்படி பெறுவது என்று முன்பொரு பதிவில் எழுதியிருந்தேன்.

வேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது, பார்ப்பது எப்படி?

அடுத்ததாக படம் பார்க்கும் போது சில

Monday, February 10, 2014

கம்ப்யூட்டர் சரித்திரம்


1956ம் ஆண்டு, ஐ.பி.எம். நிறுவனம் தன்னுடைய IBM 305 RAMAC என்ற சிஸ்டத்தில் மிகப் பெரிய அளவிலான கொள்ளளவுடன் கூடிய ஹார்ட் டிஸ்கினை இணைத்து அறிமுகப்படுத்தியது. இந்த மிகப் பெரிய கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 5 எம்.பி( MB ). அப்போது அது உண்மையிலேயே மிகப் பெரிய அளவிலான திறன்தான். ஒரு எம்.பி டேட்டா கொள்ளளவிற்கு 10ஆயிரம் டாலர்( 10,000 USD) விலை எனக் குறிக்கப்பட்டது. இதன் திட அளவு இரண்டு ரெப்ரிஜிரேட்டர் அளவிற்கு இருந்தது. இதில் 24 அங்குல அளவுள்ள 50 பிளாட்டர்கள்(plotters) இருந்தன.

Thursday, January 30, 2014

புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் 'தமிழ் HD' வெளியீடு


தமிழ் HD வீடியோக்களை காண இந்த அப்ளிகேஷன் உதவுகின்றது.
தமிழ் HD குறும்படங்கள்,
 தமிழ் HD பாடல்கள்,
 தமிழ் HD படங்கள்(movies),
 தமிழ் HD மழழை பாடல்கள்,
 தமிழில் மொழிபெயர்த்த படங்கள்,
 தமிழில் அனிமேசன் படங்கள்(Animated Movies) என பல வீடியோக்களை காண உதவுகின்றது.

டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.tamilhd

இயங்கு தளம் - ஆன்ட்ராய்டு 2.1.X

அப்ளிகேஷன் அளவு - 690KB
பதிப்பு - 3.0


Monday, January 13, 2014

கம்ப்யூட்டர் சிரிப்பு





அப்பா: காதுல கம்மல் போட்ட.. புருவத்துல வளையம் போட்ட.. போட்டுட்டு பேசன்னு(fashion) சொன்ன சரினு விட்டுட்டேன்..இப்ப என்னாடான்னா பல்லுல புளு கலர் அடிச்சுட்டு வந்து நிக்குற.. கேட்டா புளுடூத்(bluetooth) னு சொல்லுற.ஒன்ன கம்ப்யூட்டர்  படிக்கவச்சது தப்பால போச்சு..??!!

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-10

backward chaining - பின்னோக்கு தொடரிணைப்பு
backward read - பின்னோக்கு வாசிப்பு
bad sector - கெட்ட துண்டம்
ball printer - உள்முக அச்சுப்பொறி
band - அலைவரிசை
band printer - பட்டை அச்சுப்பொறி
band width - பட்டை அகலம்
banked memory - நினைவக அடுக்கு
bar chart - பட்டை வரைபடம்
Bar Code - பட்டைக் குறிமுறை
bar printer - பட்டை அச்சுப்பொறி
bar-code scanner - பட்டைக் குறிமுறை வருடி
bare board - வெற்றுப் பலகை
base - அடி எண்
base 2 - அடி எண்( ரும )
base 8 - அடி எண் 8( எண்ம )
base 10 - அடி எண் 10( பதின்ம )
base 16 - அடி எண் 16( பதின்அறும )
Base Address - அடி முகவரி
baseband transmission - தாழ் அலைவெண் செலுத்தம்
baseline document - ஒப்புநோக்கு ஆவணம்

Tuesday, January 7, 2014

விரைவில் வருகிறது - நோக்கியா டேப்லெட்

 நோக்கியா லுமியா 2520 டேப்லெட்

  • 10.1இன்ச் FULL HD டிஸ்பிளே
  • பிராசசர்  - Qualcomm MSM8974 Snapdragon 800 
  • CPU - Quad-core 2.2 GHz Krait 400
  • மைக்ரோ சிம் கார்டு
  • Corning Gorilla Glass 2(ஸ்கிரீனில் கோடுகள் அதிகம் விழாமல் காக்கின்றது)
  • 6.7MP கேமரா
  • 2MP முன்பக்க கேமரா
  • 2GB RAM
  • உள்கட்ட நினைவகம் 32GB
  • microSD - 64GB
  • 4G
  • தோராயமான விலை ரூ.32,000
  • வண்ணம்:சிகப்பு,கருப்பு,அரக்கு,மஞ்சள்
  • ஆப்பரேட்டிங் சிஸ்டம் - Microsoft Windows RT

Wednesday, January 1, 2014

2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்






தமிழ் கம்ப்யூட்டரின் இனிய 2014 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..