Tuesday, December 24, 2013

ஆன்லைன் ரீசார்ஜ்





கீழ்காணும் வெப்சைட்டை உபயோகித்து மொபைல் ரீசார்ஜ்( Recharge ), DTH ரீசார்ஜ், இன்டர்நெட் பில்(bill) போன்றவற்றை ஆன்லைன் மூலமாக கட்டலாம்.

https://www.freecharge.in
http://www.rechargeitnow.com/

Tuesday, December 17, 2013

கூகிள் ப்ளஸின் கிறிஸ்துமஸ் சிறப்பு வசதிகள் - Auto Awesome Effects


கூகிள் ப்ளஸில் புகைப்படங்களை ஏற்றிப் பகிரும் போது தானாகவே சில புகைப்படங்களுக்கு குறிப்பிட்ட ஸ்பெஷல் எபெக்ட் (Special Effects) சேர்க்கப்படுவதை Auto Awesome Effects என்று சொல்வார்கள். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அதையொட்டிய விடுமுறைகள் வருவதால் இரண்டு அட்டகாசமான வசதிகளை இந்த Auto Awesome இல் சேர்த்துள்ளார்கள்.

1. Twinkle Effect – நீங்கள் சேர்க்கும் புகைப்படங்கள், எதாவது விளக்குகள் அல்லது

Saturday, December 14, 2013

Winamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று இலவச மென்பொருள்கள்


கணிணியில் பாடல்கள் கேட்பவர்களுக்கு Winamp Audio Player மென்பொருள் பற்றி தெரியாமல் இருக்காது. 1997 ஆம் வருடத்தில் வெளியான இந்த மென்பொருள் பாட்டு கேட்பதற்கென்றே பிரபலமான ஒன்றாக இருந்து வந்தது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு வெர்ஷன் கூட வெளியிட்டிருந்தார்கள்.


இதன் நிறுவனமான AOL வரும் டிசம்பர் 20 ந்தேதியோடு Winamp சேவையை நிறுத்தப் போகிறது. இனிமேல் இதற்கு எந்த வித Updates மற்றும் Support கிடைக்கப்

Thursday, December 12, 2013

கேப்சர் டெஸ்க்டாப்

உங்கள் டெஸ்க்டாப்பில்(desktop) நீங்கள் செய்யும் வேலைகளை வீடியோவாக பதிவு(capture) செய்ய வேண்டுமா கீழ்காணும் இலவச சாப்ட்வேர்(free software) உங்களுக்கு உதவும். இதில் நேரடியாக யூடிப்ல்(youtube) அப்லோட் செய்யும் வசதியும் உண்டு.



மேலும் சில,





Thursday, December 5, 2013

வருகிறது மோட்டோரோலா ஜி


மோட்டோரோலா மோட்டோ ஜி Motorola Moto G வரும் ஜனவரி 2014ல் இந்தியாவில் வெளியீடு.
  • பிராசசர்  - Qualcomm Snapdragon 400 processor with 1.2 GHz quad-core CPU
  • டிஸ்பிளே - 4.5 inches diagonal (11.3 cm) 1280 x 720 HD, 329 ppi
  • ஆப்பரேட்டிங் சிஸ்டம் - Android 4.3 (Jelly Bean) பின் நாளில் 4.4(Kit Kat) பதிப்புக்கு உத்திரவாதம்.
  • 5MP கேமரா
  • உள்கட்ட நினைவகம் 8/16 GB 1GB RAM
  •  கூகிள் டிரைவ் - Google Drive (50 GB storage)
  • விலை ரூபாய் 15000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 மோட்டோரோலாவை கூகுள் வாங்கிவிட்டதால் தரமான மொபைல் போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tuesday, December 3, 2013

Wi-Fi Direct என்றால் என்ன?

 Wi-Fi P2P என முதலில் அழைக்கப்பட்டது. இது பல Wi-Fi சாதனங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்துகொண்டு தகவல்களை பரிமாரிக் கொள்ள உதவுகின்றது. முக்கியமான விஷயம் என்னவென்றால் இதற்கு இணைய இணைப்பு தேவை இல்லை. சாதனங்களில் Wi-Fi Direct/Wi-Fi வசதி இருந்தாலே போதுமானது. 

மொபைல் போன்கள், பிரின்டர்கள்(printers), கேமரா, கம்ப்யூட்டர், விளையாட்டு சாதனங்கள்(PS3) போன்றவை ஒன்றோடு ஒன்று தங்களுக்குள் இணைந்து தகவல்கள்(datas), அப்ளிகேசன்கள்(applications), பைல்கள்(files) போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.

எதிர்காலத்தில் இந்த வசதி மூலம் வீட்டின் விளக்குகளை மொபைலின் மூலம் அணைக்கவோ எரியவைக்கவோ இயலும்..இதுபோல பல விஷயங்கள் இந்த தொழில்நுட்பத்தில் உள்ளன..வருங்காலம் இந்த தொழில்நுட்கத்தை உபயோகித்து பயன்பெறும் என்பதில் ஐயமில்லை..
இந்த பயனை குறிக்கும் வீடியோ இதோ..



Wi-Fi Direct சாதனம் WPA2™ என்னும் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் இயங்குவதால் தகவல் பாதுகாப்பு குறித்து கவலைபட தேவை இல்லை.

Wi-Fi Direct உள்ள மொபைல் போன்கள்,
Samsung Galaxy S3,S4
LG Nexus 5

Wednesday, November 27, 2013

ப்ரவுசர் டேப்கள், கோப்புகளை இணையத்தில் Sync செய்து பயன்படுத்த CupCloud


இணையத்தில் முக்கியமான செயலில் இருக்கும் போதும் அல்லது கணிணியில் எதாவது ஒரு கோப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் போதும் வேறு அவசர அழைப்புகளோ அல்லது சந்திப்புகளோ திடிரென வந்து விடும். தேடிக் கொண்டிருக்கும் விசயத்தை பாதியில் போட்டு விட்டு போகவும் முடியாது. திரும்ப வருவதற்கு நேரமானால் என்ன செய்வது? செல்லும் இடத்தில் நாம் செய்த வேலையை விட்ட இடத்திலிருந்து தொடரும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக

Thursday, November 21, 2013

புதிய அப்ளிகேஷன் - லொக்கேஷன் சர்ச் 1.0

Location Search 1.0
இந்த அப்ளிகேஷன் நீங்கள் தற்போது இருக்கும் இடத்தின் முகவரியை கொடுக்கும்.. அதாவது தெரு பெயர் ஊர் பெயர் பின் கோடு மற்றும் மாவட்டத்தின் பெயரையும் காட்டும். அதுமட்டுமல்லாமல் உங்கள் தற்போதைய மொபைல் இருப்பிடத்தை கூகுள் மேப்பில் சிறிய அளவில் படமாக காட்டும்.

முகவரியை உடனடியாக அறிய பதுப்பித்தல்(Refresh) வசதியும் உள்ளது

டவுன்லோட் செய்ய,
https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.locationsearch

Monday, November 18, 2013

ஜிமெயிலில் புதிய வசதிகள் - Save to Drive மற்றும் Quick Actions


கூகிளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஜிமெயிலை விரைவாகவும் எளிமையாகவும் பயன்படுத்த இந்த வசதிகளான Preview Attachments, Save to Drive, Quick Action Buttons போன்றவை உதவும்.

1. Preview Attachments:




இனி மின்னஞ்சலில் Attachment ஆக இணைக்கப்பட்டு வரும் படங்கள், வீடியொ, கோப்புகள், PDF ஃபைல்கள் போன்றவற்றை டவுன்லோடு செய்யாமலே முன்னோட்டத்தை( Preview)

Friday, November 8, 2013

YouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி?


கூகிள் தனது கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் (Google+ Comments) வசதியை YouTube தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் கமெண்ட்ஸ் போன்று இணையத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த கூகிள்+ கருத்துரை வசதி முதலில் ப்ளாக்கர் தளத்தில் பயன்படுமாறு கொண்டு வரப்பட்டது. கூகிள் தனது சமூகவலைத்தளமான கூகிள் ப்ளஸை மற்ற சேவைகளான தேடல், ப்ளாக்கர், யூடியுப் போன்றவற்றில் இணைப்பதன் மூலம் பயனர்களை அதிகரித்து வருகிறது.




Wednesday, October 30, 2013

கூகிள் ப்ளஸ் புரோபைல்க்கு எளிமையான Custom URL முகவரி பெற


கூகிள் ப்ளஸ் இணையதளத்தில் நேற்று சில புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் ஒன்று Google+ Custom URL. இதன் மூலம் உங்கள் கூகிள்+ புரொபைல் அல்லது பக்கத்திற்கு எளிமையான சிறிய URL முகவரியைப் பெற முடியும். முன்பு இந்த முகவரியில் நீண்டதாக எண்கள் அமைந்திருக்கும். அதனால் அதனை நினைவில் கொள்வதும் பகிர்வதற்கும் கடினமான ஒன்றாக இருந்தது. இந்த வசதி இதற்கு முன்னரே பிரபலங்கள், கூகிள் பணியாளர்கள்

Tuesday, October 29, 2013

ஸ்மார்ட்போன்கள், டேப்ளட், கேமரா போன்றவற்றின் வசதிகளை ஒப்பீட்டுப் பார்க்க சிறந்த தளங்கள்



இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வசதிகளோடு ஸ்மார்ட்போன்கள் (Smartphones), டேப்ளட் கணிணிகள்(Tablet PC), கேமரா (Camera), ரீடர்கள் (E-readers) போன்ற பல வகையான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரண மொபைல்களை விட தற்போது ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் பல வசதிகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களில் இணையம்,விளையாட்டுகள்,பயன்பாடுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். இவைகள்

Sunday, October 13, 2013

விளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்


கூகிள் சமீபத்தில் தனது சேவை விதிமுறைகளில் மூன்று புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கூகிள் விளம்பரத்தில் உங்கள் தகவல்களைப் பயன்படுத்துதல், வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்பாடு தவிர்த்தல், கூகிள் கணக்கின் கடவுச்சொல்லைப் பாதுகாத்தல் போன்றவற்றை விதிமுறைகளில் சேர்த்துள்ளது. கடைசி இரண்டும் நமக்கான அறிவுரை மட்டுமே, ஆனால் முதலாவது நமது ப்ரைவசிக்கு வேட்டு வைக்கும் ஒன்றாக வந்துள்ளது.


கூகிளின்

Friday, October 4, 2013

ப்ளாக்கர் பதிவில் சமூக வலைத்தளங்களில் பகிரும் Status களை இணைக்க


இணையத்தில் முண்ணணி சமூக வலைத்தளங்களான Facebook, Twitter, Google Plus போன்றவற்றில் பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இப்படி பகிரப்படும் செய்திகளை (Status) ப்ளாக்கர் பதிவுகளில் Screenshot எடுக்காமல் நேரடியாக இணைத்து காட்ட முடியும். ப்ளாக் வாசகர்களும் நமது பதிவிலிருந்தே குறிப்பிட்ட Status க்கு Like, Comment, Share, Retweet, +1 போன்ற வேலைகளை செய்ய முடியும்.
Facebook, Google+ தளங்களில் Public

Tuesday, September 24, 2013

ட்விட்டரில் குறிப்பிட்ட நேரத்தில் தானாக அழியும் Tweet களை உருவாக்க





தற்போதைய சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமான ஒன்றான ட்விட்டர் (Twitter) பல சேவைகளுக்குப் பயன்படுகிறது. 140 எழுத்துகள் எல்லையுடன் செய்திகளை பல நண்பர்களுக்கு அனுப்பவும் வலைப்பதிவர்கள் தங்களது பதிவுகளை ட்விட்டரில் போட்டு Blog Traffic அதிகரிக்கவும் செய்யலாம். மேலும் ட்விட்டரில் அவசர செய்திகள், உதவிகள், விளம்பரங்கள் போன்றவையும் அதிகளவில் பகிரப்படுகின்றன.

டுவிட்டரில் பகிரப்படும் அனைத்து செய்திகளும்

Monday, September 23, 2013

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-9

back tracking - பின் நகர்தல்
background - பின்னணி
background color - பின்னணி வண்ணம்
background job -  பின்னணி பணி
background noise - பின்னணி இரைச்சல்
background processing - பின்னனிச் செயலாக்கம்
background program - பின்னணி நிரல்
backing store - காப்புப் பதிவகம்
backing up - காப்பு எடுத்தல்
backup - காப்பு
backup copy - காப்பு நகல்
backvolume - முன்தொகுதி

Tuesday, September 10, 2013

ப்ளாக்கர் பதிவுகளை தானாக கூகிள் ப்ளஸ் இல் பகிர


பதிவுகளை பல வாசகர்களிடம் கொண்டு சேர Twitter, Facebook, Google Plus போன்ற சமூக வலைத்தளங்கள் உதவி செய்கின்றன. ப்ளாக்கரில் பதிவெழுதி விட்டு இவற்றில் ஒவ்வொன்றாக கிளிக் செய்து பகிர்வதற்கு சிறிது நேரமாகலாம். இதனால் தானாக பதிவுகள் சமூக தளங்களில் பகிரப்பட்டு விடுமாறு வசதியைத் தரும் தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். கூகிள் ப்ளசில் மட்டும் தானாக பகிருமாறு செய்ய முடியாது. இப்போது இதனை கூகிள்

Sunday, September 8, 2013

தமிழ் பங்குச்சந்தை

இந்திய பங்கு சந்தை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்ள இந்த முகபுத்தக பக்கம்(facebook page) துவங்கப்பட்டுள்ளது..

லிங்க்:
தமிழ்-பங்குச்சந்தை

விருப்பம் உள்ளவர்கள் லைக்(like) பட்டனை கிளிக் செய்து இணைந்து கொள்ளலாம்.. நாட்டு நடப்பு,எந்த பங்குகளை வாங்கலாம் விற்கலாம்,கம்பெனிகளை பற்றிய செய்திகள்,தங்கம் விலை,டாலர் விலை, சந்தையை பாதிக்கும் காரணிகள், மற்ற பிற சந்தை தொடர்பான செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம்....

புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்


கைபேசி மற்றும் சிம் கார்டின் தகவல்களை காண இந்த அப்ளிகேஷன் உதவுகின்றது..

https://play.google.com/store/apps/details?id=com.vijaynetwork.mobilenetworkinfo

பதிப்பு: 1.0

Sunday, August 18, 2013

யூடியுப் விளம்பரங்களை தடை செய்ய

யூடியுப்பில்(youtube) வீடியோ ஓடும் போது குறுக்கே வரும் விளம்பரங்கள் இடையூறு செய்கின்றதா? கூகிள் குரோம் பிரவுசர் உபயோகிப்பவரா நீங்கள்?குரோம் பிரவுசர்கென ஒரு யெக்டென்ஸன்(extension) உள்ளது. அதுதான் ஆட்பிளாக் பிளஸ்(Adblock plus). இதை கூகிள் குரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்தால் போதுமானது..இதுவே வீடியோ ஓடும் போது வரும் விளம்பரங்களை தடுத்துவிடும். விளம்பர தொந்தரவின்றி வீடியோ பார்க்கலாம்..

லிங்க்
https://chrome.google.com/webstore/detail/adblock-plus/cfhdojbkjhnklbpkdaibdccddilifddb?hl=en-US

Friday, July 26, 2013

ஆண்ட்ராய்ட் 4.3 Jelly Bean வசதிகள் மற்றும் சாதனைகள்

கூகிள் தனது ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2 இயங்குதளத்தை அப்டேட் செய்து புதிய பதிப்பாக 4.3 வெளியிட்டிருக்கிறது. இதனை Chrome & Android க்கான தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டார். மேலும் இது மட்டுமின்றி புதிய Nexus 7 டேப்ளட் மற்றும் Chromecast என்ற புதிய கருவி போன்றவற்றையும் அறிவித்தார். சரி ஆண்ட்ராய்ட் 4.3 பதிப்பில் என்னென்ன வசதிகள் என்று பார்ப்போம்.


1. Restricted

Tuesday, July 23, 2013

பேப்ளேட்(Phablet) என்றால் என்ன?

திரை அளவு 5 முதல் 7 இன்ச் வரை உள்ள ஸ்மார்ட் போன்களே பேப்ளேட்(Phablet) என அழைக்கப்படுகின்றன. இது ஸ்மார்ட் போன்(Smart Phone) மற்றும் டேப்லெட்ன்(Tablet) அனைத்து சிறப்புகளையும் கொண்டது. அதாவது ஸ்மார்ட், டேப்லெட் என இரண்டு வெவ்வேறு வகையான சாதனங்களை உபயோகிப்பதை தவிர்க்கவே வந்ததுதான் பேப்ளேட்.

இனி நீங்கள் வாங்கப்போவது பேப்ளேட் தானே??!!


  • Samsung Galaxy Note
  • Nokia N810
  • Dell Streak

Sunday, July 21, 2013

Auxus Nuclea N1 முன்பதிவு

சிறப்புகள்:

  • 5 இன்ச் FULL HD டிஸ்பிளே
  • 1.5GHz குவார்ட் கோர் டர்போ பிராசசர்
  • கொரில்லா கிளாஸ்3
  • 13MP கேமரா
  • 8MP முன்பக்க கேமரா
  • ஆன்ட்ராய்ட் 4.2
  • இரட்டை சிம் வசதி
  • விலை 15990 ரூபாய்

வெப் லிங்க்

Friday, July 12, 2013

சிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்கள்



கூகிளின் RSS சேவையான Google Reader கடந்த ஜூலை 1 ந்தேதி நிறுத்தப்பட்டு விட்டது. ரீடர் மூலமாக பிடித்த தளங்களைப் படித்து வந்தவர்களுக்கு மாற்று தளங்களை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கே சிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்களைக் குறிப்பிடுகிறேன். இவை அனைத்திலும் உங்களுடைய பழைய Google Reader Data வை புதிய தளத்தில் Import செய்து அப்படியே பயன்படுத்தும் வசதி இருக்கிறது. அதனால் உங்களுக்குப் பிடித்தமான

Sunday, July 7, 2013

கூகிள் ரீடர் தகவல்களை டவுன்லோடு செய்ய [கடைசி தேதி ஜூலை 15, 2013]


கூகிளின் பிரபலமான RSS சேவையான Google Reader இந்த ஜூலை 1 ந்தேதியிலிருந்து நிறுத்தப்பட்டதை அறிவீர்கள். ஆனலைனில் நமக்குப் பிடித்தமான தளங்களின் செய்திகளை உடனுக்குடன் படிக்க உதவியாக இருந்து வந்தது கூகிள் ரீடர். இதை நிறுத்தப் போவதாக அறிவித்தவுடன் பலர் அதிர்ச்சியே அடைந்தனர்.


சரி நீங்கள் கூகிள் ரீடரில் உங்களுக்குப் பிடித்த தளங்களைச் சேர்த்து வைத்திருப்பீர்கள். அந்த அமைப்புகளை டவுன்லோடு செய்து கொண்டால்

Friday, July 5, 2013

அமேஸான் இந்தியா

ஜீன் மாதத் தொடக்கத்தில் செயல்படத் தொடங்கிய அமேஸான் இந்தியா டாட் இன்(amazon.in) இணைய வர்த்தகத் தளத்தில், மொபைல் போன்களும் அவற்றிற்கான துணை சாதனங்களும் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன. நோக்கியா, எச்.டி.சி., மைக்ரோமேக்ஸ், பிளாக்பெரி, சாம்சங், ஸென்ஹெய்சர் போன்ற நிறுவனங்களின் மொபைல் போன்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன்,

 டேப்ளட் பிசிக்கள்( Tablet PC ), போர்ட்டபிள் மீடியா பிளேயர்கள், கேமராக்கள் மற்றும் போட்டோகிராபி சார்ந்த துணை சாதனங்களுடன் இடம் பெற்றுள்ளன. ஏறத்தாழ, 200 நிறுவனங்களிடமிருந்து, 20 ஆயிரம் சாதனங்கள் விற்பனைக்குப் பட்டிலிடப்பட்டுள்ளன. வாங்கப்படும் பொருட்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளிலேயே வழங்கப்படும் வசதி, வாங்கப்பட்ட பொருட்கள், வீடுகளுக்கு அனுப்பப் படும் வழியைக் கண்காணிக்கும் வசதி, பொருட்கள் பிடிக்கவில்லை எனில் திரும்ப அளிப்பதற்கான வசதி போன்ற அமேஸான் இணையதளம் வழக்கமாக தரும் அனைத்து வசதிகளையும், இந்த தளத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் தருகின்றன. தொடக்கத்தில், நூல்கள் மற்றும் திரைப்படங்கள் மட்டுமே இந்த தளத்தில் விற்பனைக்கு இருந்தன. 

தொடக்க காலச் சலுகையாக, குறிப்பிட்ட மொபைல் போன் மாடல்களுக்கு, அமேஸான் 10 சதவித விலை தள்ளுபடி அளிக்கிறது. ஒருவருக்கு ஒரு மொபைல் போனுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். சில டிஜிட்டல் கேமராக்களுக்கு 15 சதவீதத் தள்ளுபடி தரப்படுகிறது.



Wednesday, June 19, 2013

ஆபிஸ் மொபைல்

மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஆப்பிள் ஐ-போன்க்கு என தனித்துவம் வாய்ந்த அப்பிளிகேஷனை தயாரித்துள்ளது. அதுதான் ஆபிஸ் மொபைல்(Office Mobile). இதனை  உபயோகிக்க  “ஆபிஸ் 365“ல் தனி கணக்கு வைத்திருக்க‌ வேண்டும். இந்த வசதி 1 மாதத்திற்கு இலவசமாகவும் அதற்கு மேல் பணம் கட்டி தொடரவும் என மைக்ரோசாப்ட் கூறுகின்றது. இந்த அப்ளிகேஷன் மூலம் மைக்ரோசாப்ட் வேர்டு(MS-WORD),   மைக்ரோசாப்ட் பவர்பாய்ண்ட்(POWER POINT), எக்ஸல் ஷீட்(EXCEL SHEET) என அனைத்தையும் ஐ-போன் வழியாக உபயோகிக்கலாம்.

ஆபிஸ் 365 கணக்கு தொடங்க

அப்ளிகேஷன்

கீழ்காணும் ஆப்பிள் சாதனங்கள் மட்டும் இந்த அப்ளிகேஷனை உபயோகிக்கமுடியும்.

  • iPhone 4
  • iPhone 4S
  • iPhone 5
  • iPOD Touch( 3,4,5 generation )
  • iPad mini
  • IOS 6.1


இது போக மைக்ரோசாப்ட் ஆப்பிள் சாதனங்களுக்கென கீழ்காணும் அப்ளிகேஷன்களை தயாரித்துள்ளது..

  • skydrive
  • microsoft onenote
  • photo synth
  • wordament

Saturday, June 8, 2013

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-8

auxiliary equipment - துணைக் கருவி
auxiliary function - துணை செயல்கூறு
auxiliary memory - துணை நினைவகம்
auxiliary operation - துணைச் செயல்பாடு
auxiliary storage - துணைத் தேக்ககம்
availability - கிடைத்தல்
available time - கிடைக்கும் நேரம்
average search length - சராசரித் தேடு நீளம்
axes - அச்சுகள்
babble - பிறழ்ச்சி
back panel - பின்புறப் பலகம்
back plane - பின்தளம்
back space - பின்நகர்வு

Friday, June 7, 2013

வேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது, பார்ப்பது எப்படி?


இணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற வேற்று மொழிப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும் போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில் தெரியும். மொழி புரியாதவர்களுக்கு இது நலமாக இருக்கும்.

ஆனால் நிறைய படங்கள் டொரண்ட்களில் எடுக்கும் போது முக்கியமாக YouTube லிருந்து வேறு

Thursday, May 16, 2013

முதல்வர் கணினித் தமிழ் விருது

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கணினித் தமிழுக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோருக்கு, "முதல்வர் கணினித் தமிழ் விருது" வழங்கப்படும். இவ்விருது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை கொண்டிருக்கும்.

Friday, May 10, 2013

சிறந்த போட்டோ வெப்சைட்ஸ்


www.shutterfly.com

  • அளவற்ற போட்டோ சேமிக்க இலவச இடம்
  • போட்டோ பிரிண்ட்( photo print )
  • வெப் ஆல்பம்


  • போட்டோ பிரிண்ட்( photo print )
  • அளவற்ற போட்டோ சேமிக்க இலவச இடம்
  • வெப் ஆல்பம்

http://www.photobucket.com/

http://www.smugmug.com/

http://picasa.google.com/


    Friday, April 19, 2013

    ப்ளாக்கரில் புதிய வசதி – கூகிள்+ கமெண்ட் பாக்ஸ் சேர்ப்பது எப்படி?


    ப்ளாக்கர் வலைப்பதிவுகளில் கூகிள்+ ப்ரோபைல் மூலமாக கருத்துரைகள் (Comments ) சேர்ப்பதற்கான வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஏற்கனவே ப்ளாக்கர் தளத்தோடு கூகிள் பிளஸ் சேவைகளை இணைத்து வருவதைப் பற்றி சொல்லியிருக்கிறேன். Google+1 Button, Google+ Profile, Google+ Badge மற்றும் Google+ Followers Widget போன்ற சேவைகள் ப்ளாக்கினை மேலும் மெருகேற்றவும் சமூக வலைத்தளமான கூகிள்+ மூலமாக வாசகர்களை அதிகரிக்கவும்

    Saturday, April 13, 2013

    இறப்புக்குப் பின் தானாக ஜிமெயில் கணக்கை அழிக்க, தகவல்களை மாற்ற – Inactive Account Manager


    மின்னஞ்சல் பயன்படுத்தி வருபவர்கள் திடிரென இறந்து விட்டால் அவர்களின் கணக்கில் உள்ள தகவல்கள் அனைத்தையும் என்ன செய்வது எனத் தீர்மானிக்கும் வசதியை கூகிள் கொண்டு வந்திருக்கிறது. Google Inactive Account Manager என்ற இந்த வசதியின் மூலம் குறிப்பிட்ட காலம் நமது கணக்கைத் தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் இருந்தால் நமது கணக்கை என்ன செய்ய வேண்டும் என அமைக்கலாம்.


    இதன் படி குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர்

    Thursday, March 28, 2013

    இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல்




    கூகிளின் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் (Android OS) அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. அதற்கு முன்னர் நோக்கியா, ப்ளாக்பெர்ரி போன்றவை தான் வெளிச்சத்தில் இருந்தன. இப்போது ஆண்ட்ராய்டு மட்டுமில்லாமல் ஆப்பிள் மற்றும் விண்டோஸ் மொபைல்களும் பிரபலமாக உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மொபைல் சார்ந்த வணிகம் உச்சத்தில் இருக்கிறது. தொடக்கத்தில்

    Monday, March 18, 2013

    இந்திய அரசின் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் போட்டி - ஒரு லட்சம் பரிசு




    மத்திய அரசு மக்களுக்கு உதவும் வகையிலான, ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான அப்ளிகேசன்களை (Android Application) உருவாக்கும் போட்டி ஒன்றினை  நடத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நடத்தப்படும் Mobile Application Contest என்ற இந்த போட்டிக்கு இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் ஆண்ட்ராய்டு மென்பொருள்களை உருவாக்கி அனுப்பலாம்.

    m-Governance எனப்படும் மொபைல் வழி நிர்வாகம் துறையின் வழியாக, பெருகி

    Wednesday, March 13, 2013

    ப்ளாக்கர் டெம்ப்ளேட்டில் CSS நிரல்களைச் சேர்க்க எளிய வழி


    நமது ப்ளாக் வலைப்பூவை வடிவமைக்க,மெருகேற்ற டெம்ப்ளேட்டில் (Blogger Template) நிரல்களை மாற்றுவதும் சேர்ப்பதும் கடினமான வேலையாகவே இருக்கும். ப்ளாக்க்ர் டெம்ப்ளேட்டில் வலை வடிவாக்க நிரல் மொழிகளான HTML, CSS, JavaScript போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. வெறும் HTML மட்டும் பிளாக்கர் தளத்திற்கான அழகைக் கொடுத்து விடாது. CSS எனப்படும் Cascading Style Sheet தான் ப்ளாக்கின் வடிவமைப்பைச் சிறப்பாக மாற்றுகின்றன.

    Friday, March 8, 2013

    கூகிள்+ தளத்தில் Large Cover Photos மற்றும் சில புதிய வசதிகள்


    கூகிள் இரண்டு நாட்களுக்கு முன்னர் எந்தவொரு ப்ளாக் (Blog post) அறிவிப்புமின்றி தனது கூகிள் பிளஸ் (Google Plus) தளத்தில் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. இதற்கடுத்த நாள் தான் பேஸ்புக் தனது News Feed இல் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதிலிருந்தே சமூக வலைத்தளங்களுக்குள் நடக்கும் போட்டியை அறிந்து கொள்ளலாம். சரி கூகிள் ப்ளஸில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கிறது என்று பார்ப்போம்.

    1. Local

    Saturday, February 23, 2013

    டவுன்லோட் லிங்க்

    ‌இங்கே எந்த ஒரு டவுன்லோட் லிங்கையும்( வீடியோ,ஆடியோ,பைல்.. ) உள்ளீடாக கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்..

    http://www.file2hd.com/

    Thursday, February 7, 2013

    உங்களுக்கு தமிழில் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் வேண்டுமா?

    இந்த லிங்கை கிளிக் செய்து அது என்ன என்று கூறுங்கள்..

    https://docs.google.com/forms/d/1eRPic7cTzfVR4vx3NOD1DDMj8DiFxBqb7yGJqfP6xns/viewform

    நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன் சாத்தியம் என்றால் உங்களுக்கு விரைவில் கிடைக்கலாம்..

    அதிகம் விரும்பப்படும் தமிழ் ஆன்ராய்டு அப்ளிகேஷன் வெளியிட இது உதவும்..

    நன்றி..

    Saturday, January 26, 2013

    ப்ளாக்கர் பதிவுக்குள் குறிப்பிட்ட பத்திக்கு Internal Linking கொடுப்பது எப்படி?

    நம்முடைய பதிவிலிருந்து வேறு பதிவு அல்லது மற்றவர்களின் பதிவுக்கு நேரடியாக சுட்டி (Link ) ஒன்றின் மூலம் இணைப்பு கொடுப்பது Linking எனப்படும். இதன் மூலம் இன்னொரு பதிவிற்கு நேரடியாகவும் சுலபமாகவும் செல்ல முடியும். நமது பதிவுகளில் கூட எழுதும் பதிவிற்கு எதேனும் தொடர்புடைய பதிவுகள் இருப்பின், அதனை Link ஆக குறிப்பிட்டிருப்போம்.

    Internal Linking என்றால் என்ன?

    வழக்கமாக நாம் வேறொரு பதிவிற்குத் தான் Link

    Tuesday, January 22, 2013

    பிளாக்கருக்கான கூகிள்+ Followers Gadget - புதிய வசதிகள், சேர்ப்பது எப்படி?




    பிளாக்கர் தளத்தோடு கூகிள் பிளஸ் சமுக வலைத்தளத்தின் சில வசதிகளை கூகிள் இணைத்து வருவது பற்றி அறிந்திருப்பீர்கள். பதிவுகளை நாமும் வாசகர்களும்  Google Plus இல் பகிரும் வசதி, Google plus Badge மூலம் பின்தொடரும் வசதி போன்றவற்றையும் பார்த்திருக்கிறோம். இதனால் நமது தளத்திற்கு கணிசமான பார்வையாளர்களைப் பெற முடியும். இவற்றைத் தொடர்ந்து கூகிள் சில மாதங்களுக்கு முன் பிளாக்கருக்கான Google+ Follower Gadget

    ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி?



    இணையத்தில் கூகுளின் GMail மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருவீர்கள். ஒரு ஜிமெயில் கணக்கை வைத்து கூகுளின் மற்ற சேவைகளான bloggerBlogger, Google Plus, YouTube போன்றவற்றிலும் நுழைந்து பயன்படுத்தலாம். ஆனால் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருக்கலாம். சொந்த வேலைகளுக்கு, அலுவலகப் பணிக்கு என்று தனித்தனியாக வைத்திருப்பார்கள். நாம் பயன்படுத்தும் இணைய உலவியில் ஒரு ஜிமெயில்

    Tuesday, January 15, 2013

    கூகிளின் பிறந்தநாள் பரிசு - Birthday Doodles


    இன்று காலையில் எப்போதும் போல கூகிள் இணையதளத்திற்குச் சென்றால் அதன் Doodle வித்தியாசமாக இருந்தது. Google Doodle என்பது அதன் முகப்புப் பக்கத்தில் அந்த நாளில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வுகளையோ / முக்கிய நபர்களைப் பற்றிய விசேசங்கள் எதேனும் இருப்பின் அவர்களைக் கொண்டாடும் வகையில் ஒரு சிறப்புப்படத்தினை கூகிளின் லோகோவுடன் இணைத்து வெளியிடப்படுவதாகும்.

    மிகுந்த கற்பனைத்திறனுடன் உருவாக்கப்பட்ட படங்களை

    Friday, January 11, 2013

    ஐ பெர்ரி அறிமுக சலுகை Auxus CoreX2 3G


     விலை ரூபாய் 10,990.

    iberry சிறப்பம்சங்கள்
    • 3G அழைப்பு
    • ஆன்ட்ராய்டு 4.1
    • 7 இஞ்ச் 1280x800 தொடுதிரை
    • 1.6 GHz Dual Core Arm Cortex A9 பிராசஸர்
    • 1GB RAM நினைவகம்
    • 8GB உள்ளியக்க நினைவகம்
    • 2MP கேமரா
    • AGPS
    • IPS Display
    • USB
    திரையின் காட்சியமைப்பு தெளிவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கேமிரா 2MP என்பதை தவிர 10990 ரூபாய்க்கு  நேர்த்தியான சிறப்பம்சங்களை கொண்டுள்ள பட்ஜெட் டேப்லெட் என்றே கூறலாம். 

    http://www.facebook.com/iberryindia
    http://deals.ebay.in/deals/iberry.html

    கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி-7

    automata - தன்னியக்க எந்திரங்கள்
    automated data processing - தன்னியக்கத் தரவு செயலாக்கம்
    automated flow chart -  தன்னியக்கச் செயல்வழிப் படம்
    automatic - தன்னியக்க
    automatic carriage - தன்னியக்க ஏற்றி
    automatic check - தன்னியக்கச் சரிபார்ப்பு
    automatic coding - தன்னியக்கக் குறிமுறையாக்கம்
    automatic controller - தன்னியக்கக் கட்டுப்படுத்தி
    automatic digital network - தன்னியக்க லக்க வலையமைப்பு
    automatic error correction - தன்னியக்க பிழைதிருத்தம்
    automatic message switching - தன்னியக்கச் செய்தி மாற்றம்
    automatic quality control - தன்னியக்கத் தர கட்டுப்பாடு
    automatic shutdown - தன்னியக்கப் பணி நிறுத்தம்
    automatic teller machine - தன்னியக்கக் காசளிப்பு எந்திரம்
    automation - தன்னியக்க முறை
    automonitor - தன்னியிக்கக் கண்காணிப்பு
    autopilot -  தன்னியிக்க வலவன்
    autoscore - தன்னியிக்க அடிகோடிடல்