Wednesday, December 28, 2011

இலவச பார்மேட் பேக்டரி( Format Factory )


வீடியோ.ஆடியோ,படங்களை நீங்கள் விரும்பிய பார்மேட்டுக்கு மாற்றவேண்டுமா? பழுதடைந்த வீடியோ,ஆடியோ பைல்களை சரிசெய்யவேண்டுமா? மீடியா பைல்களின் அளவினை குறைக்க வேண்டுமா? ஐ-போன்,ஐ-பாட் பார்மேட் பைல்களை உருவாக்க வேண்டுமா?

இதற்கெல்லாம் பதில்தான் இலவச பார்மேட் பேக்டரி சாப்ட்வேர் தொகுப்பு,

1.  அனைத்து வீடியோவை(video)  MP4/3GP/MPG/AVI/WMV/FLV/SWF பார்மேட்டுக்கு (format)மாற்றலாம்..
2.  அனைத்து  ஆடியோவை(audio)  MP3/WMA/AMR/OGG/AAC/WAV பார்மேட்டுக்கு மாற்றலாம்..
3. அனைத்து  படத்தையும்(Pictures) JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA பார்மேட்டுக்கு மாற்றலாம்..



இயங்குதளம்: விண்டோஸ்

டவுன்லோட் லிங்க்



Monday, December 26, 2011

கூகுள் ஸ்ட்ரீட் வியூ


கூகுள் ஸ்ட்ரீட் வியூ எனப்படும் தெருப் பார்வை நமக்கு என்ன வழங்கும்? இது அமல்படுத்தப்படும் நகரின் தெருக்களை மிகவும் நெருக்கமாகக் காட்டும். கூகுள் மேப்ஸ் சென்று தெருக்களை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மேப்பின் இடது பக்கம் ஆரஞ்ச் வண்ணத்தில் உள்ள “Pegman” ஐகானை இழுத்துவந்து நீல நிற வண்ணத்தில் உள்ள தெருவில் இட வேண்டும். உடன் அந்த தெருவின் தெளிவான தோற்றம் நமக்குக் கிடைக்கும்.

இந்தியாவிலும் இந்த வசதி அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது. முதல் முறையாக பெங்களூருவில் இது தொடங்கப்படுகிறது. கூகுள் நிறுவனம் பெங்களூருவில் முதலில் தெருக்களைத் தன் கேமராவிற்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் கூகுள் கேமராக்களை அமைத்து, படங்களைப் பிடித்து வருகிறது.

லிங்க்,
http://maps.google.com/intl/en/help/maps/streetview/index.html

Monday, December 19, 2011

செய்தி - கூகுள் மங்காத்தா!!

அஜீத் நடிப்பில் வெளியான 50வது படம் 'மங்காத்தா'. அஜீத் நடிப்பில் வெளியான அனைத்து படங்களின் வசூல் சாதனையும் 'மங்காத்தா' படம் முறியடித்தது. இந்நிலையில் GOOGLE நிறுவனம் 2011 ஆண்டு தங்களது இணையத்தில் அதிகமுறை தேடப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதன் முறையாக தமிழ் படமான 'மங்காத்தா' இந்த வரிசையில் 7ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. அஜீத், த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்த இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். GOOGLE படங்களின் வரிசையில் சல்மான்கான் நடிப்பில் வெளியான 'பாடிகார்ட்' முதல் இடத்தை பிடித்திருக்கிறது. ' ரா.ஒன்' 2ம் இடத்திலும், 'ஹாரி பாட்டர்' 3ம் இடத்திலும் உள்ளன. மற்றவை
 4. டெல்லி பெல்லி
5.இந்தி 'சிங்கம்'
 6. ரெடி
 7. மங்காத்தா
 8. TRANSFORMERS-3
 9. தோக்குடு ( தெலுங்கு )
 10. Zindagi Na Milegi Dobara ( இந்தி )

 GOOGLE இணையத்தின் தேடலிலும் ' மங்காத்தா' படம் சாதனை படைத்துள்ள விஷயம் அஜீத் ரசிகர்களையும் படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Saturday, December 17, 2011

Youtube Schools - பள்ளி/கல்லூரிகளுக்கான யூடியுபின் புதிய சேனல்

முன்பெல்லாம் பள்ளிகள்/கல்லூரிகளில் எதேனும் கட்டுரை எழுதி வரச்சொன்னால் மாணவர்கள் நூலகத்தில் தேடி குறிப்பெடுப்பார்கள். இல்லையெனில் பக்கத்திலிருக்கும் அறிவான நபர்களிடம் பொறுப்பைக் கொடுத்து உதவி கேட்பார்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில் இதெல்லாம் மறந்து எதாவது ஒரு விசயம் தெரியலையா கூகிள் போப்பா என்று சொல்லுமளவுக்கு வந்து விட்டது. இணையத்தில் நல்ல விசய்ங்களோடு கெட்ட விசயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன.

Friday, December 16, 2011

Google Buzz க்கு மூடுவிழா : Buzz இல் பகிர்ந்த செய்திகளைத் தரவிறக்க

டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளமான Google Buzz ஐ 2009 இல் அறிமுகப்படுத்தியது கூகிள். இந்த சேவையானது கூகிள் மின்னஞ்சலோடு இணைக்கப்பட்டு வழங்கப்பட்டதால் இதையும் சேர்த்து பலரும் பயன்படுத்துவார்கள் என கூகிள் எதிர்பார்த்தது. ஆனால் சில நாடுகளைத் தவிர இது பிரபலமாக வரமுடிய வில்லை. இதே காலகட்டத்தில் டுவிட்டரின் வளர்ச்சி அபரிதமாக சென்று கொண்டிருந்தது. டுவிட்டரில் போலவே சுட்டிகள், படங்கள், வீடியோக்கள்

Thursday, December 15, 2011

பேஸ்புக்கின் புதிய Subscribe பட்டன் பிளாக்கில் இணைக்க

முண்ணணி சமுக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் அண்மையில் இணையதளங்களில்/ பிளாக்கர் தளங்களில் Subscribe பட்டன் வைத்துக் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் எழுதிய பதிவொன்றில் பேஸ்புக்கின் Subscribe பட்டனைப் பயன்படுத்துவது குறித்து விளக்கியிருந்தேன். Subscribe என்பது என்னவென்றால் யாரென்று தெரியாத பலரும் உங்களுக்கு நண்பர்களாக இருக்கத் தேவையில்லை. உங்களின் சுயவிவரப் பக்கத்தில் Subscribe

Monday, December 5, 2011

நாம் ஜெயிப்போமா?




பரிஸ்தமிழ்.கொம் நடாத்தும் மாபெரும் போட்டி 31 December 2011




போட்டியில் இணைந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்.




http://www.paristamil.com/contest/share-ref-10068-fed-ta1.htm



பரிசுகள்
1ம் பரிசு உங்கள் பெயர் பொறிக்கப்பட்ட Iphone 4S
2ம் பரிசு மடிக்கணனி Laptop
3 முதல் 10ம் இடம் வரை வென்றவர்களுக்கு 2Gb Apple iPod shuffle Digital Player

பிட்மீட்டர் OS


சில பிராட் பேண்ட் (broadband) இன்டர்நெட் இணைப்பு( airtel, tata, bsnl.. ) நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு வரை பேண்ட்வித் (bandwidth) இலவசமாக வழங்கும் பின் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிடுவார்கள்..சிலவற்றில் 10GB வரை 3MBPS என்றும் அதற்குமேல் 256KBPS வேகம் என்றும் இருக்கின்றது..

இது போன்ற பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பில் எவ்வளவு டவுன்லோட் செய்தீர்கள்?நாம் டவுன்லோட் லிமிட்டை மீறிவிட்டோமா என்ற கேள்வி நம்மிடையே இருக்கும்..அதற்கு விடையளிக்க இலவச சாப்ட்வேர் தொகுப்பு கிடைக்கின்றது..

அதுதான் பிட்மீட்டர் OS ( BitMeter OS )

டவுன்லோட் செய்ய..
http://codebox.org.uk/bitmeterOs

இயங்கு தளங்கள்
வின்டோஸ், லினக்ஸ், மேக்

Saturday, December 3, 2011

மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளம் Socl

இணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அபாரமானதாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன. மென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். இயங்குதளம், மென்பொருள் துறையில் கோலோச்சிய மைக்ரோசாப்ட் இணைய தொழில்நுட்பத்தில் அஜாக்கிரதையாகவே இருந்து வந்தனர்.

Thursday, December 1, 2011

கூகிள் கிளவுட் பிரிண்டர் ( Google Cloud Printer)

நமக்கு வேண்டிய தகவல்களை அச்சிட்டுப் பயன்படுத்த கணிணியில் இணைத்திருக்கும் பிரிண்டரின் (Printer) மூலம் செய்துகொள்கிறோம். வெளியில் வேறு இடங்களில் இணைய மையங்களில் இணையத்தில் உலவும் போது எதாவது ஒரு முக்கியமான தகவலைப் பார்க்கும் போது அதனை அச்சிட்டு வைத்துக் கொள்ள நினைப்பீர்கள் . அந்த இடத்தில் பிரிண்டர் இருந்தால் எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் இந்த விசயத்தை அப்படியே மறந்து விடுவீர்கள்.

Monday, November 21, 2011

கூகிள் பிளஸில் Chatting வசதி அறிமுகம்

கூகிளின் சமூக வலைத்தளமான கூகிள் பிளஸ் புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. கூகிள் பிளஸ் பட்டன், பக்கங்கள் உருவாக்குதல், பக்கங்களுக்கான பேட்ஜ் போன்றவைகள் உருவாக்கப்பட்டு மற்றொரு தளமான பேஸ்புக்கிற்கு நிகராக போட்டிகளைக் கொடுத்து வருகிறது. தற்போது வரை நமது கூகிள் மின்னஞ்சல் முகவரி தெரிந்திருந்தால் மட்டுமே கூகிள் பிளசிலும் பேசிக் கொள்ள முடியும். இப்போது நமது வட்டத்திற்குள் இருக்கும்

Saturday, November 19, 2011

புகைப்படங்களை எளிதாக வீடியோவாக மாற்ற PhotoFilmStrip

நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களை சிடி/டிவிடியில் அப்படியே புகைப்படமாக ஏற்றினால் டிவிடி பிளேயரில் தெரியும் வசதியிருக்கிறது. ஆனால் அவைகளை ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்க்க வேண்டியிருக்கும். எல்லா ஒளிப்படங்களும் சீரான இடைவெளியில் பிண்ணணி ஒலியுடன் ஒவ்வொன்றாக காட்டப்பட்டால் நன்றாக இருக்கும். இதனை SlideShow என்பார்கள். அதே நேரத்தில் ஒளிப்படங்கள் வரிசையாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எபெக்ட்டுடன் வந்தால்

Friday, November 18, 2011

2,276 ரூபாய்க்கு ஒரு டேப்லெட்


உலகிலேயே மிகவும் விலை குறைவான மினி கம்ப்யூட்டர் (டேப்லெட்(tablet)) அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது. இதை வாங்குவதற்கு இது வரை 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த டேட்டாவிண்ட் நிறுவனம்(http://www.datawind.com/), மலிவான விலையில் ஆகாஷ் என்ற பெயரில் மினி கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளது. இந்திய அரசு, தேசிய கல்வித் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மினி கம்ப்யூட்டர்களை 2,250க்கு வழங்கி உள்ளது. ஐஐடி, மண்டல பொறியியல் கல்லூரிகள், பிட்ஸ் பிலானி, டெரி யுனிவர்சிட்டி உள்ளிட்ட கல்வி நிறுவன மாணவர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர சில கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு இலவசமாகவும் வழங்கப்பட்டுள்ளது.


 மினி கம்ப்யூட்டர் வாங்குவதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது. ‘இதுவரை 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன்பணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இதனுடன் மாதம் ரூ.99 விலையில் டேட்டா பிளான் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இலவசமாக இன்டர்நெட் வசதி செய்து தரப்படும். 700 எம்பி பைலை 25 எம்பி பைலாக சுருக்கி சேமிக்கும் தொழில்நுட்பம் இதில் இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு
http://www.datawind.com/
முன் பதிவிற்கு,
http://www.akashtablet.com/
http://www.ubislate.com/

Thursday, November 10, 2011

கூகிள்+ பேஜை தேடுதலில் கொண்டு வர Direct Connect வசதி

கூகிள் பிளஸில் பக்கம் (Google+ Pages) உருவாக்குவது பற்றி அறிந்திருப்பீர்கள். இது பேஸ்புக்கின் ரசிகர் பக்கம் (Facebook Fan Page) செயல்படும் விதம் போன்றதே. நமது தளத்தின் வாசகர்களையும் தளத்தையும் இணைக்கும் இவ்வகையான வசதிகளால் வாசகர்களுக்கு தளத்தின் புதிய செய்திகளை எளிதாக அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். சரி, இதெல்லாம் நமது தளத்திற்கு வந்த பின்னரே நமக்கு ஒரு கூகிள் பிளஸ் பக்கம் இருக்கிறது என்று

Saturday, November 5, 2011

பிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க

வலைத்தளத்தின் முகவரிக்கு அருகில் சிறிய படத்தினை லோகோவாக வைப்பது Favicon என்று சொல்வார்கள். இதனை பிளாக்கர் செட்டிங்க்ஸ் பகுதியிலேயே சேர்க்கும் வசதியை பிளாக்கர் ஏற்படுத்தியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக ஒரு சிறிய படத்தினை இதற்குப் பயன்படுத்துவோம். நகரும் தன்மையுடைய அனிமேட்டட் ஃபெவிகான் எப்படி வைப்பது என்று பார்ப்போம். Favicon.cc என்ற தளம் புதுமையான முறையில் ஃபெவிகான்களை

Thursday, November 3, 2011

MS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்க

நமது ஆவணங்களின் பிண்ணணியில் நமது பெயரையோ அல்லது எதாவது ஒரு படத்தினைச் சேர்ப்பதற்கு வாட்டர்மார்க் என்று சொல்வார்கள். இதனை MS- Word மென்பொருளைப் பயன்படுத்தி வந்தால் இதிலேயே எளிமையாகச் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதற்காக வேறு மென்பொருள்களை நாட வேண்டியதில்லை.உங்களிடம் MS-ஆபிஸ் பதிப்பு 2007 அல்லது 2010 இருப்பின் திறந்து கொள்ளவும். ஏற்கனவே தட்டச்சிட்ட அல்ல புதியதாக தட்டச்சிடுகிற கோப்புகளிலும்

Tuesday, October 25, 2011

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


ஏங்க கம்யூட்டர் எரிஞ்சுபோயி துண்டு துண்டா கிடக்கு?

 கம்யூட்டர்ல ‘வெடி’ போடலாமுனு சொன்னேன்..பையன் தப்பா புரிஞ்சுகிட்டு உண்மையிலேயே வெடி போட்டுட்டான்... :@ .. :-(

!!!??

Tuesday, October 11, 2011

உலகில் மிக மலிவான விலையில் இந்தியாவின் டேப்ளட் பிசி Akash

டேப்ளட் பிசி (Tablet PC) என்று அழைக்கப்படும் மினி வகையான கம்ப்யூட்டர்கள் தற்போது சந்தையில் பிரபலமாக இருக்கின்றன. ஆப்பிள் ஐபேடும் இந்த வகையில் சார்ந்ததே. சாம்சங், ஆப்பிள் உட்பட பெரும்பாலான நிறுவனங்களின் டேப்ளட் பிசிகள் விலையில் அதிகமாக இருப்பதால் வாங்குவதற்கு ஆர்வம் இருந்தாலும் வாங்காமல் இருப்பார்கள். இவைகள் கையடக்கமாகவும் கணிணியின் வசதிகளைக் கொண்டும் மொபைல் போன்களின் வசதிகளையும் கொண்டிருப்பதால்

Sunday, October 9, 2011

கம்ப்யூட்டர் சிரிப்பு

கிராமத்துகாரர்: ஆப்பிள் ஒரு அரைக்கிலோ போடுங்கயா..கடைய நல்லா சுத்தமா வச்சுருக்கீங்களே..டவுனுனா சும்மாவா?!..கம்யூட்டர்லதான் எடை போடுவிங்களோ??

கடை உரிமையாளர்:
?! தமிழ்ல போர்டு வச்சது தப்பா?!!


'ஆப்பிள்' உருவான கதை...
மற்ற மாணவர்கள் எல்லாம் ஒய்வு நேரத்தை மைதானங்களில் செல்விடுவார்கள் என்றால், உயர் நிலை பள்ளியில் படித்து கொண்டிருந்தபோதே ஜாப்ஸ், எச் பி நிறுவனத்தில் உரைகளை கேட்டு ரசித்து கொண்டிருந்தார். இங்கு தான் அவருக்கு ஆப்பிளின் மற்றொரு நிறுவனரான ஸ்டீவ் வாஸ்னியாக்கை சந்திக்கும் வாய்ப்பு உண்டானது.

1972-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் பள்ளியை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் ஒரு செமஸ்டருக்கு பிறகு படிப்பில் அவர் மனம் செல்லவில்லை. தத்துவ ஈடுபாடும் எதிர் கலாசார ஆர்வம் அவரை அலைக்கழித்தன. அடுத்த ஆண்டே படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு வீடியோ கேம் முன்னோடி நிறுவனமான அட்டாரியில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.

அட்டாரியிலும் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போகவே ஆன்மிக தேடலோடு இந்தியாவுக்கு வந்து சுறித்திரிந்தார். கிளர்ச்சியை தரக்கூடிய போதை வஸ்துவை பயன்படுத்துவது என்றெல்லாம் தடம் மாறி அலைந்த ஜாப்ஸ் 1976-ல் அமெரிக்கா திரும்பினார். அப்போது அவருக்கு 21 வயது. நண்பர் வாஸ்னியோக் கம்ப்யூட்டர் கிளப் ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். ஜாப்ஸ் அதில் தன்னை இணைத்து கொண்டார்.

அந்த காலத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என்றால் மைன்பிரேம் கம்ப்யூட்டர் தான். ஒரு பெரிய வீட்டின் அளவுக்கு இருந்த மைன்பிரேம் கம்ப்யூட்டர்களை எல்லோரும் பயன்ப‌டுத்திவிட‌ முடியாது. கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு இருந்தால் தான் அதன் பக்கமே போக முடியும்.

வாஸ்னியோக் இதில் கில்லாடியாக இருந்தார். ஆனால் ஜாப்ஸுக்கு கம்ப்யூட்டர் உருவாக்கத்தைவிட தன்னை மார்க்கெட் செய்வதில் தான் ஆர்வம் இருந்தது. எல்லோரும் பயன்ப‌டுத்தக்கூடிய ஓர் எளிமையான கம்ப்யூட்டரை உருவாக்கி விற்பனை செய்ய வேண்டும் என்று நண்பர் வாஸ்னியோக்கிடம் அவ‌ர் வலியுறுத்தினார்.

வாஸ்னியாக் அதற்கு ஒப்புக்கொள்ளவே நண்பர்கள் ஒன்று சேர்ந்து புதிய நிறுவனத்தை உருவாக்கினார். ஜாப்ஸ், 'பீட்டில்ஸ் இசைகுழு'வின் பரம ரசிகர் என்பதால், அக்குழுவின் பாடல் ஒன்றின் பெயரான ஆப்பிள் என்பதையே நிறுவனத்துக்கு பெயராக வைத்து விட்டார்.

இருவரும் கையில் இருந்த பணத்தை முதலீடாக போட்டு நிறுவன‌த்தை துவக்கி கம்ப்யூட்டர் வடிவமைப்பில் ஈடுபட்டனர். ஜாப்ஸின் வீட்டு கேரேஜ் தான் அவர்களது அலுவலகம், ஆய்வுகூடம். அதுவே தான் நிறுவனம்.

Saturday, September 24, 2011

பேஸ்புக்கில் Subscribe வசதியை பயன்படுத்துவது எப்படி?

பேஸ்புக் (Facebook) நிறுவனம் தனது உறுப்பினர்களைத் தக்க வைக்க புத்தம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் இப்போது பார்க்கப் போவது Subscribe வசதியைப் பற்றி. Subscribe என்றால் குறிப்பிட்ட நண்பர்கள் நமக்குப் பிடித்திருந்தால் நாம் அவர்களுக்கு நண்பராகச் சேரப்போவது இல்லை. அவர்களது பப்ளிக் (Public) செய்திகள்/அப்டேட்கள் மட்டும் நமக்குத் தெரிந்தால் போதும். இதனால் Friend Request

Friday, September 23, 2011

இலவச மின்னிதழ் மாற்றி மென்பொருள் (Ebook Converter)

மின்னிதழ் என்பது ஆங்கிலத்தில் e-book, ebook, electronic book, digital book என்றவாறு குறிப்பிடப்படுகிறது. சாதாரணமாக சொற்கள், படங்கள் போன்றவற்றால் இருக்கும் புத்தகத்தினை டிஜிட்டல் வடிவில் கணிணி அல்லது அதற்கென இருக்கும் டிஜிட்டல் கருவிகளில் படிக்கலாம். இதைப் படிக்கக்கூடியவாறு இருக்கும் டிஜிட்டல் கருவிகள் Ebook Readers/E-Readers என்று அழைக்கப்படுகின்றன. சிலவகையான மின்னிதழ்களை கணிணியிலும்

Wednesday, September 21, 2011

விளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database மென்பொருள்

கணிணியில் விளையாடுவது ஒரு அலாதியான விசயம். பெரும்பாலானோர் வெற்றி பெறும் வரை வேட்கையோடு விளையாடுவோர்கள். சிலருக்கு லெவல்களை முடிக்க இயலாமல் தவித்துப் போய் வேறு வழி இருக்கிறதா என்று தேடுவார்கள். விளையாட்டுகளில் சில ரகசியச் சொற்களைக் கொடுப்பதன் மூலம் அடுத்த லெவலுக்கு முன்னேறலாம். அல்லது வேறு எதேனும் சக்திகளைப் பெறலாம். இந்த மாதிரி கொடுக்கப்படும் சொற்களே Cheat Codes என்று சொல்லப்படுகிறது. அதாவது

Tuesday, September 20, 2011

இலவச FreeMake வீடியோ/ஆடியோ கன்வெர்ட்டர் மென்பொருள்கள்

கணிணியில் ஆடியோ/வீடியோ கோப்புகளைப் பயன்படுத்தாமல் யாரும் இருக்க மாட்டோம். பல வடிவங்களில் பகிரப்படும் கோப்புகள் குறிப்பிட்ட கருவியில் செயல்படும். மற்றொரு கருவியில் செயலபடாது. ஒவ்வொரு கருவிக்கும் ஒவ்வொரு வகையான பார்மேட்கள் இருப்பதே பிரச்சினை. இதற்கு நமக்குத் தேவைப்பட்ட பார்மேட்டில் மாற்ற கன்வெர்ட்டர் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன. FreeMake என்ற நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும் இரண்டு

Friday, September 16, 2011

ஐவாட்ச்


ஐவாட்ச் ( http://www.iwatchz.com/ ). ஐ-பாட் நானோ என்பது ஆப்பிள் ஐ-பாட் குடும்பத்தின் ஓர் உறுப்பினர். சதுர வடிவில் இருக்கும் இந்த இசைப் பேழை சாதனத்தில், மிகவும் அடிப்படையான மென்பொருட்கள் சிலவும் உண்டு. உதாரணத்துக்கு, புகைப்படங்களைச் சேமித்துப் பார்க்க முடிகிற வசதி. கடிகார மென்பொருளும் உண்டு. அந்த மென்பொருளை இயக்கினால், ஐ-பாட் நானோ பார்ப்பதற்கே கைக்கடிகாரம்போல் இருக்கும் என்பதைப் பார்த்து அதற்கு strap ஒன்றைச் செய்திருக்கிறது இந்த நிறுவனம். இதை வாங்கி, ஐ-பாட் நானோவை அதில் செருகினால் போதும், கைக்கடிகாரம் தயார்!

இதில் இருக்கும் மற்றொரு மென்பொருள் Pedometer. இதை இயக்கி நடக்க ஆரம்பித்தால், எத்தனை அடிகள் நடந்து இருக்கிறீர்கள் என்பதைக் கணக்கிட்டபடியே வரும். நானோவை கணினியில் இணைத்து உங்களது நடைத் தகவலை www.nikeplus.com என்ற தளத்துக்குப் பதிவேற்றம் செய்து, உங்களது நண்பர்களுடன் 'யார் அதிகம் நடந்தது’ என்று போட்டி போடலாம்..


Saturday, September 10, 2011

ஐபோன்/ஐபேடு/ஆண்ட்ராய்டு கருவிகளிலும் பிளாக்கர் பயன்படுத்த

கூகிளின் பிளாக்கர் சேவை மூலம் இணையத்தில் நமக்கென வலைப்பதிவை உருவாக்கி கருத்துகளைப் பதிவிட்டு வருகிறோம். பிளாக்கரில் பதிவிட இணையவசதி இருக்கும் கணிணியிலே தான் பயன்படுத்த முடியும். மொபைல் மற்றும் டேப்ளட் பிசி (Tablet Pc) போன்ற இணையத்தைப் பயன்படுத்தக் கூடிய கருவிகளில் வலைப்பூக்களைப் பார்க்க முடிந்தாலும் பிளாக்கர் தளத்தைப் பயன்படுத்தி புதிய பதிவுகளை இடும் வசதியின்றி இருந்தது. தற்போது கூகிள்

Friday, September 9, 2011

ஆட்சென்ஸ் கணக்கு வாங்குவதற்கு புதிய செயல்முறைகள்

இணைய விளம்பரங்களின் மூலம் சம்பாதிக்க கூகிளின் ஆட்சென்ஸ் (Google Adsense) தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆட்சென்ஸ் கணக்கு வாங்க அப்ளை செய்தால் வேகமாகவும் எளிமையாகவும் நடைமுறைப் படுத்திவிடும். அதற்கு அவர்களின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நமது இணையதளம்/வலைப்பூ சரிவர இருக்க வேண்டும். பிறகு ஆட்சென்ஸ் கிடைத்தவுடன் உடனடியாக நமது தளத்தில் விளம்பரங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இனி இந்த நடைமுறைகள் இன்றி மேலும்

Wednesday, September 7, 2011

கணிணியிலிருந்து இலவசமாக SMS அனுப்ப இலவச மென்பொருள்

இலவசமாக குறுந்தகவல் அனுப்ப இணையத்தில் இருக்கும் ஒரு தளம் தான் Way2sms.com. இதைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும்.இந்த தளத்தில் சென்று Signup/Register செய்து கொள்ள வேண்டும். இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பின்னர் உங்கள் கணக்கை உறுதிப்படுத்த மொபைலுக்கு ரகசிய எண் அனுப்புவார்கள். அதைக் கொடுத்தால் உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.பின்னர் இந்த

Sunday, September 4, 2011

விண்டோஸ் SkyDrive – ஆன்லைனில் 25 GB சேமிப்பகம் இலவசமாக


கணிணியிலிருக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதில் நிறைய பேருக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. மாறாக பயம் தான் அதிகமாக ஏற்படுகிறது. வைரஸ், மற்றவர்களுக்குத் தெரியாமல் வைப்பது, கணிணி கிராஷ் ஆவது போன்ற பல பிரச்சினைகளால் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய ஆளைத் தேட வேண்டிய நிர்பந்தமும் தோன்றுகிறது. மேகக் கணிணியகம் என்று சொல்லப்படுகிற

Friday, September 2, 2011

கீபோர்டை நமக்குப் பிடித்தவாறு வடிவமைக்க இலவச மென்பொருள்.

கணிணியின் முக்கிய உள்ளீட்டுச் சாதனமான விசைப்பலகை (Keyboard) பல வகைகளில் வெளிவருகிறது. அதில் நிறுவனம் தயாரித்தபடி குறிப்பிட்ட அமைப்பில் தான் விசைகள் அமைந்திருக்கும். நிறைய பேர் கணிணியைப் புதியதாக பயன்படுத்தும் போது விசைப்பலகையின் அமைப்பு அவர்களுக்கு எளிதாக இருப்பதில்லை. ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு இடத்தில் இருக்கிறதென தேடிப்பிடித்து அழுத்திக் கொண்டிருப்பார்கள். நமக்குப் பிடித்த இடத்தில் குறிப்பிட்ட

Saturday, August 27, 2011

இந்தியன் ரயில் இன்போ

'இந்தியன் ரயில் இன்போ' வெப்சைட் கூகுள் குரோமிற்கு( google chrome browser ) பிரவுசர் நீட்டிப்பு(extension) ஒன்றை வழங்குகின்றது. இதனை இன்ஸ்டால் செய்தபின்பு பிரவுசரின் வலது மேற்புறத்தில் அமர்ந்துகொள்கின்றது. நமக்கு தேவையான போது இதனை கிளிக் செய்து ரயில் டிக்கெட் தகவல்களை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். முயற்சித்து பாருங்கள்..


லிங்க்:










Youtube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற


கூகிளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது. பெரும்பாலானோர் எந்த வகை வீடியோ அல்லது பாடல்கள் பார்ப்பது என்றாலும் யுடியூப் பக்கமே செல்வார்கள். இதில் வீடியோ சாங்ஸ் அதிக அளவில் பார்க்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள வீடியோக்கள் இருப்பதால் உலகளவில் பிரபலமான மைக்கேல் ஜாக்சன், ஜெனிபர் லோபஸ், ஷகிரா போன்ற பாடகர்களின் பாடல்களைத் தேடி எடுத்து பார்த்து விடலாம். ஆனால்

Friday, August 26, 2011

போட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொருள்கள்


அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் (Adobe Photoshop) ஒரு சிறந்த புகைப்பட மேலாண்மை (Image Editing) மென்பொருளாக இருக்கிறது. புகைப்படங்களை விரும்பிய வடிவில் மேம்படுத்தவும் மாற்றவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. போட்டோ ஸ்டுடியோக்களில் முக்கியமாக இதனையே பயன்படுத்துவார்கள். இதில் உருவாக்கப்படும் கோப்புகள் .psd என்ற கோப்பு வகையில் அமைந்திருக்கும். இந்த வகை கோப்புகளை உங்கள் கணிணியில் போட்டோஷாப்

Thursday, August 25, 2011

விண்டோஸ் 7 வசதிகள்



பின் அப் (Pin Up): நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டர்களை, டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் போல்டரில், மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து, அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும்.


அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில், எளிதாக அதில் வேலை செய்திட, இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இடம் தருமானால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டாஸ்க் பாரில் உள்ள அந்த புரோகிராமின் ஐகானில் கிளிக் செய்தி டவும்.


விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மூலம், மிகத் தெளிவான, துல்லியமான காட்சியைத் திரையில் பெறலாம். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் படங்களில் உள்ள நுண்ணிய தகவல்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, இந்த வசதி லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உதவியாய் இருக்கும். டெக்ஸ்ட் துல்லியமாகக் காட்டப்படவும், படங்கள் தெளிவாகத் தெரியவும் இரண்டு சிஸ்டம் பைல்கள் இதற்கு உதவுகின்றன. அவை cttune.exe (Clear Type Text Tuning) dccw.exe (Display Color Calibration): நேரடியாக இவற்றை இயக்கலாம்; அல்லது கண்ட்ரோல் பேனலில் இவற்றைக் காணலாம்.


டாஸ்க் பாரில் ஐகான்களை எந்த வரிசையில் அமைக்க வேண்டும் என விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு உதவிடுகிறது. அவற்றின் ஐகான் மீது, கர்சரைக் கொண்டு சென்று இழுத்து விடுவதன் மூலம் இதனை மேற்கொள்ள லாம். முதல் ஐந்து ஐகான்களில் உள்ள புரோகிராம்களை இயக்க, சில கீகளை அழுத்தி இயக்கநிலைக்குக் கொண்டு வரலாம். எடுத்துக்காட்டாக, முதலில் காணப்படும் ஐகானில் உள்ள புரோகிராமினை இயக்க, விண்டோஸ் கீ +1 அழுத்த வேண்டும். இரண்டாவது ஐகான் புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ+2 அழுத்த வேண்டும்.


டாஸ்க் பாரில் கவனம் செலுத்தி, அங்கு இயக்கத்தினை மேற்கொள்ள, விண்டோஸ் கீ + T அழுத்த வேண்டும். இப்போது டாஸ்க் பார் மெனு கிடைக்கும். பின்னர் அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி, புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் போதும். இந்த விளைவிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்தினால் போதும்.


ஹெல்ப் டெஸ்க் எனப்படும் உதவிடும் குறிப்புகளை விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு கம்ப்யூட்டரிலேயே வழங்குகிறது. “fix” அல்லது “Troubleshoot” என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்தால், பலவகையான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிரிவுகள் காட்டப்படுகின்றன. இவற்றில் எந்த பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமோ, அந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, தீர்வைத் தெரிந்து கொள்ளலாம்.

Wednesday, August 24, 2011

கூகிள் +1 பட்டனில் புதிய வசதிகள் – Sharing & Inline Annotations


வலைத்தளத்தை கூகிள் தேடலில் முன்னிலைப் பெறச் செய்ய உதவியாக இருப்பது கூகிள் +1 பட்டன் ஆகும். நமது வலைப்பதிவை படிப்பவர்கள் இந்த பட்டனைக் கிளிக் செய்து விட்டுச் செல்வார்கள். இது வெறும் ஓட்டுப்போடும் பட்டனாக மட்டுமே இருந்தது. ஆனால் நமது பதிவுகளை கூகிள் பிளசில் நண்பர்களோடு பகிர / Share செய்வதற்கு என்று எந்த வசதியும் இல்லை. மற்றொரு சமூக வலைத்தளமான Facebook ஐ எடுத்துக் கொண்டால் செய்திகளை அந்தந்த

Monday, August 22, 2011

ஹைடெக் முதல்வர்


அரசாங்கத்தின் செயல்பாடுகளும் சட்டதிட்டங்களும் குடிமக்களுக்கு வெளிப்படையாக எப்போதும் இருந்ததில்லை. அதனாலேயே பலரும் எந்தப் பிரச்சினைக்கும் யாரையும் அணுகாமலே இருந்து விடுகின்றனர். முதன் முறையாக மாநில முதல்வரின் செயல்பாடுகளை யாவரும் அறிந்து கொள்ளும் படி செய்திருக்கிறார் கேரள முதல்வர் திரு.உம்மன் சாண்டி. இதன் படி முதலமைச்சரின் பிரத்யேக அறை, அலுவலக அறையில் நடக்கும் செய்லபாடுகளை லைவ் ஆக பார்க்க

Sunday, August 21, 2011

கம்ப்யூட்டர் சிரிப்பு



நபர் 1: அவரு பெரிய கஞ்சன்..



நபர் 2: எப்படி சொல்ற?



நபர் 1: கம்ப்யூட்டர்ல மவுசுக்கு(mouse) பதிலா ஒரு எலிய கட்டி போட்டுருக்காருனா பாத்துக்கோங்களேன்..

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி - 3

adaptive system = தகவேற்பு அமைப்பு
add-in = செருகு
add-on = கூட்டு உறுப்பு
adder = கூட்டி
address = முகவரி
address bus = முகவரிப் பாட்டை
address decoder = முகவரிக் கொணரி
address modification = முகவரி மாற்றம்
address space = முகவரிக் களம்
address translation = முகவரிப் பெயர்ப்பு
addressing = முகவரியிடல்
adjacent matrix = அண்டை அணி
administrative data processing = நிருவாகத் தரவுச் செயலாக்கம்
Automatic Data Processing = தன்னியக்க தரவுச் செயலாக்கம்
Artificial Intelligence = செயற்கை நுண்ணறிவு


டுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி?


டுவிட்டர் நமது செய்திகளை நண்பர்களுக்கு உடனுக்குடன் தெரிந்து கொள்ள பயன்படுத்தப் படும் ஒரு சமூக வலைத்தள சேவையாக இருக்கிறது. இதன் கட்டுப்பாடான 140 எழுத்துகளுக்குள் செய்தி இருக்க வேண்டும் என்பது ஒரு சுவாரசியமான விசயம். அத்தனை எழுத்துக்குள் நமது செய்தியை புரிகிற மாதிரியும் பொருளுடைய மாதிரியும் அமைப்பது மேலும் சுவாரசியத்தைத் தரும். சொற்களை மட்டுமே பகிர்வது வலைத்தளத்தின் பலவீனம் என உணர்ந்து தற்போது

Thursday, August 18, 2011

இணைய வேக கண்காணிப்பு கருவி

இணைய வேக கண்காணிப்பு கருவி( Net Speed Monitor )இந்த டூல் இண்டர்நெட்டின் தரவிறக்க வேகம்( Download Speed ) மற்றும் தரவேற்ற வேகம்( Upload Speed ) ஆகியவற்றை கண்டறிய உதவுகின்றது. இது டாஸ்க்பாரில் அமர்ந்துகொண்டு நமக்கு தேவையான போது வேகத்தை காண உதவுகின்றது.


கீழ்க்காணும் இயங்கு தளங்களில்( Operating System ) இயங்குகின்றது.
Windox XP,
Windows Server 2003,
Windows Vista or Windows 7


தரவிறக்கம்செய்ய








Tuesday, August 16, 2011

யாகூவின் MoviePlex – முழுநீள திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க


இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூகிள் தனது ஆன்லைன் வீடியோ தளமான யூடியுபில் (Youtube) புதிய இந்தித் திரைப்படங்களை முழுதும் பார்த்து ரசிக்கும்படி Box Office என்ற புதிய சேனலை அறிமுகப்படுத்தியது. யூடியுபில் பலரால் ஏற்றப்பட்ட முழுநீளப் படங்கள் இருந்தாலும் புதிய ஹிட் படங்களை மாதமொரு முறை ஒவ்வொன்றாகப் பார்க்கும் படி கொண்டு வந்தது. மற்றொரு பிரபல தளமான யாகூவும் (Yahoo) தன் பங்குக்கு என்ன செய்வது என்று

Friday, August 12, 2011

தமிழ் மொழிபெயர்ப்பு

Google Translate ஆங்கிலம் வழியாக தமிழ் அல்லது தமிழ் வழியாக ஆங்கிலம் மொழிபெயர்க்க உதவுகிறது. ஒருமுறை முயற்சிக்கவும்.


இது ஒரு ஆல்பா வெளியீடு.


இணைப்பு

Thursday, August 11, 2011

கூகிள் பிளஸ் அப்டேட்களை உங்கள் வலைப்பூவில் காண்பிக்க


கூகிளின் புதிய சமூக வலைத்தளமான கூகிள் பிளஸ் இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை வெறும் பொழுதுபோக்கு விசயமாக மட்டுமே பார்க்காமல் நமது வலைப்பூவிற்கு எந்த வகையில் பொருத்தமாக பயன்படுத்த வேண்டும் எனத் தெரிந்து கொள்வது அவசியம். நமது வலைப்பூவில் எழுதப்படும் பதிவுகளை கண்டிப்பாக கூகிள் பிளஸில் அப்டேட் செய்தால் நம்மை பின் தொடரும் நண்பர்கள் உடனடியாக அறியவும் படிக்கவும் உதவியாக இருக்கும். இதோடு

Tuesday, August 9, 2011

தொழில்நுட்பம்



Google Wallet என்று அழைக்கப்படும் தொழில்நுட்பம் அடுத்த இரண்டு ஆண்டு களில் நமது வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரலாம். அல்லது வேவ், பஸ் போல சில மாதங்களில் புஸ்ஸென்றும் போகலாம். அதாவது மொபைலை கடன் அட்டையாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஆர்வம் தாங்கவில்லை என்றால், இப்போதைக்கு இந்த உரலியைப் பாருங்கள்








Saturday, August 6, 2011

ஆனந்த விகடன் வரவேற்பறையில் பொன்மலர் பக்கம் – நன்றி நண்பர்களே!

தமிழின் முண்ணணி வார இதழான ஆனந்த விகடனில் வாரம் ஒரு பயனுள்ள வலைப்பதிவை வரவேற்பறை பகுதியில் அறிமுகப் படுத்துவார்கள். ஒவ்வொரு முறையும் விகடனைப் படிக்கும் போது என்னுடைய வலைப்பதிவு வந்துள்ளதா என ஆர்வம் மேலோங்கி அந்தப் பக்கத்தை வேகமாகப் புரட்டுவேன். சின்ன வயதிலிருந்தே ரசித்துப் படிக்கும் புத்தகங்களில் விகடனும் ஒன்று. ஏனெனில் விகடனின் அங்கீகாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. ஆச்சரியமாக இந்த வார

Thursday, August 4, 2011

ஆடியோ கோப்புகளை இணைக்க கன்வெர்ட் செய்ய Audio Convert Merge

கணிணியில் பாடல்கள் கேட்பதற்கு ஆடியோ கோப்புகள் நிறைய வைத்திருப்போம். சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாடல்களை இணைத்து தொடர்ச்சியாக வந்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம். எதேனும் பள்ளி/கல்லூரி நிகழ்ச்சிகளில் சிறிய சிறிய ஆடியோ பகுதிகளை ஒன்றாக இணைத்து தொடர்ச்சியாக வருவது மாதிரி செய்வார்கள். இதற்கு பயன்படும் ஒரு இலவச மென்பொருள் தான் Audio Convert Merge free. இந்த மென்பொருளின் மூலம் Mp3,

Tuesday, August 2, 2011

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி - 2

accuracy - துல்லியம்
acoustic coupler - கேட்பொலிணைப்பி
acoustical sound enclosure- கேட்பொலி தடுப்பு உறை
action - செயல்
action entry - செயல் பதிவு
action oriented management report - செயல் நோக்கு மேலாண் அறிக்கை
action statement - செயல் கூற்று
action stub - செயல் டம்
active cell - யங்கு கலன்
active file - நடப்புக் கோப்பு
activity - செயற்பாடு
activity ratio - செயற்பாட்டு விகிதம்
adaptor - பொருத்தி
adaptor board - பொருத்துப் பலகை
adaptor card - பொருத்து அட்டை

Sunday, July 31, 2011

கூகிள் ஆட்சென்சில் நன்றாக சம்பாதிக்க டாப் 20 குறிச்சொற்கள் (Adsense Keywords)

Google Adsense சேவை மூலம் இணையத்தில் பலரும் சம்பாதித்து வருகின்றனர். விளம்பரதாரர்கள் கூகிளின் Adwords சேவை மூலம் விளம்பரங்களை கூகிளிடம் கொடுக்கிறார்கள். அதனிடமிருந்து வலைத்தளம் வைத்திருப்பவர்கள் விளம்பரங்களை தமது வலைப்பக்கங்களில் இட்டு அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள் என்பது தெரிந்தவை. இதில் நன்றாக சம்பாதிக்க பொருத்தமான குறிச்சொற்களுடன் (Keywords) கட்டுரைகள் இருக்க வேண்டும். குறிச்சொற்கள் என்றால்

Friday, July 29, 2011

வலைப்பூவிற்கான கூகிள்+1 பட்டனில் புதிய வசதிகளைப் பெற

வலைத்தளங்களைத் தரம்படுத்த உதவும் கூகிள்+1 பட்டனை முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தது கூகிள் நிறுவனம். இதன் மூலம் நமது பதிவுகளைப் படிக்கும் வாசகர்கள் பட்டனைக் கிளிக் செய்து ஓட்டுப் போடலாம் என்பதை அறிந்திருப்பீர்கள். இதனால் நமது வலைப்பூவின் தரம் கூகிள் தேடல் (Google Search) போன்றவற்றில் அதிகரிக்கும். கூகிள் இந்த வசதிகளை மேலும் மேம்படுத்தி வருகிறது. இன்று வலைத்தளம் வைத்திருப்பவர்கள் கூகிள்+1

Thursday, July 28, 2011

சில வெப்சைட்..

உலக நாடுகளின் கீரின்வீச் நேரம் பார்க்க ஒரு பிளாஷ் தளம்..


ட்ரம்ஸ் வாசிக்கணுமா? இதோ பிளாஷ் தளம்..கீ போர்டையும் உபயோகித்து ட்ரம்ஸ் வாசிக்கலாம்..


உங்களுக்கான ஒரு தனி பேனர் தயாரிக்கவேண்டுமா? GIF பார்மேட்டில் டவுன்லோட் செய்து உபயோகிக்கலாம்..


உங்கள் போட்டாவை பிரித்து மகிழுங்கள்..

ஆன்லைன் அலாரம்..

Sunday, July 24, 2011

இணையத்தில் வீடியோக்களை பல வடிவங்களில் தரவிறக்க ஒரு தளம் WebVideoFetcher

இணையத்தில் பரவிக் கிடைக்கும் வீடியோக்களைத் தரவிறக்க பல தளங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வேண்டிய பார்மேட்டில் குறிப்பிட்ட வீடியோவைத் தரவிறக்குவது தான் சுலபமில்லை. FLV வடிவத்தில் தரவேற்றப்படும் வீடியோக்கள் தான் யூடியுப் போன்ற இணையதளங்களில் காணப்படும். தரவிறக்கி முடிந்தவுடன் மறுபடியும் அந்த வீடியோவை நமக்கு வேண்டிய பார்மேட்டில் மாற்ற வேண்டிய வேலையும் சேர்ந்து கொள்ளும். தரவிறக்கும் போதே வேண்டிய

Saturday, July 23, 2011

மொபைல் நம்பர் ?! எந்த நெட்வொர்க் ? எந்த ஏரியா?

என்ன யோசிக்கிறிங்க..??
மிஸ்டு கால்(missed call) வந்த நம்பர் எந்த நெட்வொர்க்! எந்த ஏரியாவில் இருந்து வந்துருக்கும்!! அப்படினு யோசிக்கிறிங்களா? அப்படி யோசிச்சிங்கனா..இங்க போங்க..
போயி மொபைல் நம்பரின் முதல் நான்கு நம்பர்களை வைத்து தேடி கண்டுபிடிச்சுக்கோங்க..
http://en.wikipedia.org/wiki/Mobile_telephone_numbering_in_India
சரிதானே..?

சில முக்கிய நகரங்களின் STD கோடு..
11 – புதுடெல்லி
22 – மும்பை, மகாராஷ்டிரா
33 – கொல்கட்டா, மேற்கு பெங்கால்
44 – சென்னை, தமிழ்நாடு
20 – புனே, மகாராஷ்டிரா
40 – ஹைதராபாத், ஆந்திரா
79 – அகமதாபாத், குஜராத்
80 – பெங்களுரு, கர்நாட்டகா

Thursday, July 21, 2011

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் - ஷார்ட் கட் கீகள்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் பயன்படுத்தக் கூடிய சில முக்கிய ஷார்ட் கட் கீகள்..
Ctrl + +(plus sign) இணையப் பக்கத்தை ஸூம் செய்திட

Ctrl + – (minus sign) ஸூம் செய்த இணையப் பக்கத்தை, முந்தைய நிலைக்குக் கொண்டு வர

Ctrl + O இணையப் பக்கத்தினைத் திறக்க

Ctrl + S இணைய இணைப்பற்ற நிலையில் பார்ப்பதற்காக இணையப் பக்கத்தினை சேவ் செய்திட

Ctrl + Shift + Tab பிரவுசர் டேப்களில் பின் நோக்கிச் செல்ல

Ctrl + Tab பிரவுசர் டேப்களில் பின் முன் நோக்கிச் செல்ல

Ctrl + T புதிய பிரவுசர் டேப் திறக்க

Ctrl + w அப்போதைய பிரவுசர் டேப்பினை மூடிட

Ctrl + K அப்போதைய பிரவுசர் டேப்பினை காப்பி செய்து திறந்திட

Ctrl + N புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோ ஒன்றைத் திறக்க

Ctrl + J இன்டர்நெட் எக்ஸ்புளோரர் டவுண்லோட் மேனேஜரைத் திறந்திட

Ctrl + L புதிய இணைய முகவரியினை டைப் செய்திட அட்ரஸ் பாரைத் தேர்ந்தெடுக்க

Ctrl + B இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பேவரிட்ஸ் குறிப்புகளை ஒழுங்குபடுத்த

Ctrl + D இணைய தளம் ஒன்றை புக்மார்க் செய்திட, அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பேவரிட்ஸ் பட்டியலில் சேர்த்திட

Wednesday, July 20, 2011

கணிணியில் வெற்று போல்டர்களை எளிமையாக அழிக்க RED மென்பொருள்

பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணிணியில் பல வெற்று போல்டர்கள் (Empty Folders) நமக்குத் தெரியாமல் உருவாகி நிறைந்திருக்கும். இவை கணிணியின் ஹார்ட் டிஸ்கில் பல இடங்களில் இருக்கலாம். கணிணியில் மென்பொருள்களை நிறுவும் போதும் அவற்றை நீக்கும் போதும் சில வெற்று போல்டர்கள் அழிக்காமலே விடப்படுகின்றன. சில நேரம் நாமே New Folder உருவாக்கி விட்டு அதனை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டு

சிறந்த புரஜெக்டர் மொபைல் போன்கள் ( Projector Mobiles )

புரஜெக்டர்கள் (Projectors) எனப்படுபவை ஒளிப்படங்களை, படங்களை பெரிதுபடுத்தி திரைகளில் காண்பிக்கப் பயன்படுகின்றன. இவை வீடியோ சிக்னல்களைப் பெற்று இதிலிருக்கும் லென்ஸ் மூலமாக திரைகளில் காட்டுகின்றன. இதனை கல்லூரி, அலுவலகங்களில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழில்நுடபத்தை மொபைல் போன்களில் கொண்டு வந்து மொபைல் போனிலிருக்கும் படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை எந்த இடத்திலும் பெரிது படுத்திப் பார்க்க

Saturday, July 16, 2011

MP3 பாடல்கள் வலைப்பூ நடத்திய கல்லூரி மாணவர் கைது – சைபர் கிரைம் சிக்கல்கள்

இணையத்தில் நடக்கும் குற்றங்களையும் மோசடிகளையும் விசாரிக்கவும் தடுக்கவும் செயல்பட்டு வருவது சைபர் கிரைம் காவல் துறை ஆகும். இணையத்தில் எதைச் செய்தால் குற்றம்/ குற்றமல்ல என்பது சரியாக வரையறுக்கப்படாத இந்த காலகட்டத்தில் Mp3 தளமொன்றை நடத்தி வந்த குஜராத் மாணவரை சைபர் கிரைம் கைது செய்துள்ளது. இணையத்தில் பாடல்களைக் கேட்கவும் அவற்றைக் கணிணிக்குத் தரவிறக்கவும் பல இணையதளங்களும் வலைப்பூக்களும் இருக்கின்றன.

Sunday, July 10, 2011

யூ-டியூப்(youtube) வீடியோ டவுன்லோடர்-HD டூல்

இந்த டூல்(tool) யூ-டியூப்(YouTube) வீடியோவை உங்கள் கணினியில் சேமிக்க உதவுகின்றது. இந்த டவுன்லோட் செய்த வீடியோவை AVI மற்றும் MPG4 பார்மேட்களில் மாற்றிக்கொள்ள வசதி உண்டு. இது iPod மற்றும் iPhone ல் இயங்க தகுந்த பைலாக மாற்றுகின்றது. இதன் மூலம் அதிக கொள்ளளவு( High Definition Content ) கொண்ட வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்பது இதன் தனிச்சிறப்பு.




பைல் அளவு: 3.7MB

இயங்கும் தளங்கள்:
Windows 2000 / XP / VISTA / WINDOW 7

லிங்க்:

Thursday, July 7, 2011

வலைப்பூவில் கூகிள்+ புரோபைல் பட்டனை இணைப்பது எப்படி? (Google+ Profile Button)

கூகிளின் புதிய சமூக வலைத்தள சேவையான கூகிள் பிளஸ் சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூகிள் இந்த சேவையை மேலும் மெருகேற்றி வரும் நேரத்தில் இணையதளம் மற்றும் வலைப்பூ வைத்திருப்பவர்கள் இதனைப் பயன்படுத்தி இணையவரத்தையும் வலைத்தளத்தின் மதிப்பையும் உயர்த்துவது முக்கியமான ஒன்றாகும். இதற்கு முன்னர் வெளியான கூகிள் +1 பட்டனை வலைத்தளத்தில் இணைத்திருப்பீர்கள். இதில் ஒட்டுப்போட்டால் கூகிளின் பார்வையில் நமது

Saturday, June 25, 2011

BYWIFI வீடியோ டவுன்லோட்

வீடியோ டவுன்லோட் மற்றும் வீடியோ ஸ்டீரிமிங்(video streaming) வேகத்தை அதிகப்படுத்த இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. Youtube, Dailymotion, Metacafe, MySpace, Yahoo, Justin.tv போன்ற பல வெப்சைட்களில் உள்ள வீடியோவை தரவிரக்கம் செய்ய உதவுகின்றது. நீங்கள் வீடியோ பார்க்கும் போதே இந்த சாப்ட்வேரில் டவுன்லோட் துவங்கிவிடுகின்றது. அதுபோக வீடியோ டவுன்லோட் வேகத்தையும் அதிகரிக்கின்றது.

நீங்கள் இதை இன்ஸ்டால்(install) செய்ததும் டாஸ்க்பாரில் உட்கார்ந்துவிடும். நீங்கள் வீடியோ பார்க்கும் போது இதில் டவுன்லோட் தொடங்கிவிடும். 100% டவுன்லோட்(download) முடிந்ததும் நீக்கள் உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்துக் கொள்ளலாம்.

மேலும் டவுன்லோட் செய்த வீடியோவின் பார்மேட்டை(format) இதன் Bywifi Media Transcoder உதவியுடன் விரும்பிய பார்மேட்டில்( AVI, MP4, MP3, ASV..) மாற்றிக்கொள்ளலாம்.

FLV பார்மேட்டில் டவுன்லோட் செய்த பைல்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரு FLV பைலாக மாற்றும் வசதியும் இதன் Bywifi FLV Merger ல் உண்டு.

Bywifi Media Transcoder, Bywifi FLV Merger, Bywifi Dowloader ஆகிய அனைத்தும் இன்ஸ்டால் செய்யும் போது இணைக்கப்படுகின்றது. ஒரே கல்லில் மூன்று மாங்காய்.

இது முற்றிலும் இலவசமாக(freeware) கிடைக்கின்றது.

டவுன்லோட் லிங்க்
http://www.bywifi.com/

Wednesday, June 22, 2011

மோடம்

மோடம்(Modem - Modulator/Demodulator) என்பது இன்டர்நெட்(internet) பயனுக்காக பயன்படுத்தப் படுகின்ற ஒரு சாதனமாகும். இந்த மோடமானது டிஜிட்டர் சிக்னலை(digital signal) அனலாகாக(analog) டெலிபோன் லைன்க்கு(telephone line) மாற்றுகின்றது. மோடத்தின் துணை கொண்டு இன்டர்நெட்டில் நாம் அனுப்பும் தகவல்கள் மற்றொரு இடத்திற்கு சென்றடைகின்றன.
மோடத்தில் பலவகை உண்டு.

அவையாவன,
  • Internal Modem
  • External Modem
  • Voice Modem
  • Fax Modem
  • Video Conference Modem

Monday, June 20, 2011

செய்தி - ஜூன் 30 முதல் 25 பைசா செல்லாது


மும்பை:இந்தியாவில், ஜூன் 30ம்தேதிக்கு பிறகு 25 பைசா செல்லாது என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:25 பைசா மற்றும் அதற்கு குறைந்த மதிப்புள்ள நாணயங்கள், வரும் ஜூன் 30ம்தேதிக்கு பிறகு செல்லாது. இந்த நாணயங்களை வைத்திருப்@பார், அவற்றை ரிசர்வ் வங்கி அல்லது பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள், குறிப்பிட்ட அன்னிய வங்கிகள், கிராம மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஜூன் 29ம்தேதிக்குள் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். வங்கிகள் அவற்றின் கிளைகளில் உள்ள சில்லரை நாணய மாற்று பிரிவில், 25 பைசா மற்றும் அதற்கு குறைந்த மதிப்பு கொண்ட நாணயங்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும். ஜூன் 30ம்தேதிக்கு பிறகு 25 பைசா நாணயங்கள் செல்லாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அனைத்து வங்கிகளிலும்சேகரிக்கப்படும் 25 பைசா நாணயங்கள் உருக்கப்படும். உருக்கிய உலோகத்தை என்ன செய்வது என்பது குறித்து மத்திய அரசு பின்பு முடிவு செய்யும்.

Saturday, June 18, 2011

பயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்க பயனுள்ள நீட்சி

இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்கம் செய்யும் போது சிலர் எதாவது தரவிறக்க மென்பொருள்களைப் பயன்படுத்துவார்கள். பெரும்பாலானோர் பயர்பாக்ஸ் உலவியைப் பயன்படுத்துபவர்கள் தரவிறக்கம் செய்யும் போது அவை பயர்பாக்சின் இயல்பான டவுன்லோடு வசதியிலேயே தரவிறக்குவார்கள். சிறிய கோப்பென்றால் பிரச்சினையில்லை. பெரிய கோப்புகளைத் தரவிறக்கும் போது சிலருக்குக் காத்திருக்கப் பிடிக்காது. பயர்பாக்சில் தரவிறக்கத்தை

Thursday, June 16, 2011

கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி

Abacus-மணிச்சட்டம்

Abbreviated addressing-குறுக்க முகவரி முறை

Abend-யல்பிலா முடிவு

Abort-முறித்தல்

Abscissa-கிடையாயம்

Absolute Address-தனி முகவரி

Absolute Coding-தனிக் குறிமுறையாக்கம்

Absolute Movement- தனி நகர்வு

Acceptance Test- ஏற்புச் சோதனை

Access- அணுக்கம், அணுகல்

Access Arm-அணுகு கை

Access Code- அணுகு குறிமுறையாக்கம்

Access Mechanism- அணுகுஞ் செயலமைப்பு

Access Method-அணுகு முறை

Access Time-அணுகு நேரம்

Accessory-துணை உறுப்பு

Accumulator-திரட்டி திரளகம்

Tuesday, June 14, 2011

மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download Manager

இணையத்திலிருந்து கோப்புகளை, படங்களை என எல்லாவற்றையும் தரவிறக்க உலவியில் வழக்கமாக இருக்கும் தரவிறக்க வசதி மூலம் தரவிறக்குவோம். இல்லையெனில் தனியாக தரவிறக்க மென்பொருளின் மூலம் தரவிறக்கலாம். இணையத்தில் பல தரவிறக்க மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. தற்போது மைக்ரோசாப்டும் இலவச தரவிறக்க மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புதிய மென்பொருள் அல்ல. முன்னரே அறிமுகப்படுத்தி பிரபலமாகாத இந்த

Friday, June 10, 2011

பிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அறிமுகம்.

ஏற்கனவே ஒரு பதிவில் உங்கள் வலைப்பூவை மொபைலுக்கு ஏற்றபடி மாற்றுவது எப்படி என்று எழுதியிருந்தேன். மொபைல் வழி இணையப் பயன்பாடு அதிகரிக்கும் இக்காலகட்டத்தில் அதற்கேற்றபடி நமது வலைப்பூவையும் மாற்ற வேண்டுமல்லவா? உயர்ந்த ரக மொபைல்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் நமது வலைப்பூவை சரியான தோற்றத்தில் பார்ப்பதற்கும் வேகமாகப் படிப்பதற்கும் ஏற்றபடி மாற்ற Mobile Templates என்பதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதைச்

Thursday, June 9, 2011

MP3 பாடல்களை ஆடியோ சீடியாக மாற்ற / சீடியிலிருந்து பாடல்களைப் பிரிக்க

வாசகர் ஸ்ரீதர் என்பவர் சந்தேகம் ஒன்றைக் கேட்டிருந்தார். “நான் mp3 dvd ஒன்று வாங்கினேன்.அதில் நமக்கு பிடித்த பாடலை மட்டும் பிரித்து எடுக்கலாம் என்று எனது கணிணியில் போட்டேன்.ஆனால் no file என்று வந்தது.பின்பு அதை எடுத்து dvd player ல் போட்டு பார்தேன் வேலை செய்கிறது.அப்பொழுது தான் புரிந்து கொண்டேன். அடுத்தவர்கள் காப்பி செய்யாமல் இருக்க அந்த கம்பெனி அது போன்று உருவாக்கி இருக்கிறார்கள்.இப்பொழுது என்

Wednesday, June 8, 2011

தமிழ் செய்திதாள்கள்

  • தினமலர்
  • தினகரன்
  • தினபூமி
  • தினத்தந்தி
  • தினமணி
  • தமிழ்முரசு
  • மாலைமலர்
  • தென்செய்தி
  • மாலைச்சுடர்
  • முரசொலி
  • வெப்சைட்டில் மெகா சீரியல்

    கீழ்காணும் வெப்சைட்டில் சன், கேப்டன் டிவி செய்திகள் மற்றும் காமெடி, மெகா சீரியல்கள் இடம் பெற்றுள்ளன.பார்த்து மகிழுங்கள்.

    நாதஸ்வரம்
    http://blog.techsatish.net/2010/04/natheswaram-serial-index.html

    மெட்டிஒலி
    http://blog.techsatish.net/2010/03/metti-oli-serial-index.html

    திருமதி செல்வம்
    http://blog.techsatish.net/2010/04/thirumathi-selvam-serial-index.html

    கூகுள் குரோம் வெப்-ஸ்டோர்


    கூகுள் குரோம் வெப்பிரவுசர்(google chrome browser) வழங்கும் வெப் ஸ்டோர்(Web Store) ல் பல அப்பிளிக்கேசன்ஸ்(applications) மற்றும் கேம்ஸ்(games) இலவசமாக கிடைக்கின்றன. அப்பிளிக்கேசன்ஸை எளிதாக இன்ஸ்டால் செய்து பிரவுசரிலேயே இயக்கலாம். இன்ஸ்டால் செய்த கேம்ஸ் மற்றும் அப்பிளிகேசன்ஸ் பிரவுசரிலேயே இணைக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் பிரவுசரை இயக்கி அப்பிளிகேசனை இயக்க முடியும். மேலும் பல தீம்கள்(themes) மற்றும் எக்ஸ்டென்ஸஸ்(extensions) குரோம் பிரவுசருக்கென கிடைக்கின்றன.


    வெப் ஸ்டோர்(Web store)




    சில முக்கியமான கேம்ஸ் மற்றும் அப்பிளிகேசன்ஸ்
    கோபக்கார பறவைகள்( Angry Birds )

    பிரைவேட் ஜோ( Private Joe )


    குயிக் நோட்ஸ்(Quick Notes)

    அட்வான்ஸ்டு இமேஜ் எடிட்டர்(Advanced Image Editor)

    குறிப்பு: இந்த அப்பிளிக்கேசன்ஸ் மற்றும் கேம்ஸ் கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே சிறப்பாக இயங்கும்.

    Tuesday, June 7, 2011

    புதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouTube BoxOffice

    கூகிளின் யூடியுப் சேவை (Google Youtube) வீடியோக்களை இலவசமாக கண்டுகளிக்க உதவுகிறது. இந்த இணையதளத்தில் ஏராளமான இலவச வீடியோக்கள் உள்ளன. வேண்டுமென்றால் நாம் இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். கடந்த வருடமே யூடியுப் தளத்தில் இலவசமாக இந்தித் திரைப்படங்களை முழுவதுமாகப் பார்ப்பதைக் கொண்டு வந்தது. இதற்காக சில திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.மேலும் யூடியுப் இணையதளம் ஐபிஎல்

    சிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSplitter

    நம்மிடம் இருக்கும் வீடியோப் படங்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க வேண்டி வரும். அதை யூடியுப் தளத்தில் அல்லது வேறு ஏதேனும் தளங்களில் பகிர்வோம். அல்லது நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வரும். சில கோப்புப் பகிரும் (File Sharing) இணையதளங்களில் கோப்புகளுக்கு அளவு நிர்ணயம் செய்திருப்பார்கள். இவ்வளவு அளவு கொண்ட கோப்புகளை மட்டும் தான் பதிவேற்ற வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கும்.

    ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Multi Skype Launcher

    ஸ்கைப் சேவையை உலகெங்கும் பலர் இண்டர்நெட் வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை Voive Over IP என்ற தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ஸ்கைப் பயனர்கள் மற்ற ஸ்கைப் பயனர்களுக்கு இலவசமாகப் பேச முடியும். தொலைபேசி மற்றும் வேறு அழைப்புகளுக்கு கணக்கிலிருந்து பிடித்துக் கொள்வார்கள். தற்போது இந்த சேவையை மைக்ரோசாப்ட் 8.5 பில்லியன் டாலர்களுக்கு

    Saturday, June 4, 2011

    குழந்தைகளுக்கேற்ற பாதுகாப்பான இணைய உலவி KidZui

    இணையம் பரந்த விரிந்த திறந்த கடல் போன்றது. நல்ல விசயங்களும் கெட்ட விசயங்களும் கலந்தே இருக்கும். குழந்தைகள் கணிணியில் பழகும் போது இணையத்தினைப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். அனைத்து பெற்றோர்களும் எதிர்பார்க்கிற விசயம் இணையத்தின் கெட்ட விசயங்களான ஆபாச தளங்கள், தேவையில்லாத வன்முறைத் தளங்கள், சாட்டிங் போன்றவற்றில் போய்விடக்கூடாது என்பது தான். இவற்றைத் தாண்டி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது

    Thursday, June 2, 2011

    உலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project

    உலகத்தில் இருக்கும் முக்கியமான மியூசிங்களில் இருக்கும் அரிய புகைப்படங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை என ஏங்குபவரா நீங்கள்? கூகிளின் Art Project சேவை மூலம் வான்காப் போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை தத்ரூபமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகின் முக்கியமான 17 மியூசியங்களுடன் கூகிள் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள இந்த சேவை கலை ரசிகர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும். இந்த சேவையில்

    Wednesday, June 1, 2011

    கூகிளின் +1 பட்டன் அறிமுகமானது; வலைப்பூவில் சேர்ப்பது எப்படி?

    இணைய உலகின் மன்னனான கூகிளுக்கு இருந்த பெரிய தலைவலி மற்ற சமுக வலைத்தளங்களில் பரிமாறிக் கொள்ளப்படும் செய்திகள், பதிவுகள், வலைத்தளங்களைப் பற்றி கணிக்க முடியாமல் இருந்தது தான். ஏனெனில் எல்லோரும் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அவர்களுக்குப் பிடித்த தளங்களின் இணைப்புகளைப் பரிமாறிக் கொள்ளும் போது கூகிளுக்கு இதைப் பற்றி முழுதும் அறிந்து கொள்ள முடியாமல் போனது. எந்த வலைத்தளங்கள் அதிகம் பிரபலமடைகின்றன,

    வைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க IOBit Malware Fighter

    கணிணியை நிலைகுலையச் செய்யும் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவற்றைத் தடுப்பதற்காக நாம் ஆண்டிவைரஸ் மென்பொருள்களைப் பயனபடுத்தி வருகிறோம். சில கணிணிகளில் மால்வேர்கள், ஸ்பைவேர்களின் காரணமாக கணிணி மெதுவாக இயங்கும். இவைகளை ஒருசில நேரங்களில் ஆண்டிவைரஸ் மென்பொருள்களால் கண்டறிய முடிவதில்லை. ஆண்டிவைரஸில் இல்லாத சில வசதிகளைக் கருத்தில் கொண்டு கணிணியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள் தான்

    Tuesday, May 31, 2011

    கணிணியை வேகப்படுத்த பாதுகாக்க Advanced System Care 4

    கணிணியில் அன்றாட வேலைகளை மட்டுமே செய்கின்ற பலருக்கு கணிணியை எப்போதும் மேம்பட்டதாக வைத்துக் கொள்ளும் மனநிலையில் இருப்பதில்லை. நல்லதாக பார்த்து கணிணி வாங்கியிருந்தாலும் இப்போது மெதுவாக இயங்குகிறது என்று வருத்தப்படுவார்கள். ஏன் என்றால் கணிணியில் தேங்கும் பிரச்சினைகளை நாம் கண்டறிந்து சரிசெய்வதில்லை. ரெஜிஸ்ட்ரியில எதாவது பிரச்சினையா, ஷார்ட்கட் பிரச்சினையா, கணிணியில் நமக்குத் தெரியாமல் எதாவது

    Monday, May 30, 2011

    திருக்குறள்





    திருக்குறள் குறட்பாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியாக்கமும் பிடிஎப் வடிவில் படிக்க,

    இங்கே கிளிக் செய்யவும்

    ஈதர்நெட் ஹப்(Ethernet Hub)


    இரண்டிற்கு மேற்ப்பட்ட கம்ப்யூட்டர்களை இணைக்க ஹப்(HUB) பயன்படுகின்றது. இதனை பல்வேறு வகைகளில் இணைக்க இயலும்.உதாரணத்திற்கு Topology என்கின்ற உத்தியை பயன்படுத்தி கம்ப்யூட்டரை இணைத்துக்கொள்ளலாம். இணைக்கும் முறைகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவையாவன,

    1. Bus Topology
    2. Star Topology
    3. Ring Topology
    4. Mesh Topology
    5. Hybrid Topology

    டிப்ஸ் - விண்டோஸ்

    உங்கள் திரையில் பல விண்டோக்களைத் திறந்து வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்திட விரும்புகிறீர்களா? விண்டோஸ் (Windows) கீயை (கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே விண்டோஸ் படத்துடன் உள்ள கீ) அழுத்திக் கொண்டு அதனுடன் D கீயை அழுத்தவும். அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். இல்லை இல்லை மீண்டும் அவை வேண்டுமே என்று எண்ணுகிறீர்களா? மறுபடியும் அதே போல அந்த இரண்டு கீகளையும் அழுத்துங்கள். மீண்டும் அவை கிடைக்கும்.

    பயர்பாக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் நீட்சி FxChrome

    இணைய உலகில் அதிகம் பேரால் விரும்பப்படும் பயன்படுத்தப்படும் உலாவியாக பயர்பாக்ஸ் இருந்து வருகிறது. ஆனால் கூகிள் வெளியிட்ட குரோம் உலவி தற்போது இதற்கு சவாலாக வந்து கொண்டிருக்கிறது. இதன் வளர்ச்சியும் அபரிதமாக உள்ளது. பயர்பாக்ஸ் ரசிகர்களையும் மெல்ல மெல்ல இழுத்து பயர்பாக்சின் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. குரோமின் வளர்ச்சிக்குக் காரணம் அதன் எளிமையான வடிவமைப்பும் அதன் வேகமும் தான்.

    Sunday, May 29, 2011

    ஜிமெயில் கணக்கைப் பாதுகாப்பாக பயன்படுத்த 7 வழிமுறைகள்.

    மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும் பலரும் அதன் பாதுகாப்பு விசயங்களில் கவனமாக இருப்பதில்லை. ஒன்றுக்கு இரண்டாக இமெயில் இல்லாதவர்கள் எவரும் உலகில் இல்லை. நமது மின்னஞ்சல்களில் தான் முக்கியமான விவரங்கள் எல்லாம் வைத்திருப்போம். பல தளங்களில் Registration செய்த தகவல்கள், சமுக வலைத்தள விவரங்கள் மேலும் பல முக்கியமான மின்னஞ்சல்களும் வைத்திருப்போம். திடிரென்று உங்கள் ஜிமெயில் கணக்கை எவராவது சில சமயம் நண்பர்கள்

    Saturday, May 28, 2011

    யூனிக்ஸ் இயங்குதளம் போன்ற கூகிள் தேடல் தளம் Goosh

    கூகிளின் தேடல் தளம் தான் உலகிலேயே அதிகம் பேரால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இணையத்தில் நுழைந்ததும் கூகிளில் தான் முழிப்பார்கள். எந்த விசயமானாலும் அள்ளித்தரும் கூகிளை யார் தான் விரும்ப மாட்டார்கள்? ஆனால் கூகிளின் தேடல் தளத்தையே வித்தியாசமான முறையில் ஒருவர் அமைத்திருக்கிறார். கூகிளின் தேடல் நிரல்களைக் கொண்டு புதிய முறையில் உருவாக்கிய அவரின் பெயர் ஸ்டீபன். யூனிக்ஸில் கூகிள் தேடலைப் பயன்படுத்தினால்

    Thursday, May 26, 2011

    பிளாக்கர் வலைப்பூவை மொபைலில் பார்ப்பதற்கு ஏற்றபடி செய்வது எப்படி?

    இணையத்தை விட மொபைல்களின் வளர்ச்சி அதிகமான எண்ணிக்கையில் போய்க் கொண்டிருக்கிறது. ஒரே கிளிக்கில் இணையம், சமூக வலைத்தளங்கள் என மொபைலிலேயே எல்லாவற்றையும் செய்து கொள்ளுமாறு ஸ்மார்ட் போன்கள் உருவாக்கப்படுகின்றன. பேருந்தில் எங்கேயாவது செல்லும் போது நானும் பல வலைப்பூக்களைப் படிப்பதுண்டு. நமது வலைப்பக்கமானது இணைய உலவிகளில் படிப்பதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது. அதனால் நமது வலைப்பூவை மொபைலில் பார்க்கும் போது

    Wednesday, May 25, 2011

    இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்த BitDefender ஆண்டிவைரஸ் நீட்சிகள்

    இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் எந்த தளத்திலிருந்து வைரஸ் வரும் என்று பயந்து கொண்டே இருப்பார்கள். உண்மையில் நமக்கு ஒன்றுமே தெரியாது, இந்த தளத்தில் நுழைந்தால் வைரஸ் வரவேற்கும் என்று. என்னுடைய கணிணியிலும் ஒருமுறை எதோ வெப்சைட்டில் நுழையப்போய் பல வைரஸ்கள் ஊடுருவியதில் சிக்கலாகிப் போய்விட்டது. இதனைத் தடுக்கும் அளவுக்கு நம்மிடம் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் இருக்க வேண்டும். அதுவும் இண்டர்நெட் பாதுகாப்பை

    உங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய

    வலைப்பதிவை நடத்துவதே போதாத வேலையென இருக்கும் போது நாம் கஷ்டப்பட்டு எழுதும் பதிவுகளை மற்றவர்கள் சுலபமாக அதை காப்பி செய்து தங்களின் வலைப்பூவில் போட்டு பேர் வாங்கிக் கொள்கின்றனர்.மேலும் எரிச்சலூட்டும் விதமாக காப்பியடித்த பதிவுகளையும் திரட்டிகளிலும் இணைத்து விடுவார்கள். சில புண்ணியவான்கள் என்னமோ அவர்களே சொந்தமாக எழுதியதாக நினைத்து அதற்கு பதிவு நன்று பகிர்வுக்கு நன்றி என்று கருத்துரையும் இடுவார்கள்.

    இலவச ஐகான்கள்

    கணக்கில் அடங்கா பல்வேறு அளவுகளில் ஐகான்கள் வேண்டுமா? இங்கே சென்று இலவசமாக டவுன்லோட் செய்து உபயோகிங்கள்.


    Tuesday, May 24, 2011

    வாக்கெடுப்பு முடிவுகள்

    சி மொழி வினா
    sizeof(NULL) இந்த கோடு கீழ்கண்டவற்றில் எதை வெளியீடு செய்யும் ( 32 bit processor & 32 bit compiler )

    விடை
    4 Bytes

    NULL என்பது கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட்டிருக்கும். ஆக 'integer' டேட்டா டைப்பின் அளவு, அதாவது 4 Bytes என விடை கொடுக்கும்.

    #define NULL 0

    Monday, May 23, 2011

    விண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு

    விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடைமுகத்தையும் மேம்பட்ட வசதிகளையும் விரும்புவார்கள். சிறப்பம்சங்கள் பல கொண்டுள்ள இந்த இயங்குதளத்தில் பயன்படுத்தாத வசதிகள் நிறையவே உள்ளன. Windows 7 God Mode என்று மைக்ரோசாப்டால் சொல்லப்படும் இந்த உத்தி ஆச்சரியமான ஒன்றாகும். வழக்கமான பயனர்கள் செய்யத் தெரியாத காரியங்களை இதன் மூலம் செய்ய முடியும்.GodMode என்றால் என்ன?இது புதிதாக எந்த வசதியையும்

    Sunday, May 22, 2011

    ஆன்லைனில் இலவசமாக கடைகளுக்கு இன்வாய்ஸ் பில்களை விரைவாக உருவாக்க

    பொருள் விவரப்பட்டியல் எனப்படும் இன்வாய்ஸ் பில்களை கடைகளில், நிறுவனங்களில் எதேனும் பொருள்களை வாங்கும் போது கொடுப்பார்கள். நமது கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் இன்வாய்ஸ் பில் கொடுக்க எதாவது மென்பொருள்களை (Customized Softwares) போட்டிருக்க வேண்டும். சிலர் MS-Excel மென்பொருளில் கை வலிக்க அடித்து அதை அழகுபடுத்தி அச்சிட்டுக் கொடுப்பார்கள். சிலர் டேலி மென்பொருளை நாடுவார்கள். உடனே அவசரமாக பில்

    பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எளிதாக உருவாக்க ஒரு இணையதளம்

    அன்றாட வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவைப் படுகின்றன. வேலைக்கு விண்ணப்பம் செய்தல், கல்லூரியில், ID Card போன்ற பல நிலைகளில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் அவசியமான ஒன்றாகும். நம்மிடம் டிஜிட்டல் கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் நல்ல புகைப்படங்கள் இருக்கலாம். ஆனால் நிறைய பேருக்கு எப்படி அதை பாஸ்போர்ட் அளவுக்கு மாற்றுவது எனத்தெரியாது. அவசரத்தின் போது

    Wednesday, May 18, 2011

    ஒளிப்படங்களின் தரம் மாறாமல் அளவைக் குறைக்க இலவச மென்பொருள்

    கேமராவில் அல்லது இணையத்திலிருந்து ஒளிப்படங்களை எடுக்கும் போது சில படங்களின் அளவு அதிகமாக இருக்கும். 1600x1200 போன்ற அளவுள்ள ஒளிப்படங்கள் கோப்பளவிலும் 1 Mb அல்லது 2 Mb என்று அதிகமாக இருக்கும். அதை நாம் யாருக்காவது பகிரும் போது அல்லது இணையத்தில் பதிவேற்றும் போது அல்லது பிளாக்கரில் பயன்படுத்தும் போது அது அப்லோடு ஆக அதிக நேரங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஒளிப்படத்தின் அளவைக் குறைப்பது இணையத்திலோ

    Tuesday, May 17, 2011

    டாக்ஸ் வியுவர் - Docx Viewer

    அண்மையில் வேர்ட் 2010 ஆபீஸ் தொகுப்புடன் வந்துள்ள வேர்ட் ப்ராசசர் புரோகிராமில், வழக்கமான வேர்ட் பைல்கள், மாறா நிலையில் Docx என்ற வடிவில் அமைக்கப்படுகின்றன. இதனைப் பழைய வேர்ட் 2003 மற்றும் அதற்கு முந்தைய புரோகிராம்களில் திறந்து படிக்க இயலாது.

    இத்தகைய டாகுமெண்ட் களைப் படிக்க முடியாமல் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் நமக்கு இலவசமாகக் கிடைப்பது Docx Viewer. இதன் மூலம் நாம் Docx பார்மட்டில் உள்ள பைல்களை, நம் கம்ப்யூட்டரில் வைத்தே, திறந்து படிக்கலாம். இதற்கு நம் கம்ப்யூட்டரில் வேர்ட் அல்லது வேர்ட் போன்ற புரோகிராமும் தேவையில்லை. இந்த புரோகிராமில் திறந்து படித்த பின்னர், அதனைக் காப்பி செய்து, அப்படியே நாம் பயன்படுத்தக் கூடிய டெக்ஸ்ட் புரோகிராமில், நாம் பயன்படுத்தும் பார்மட்டில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.

    Docx Viewer- ஒரு சிறிய, எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய புரோகிராம். இதனைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இந்த புரோகிராமை டவுண்லோட் செய்து, ஸிப் பைலை விரித்து வைத்து இயக்கினால் போதும். உடனே, நமக்கு Docx பார்மட்டில் உள்ள பைலைத் திறப்பதற்கான மெனு கிடைக்கிறது. அதே புரோகிராமில் பார்மட்டில் சேவ் செய்திட முடியாது. அதனைப் படிக்கலாம்; திருத்தலாம் மற்றும் காப்பி செய்து கிளிப் போர்டுக்குக் கொண்டு போகலாம். பின்னர் கிளிப் போர்டில் இருப்பதை, டெக்ஸ்ட் ப்ராசசருக்குக் கொண்டு செல்லலாம்.

    மைக்ரோசாப்டை காலி செய்யுமா கூகிளின் புதிய குரோம் லேப்டாப்

    கணிணி மற்றும் மென்பொருள்கள் சந்தையின் முதல்வரான மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ்க்கு இது போதாத காலம் போல. கூகிள் நிறுவனத்தால் இணைய வர்த்தகம் மைக்ரோசாப்டுக்கு பெருமளவில் குறைந்து விட்ட நிலையில் மென்பொருள்கள் சந்தையிலும் அடிவிழப் போகிறது. கூகிளின் புதிய இயங்குதளமான குரோம் (Chrome OS Notebooks) இப்போது லேப்டாப்களில் பொதிந்து விற்பனைக்கு தயாராகிவிட்டன.மேகக் கணிணியகம் என்று சொல்லப்படும் Cloud Computing

    Monday, May 16, 2011

    மொபைல் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்க உதவும் இணையதளங்கள்

    தகவல் தொழில்நுட்பத்தில் அலைபேசிகளின் பங்கு முக்கியமானது. இப்போது நவீன ஸ்மார்ட்போன்களின் வருகை பலவிதமான சேவைகளை மொபைலில் பயன்படுத்தும் படியாக உள்ளது. இணையம், செயலிகள், விளையாட்டுகள் மற்றும் இதர பயன்பாடுகள் என மொபைல் துறையில் மென்பொருளாக்கம் வளர்ந்திருக்கிறது. ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகிள் போன்ற பெரிய ஜாம்பவான்களும் மொபைல் துறையில் நுழைந்து தங்களுக்கென இத்துறையில் சந்தை வாய்ப்புகளை

    கணிணியின் Font களை ஒரே நேரத்தில் முன்னோட்டம் பார்க்க உதவும் இணையதளம்.

    நமக்குப் பிடித்த ஏராளமான எழுத்துருக்களை (Fonts) கணிணியில் நிறுவி வைத்திருப்போம். போட்டோ ஸ்டுடியோ, DTP கடைகளில் உள்ளவர்களும் அதிகமான எண்ணிக்கையில் கணிணியில் எழுத்துருக்களை வைத்திருப்பார்கள். வேர்ட் தொகுப்பில் எதாவது கோப்பொன்றை தட்டச்சிட்டு வருகையில் விருப்பமான எழுத்துருக்களை சிரமப்பட்டு தேட வேண்டியதாக இருக்கும். எந்த டிசைனில் இருக்கும் எழுத்துரு நமக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதை அறிய ஒவ்வொரு

    Sunday, May 15, 2011

    கணிணியை பேக்கப் செய்ய / மீட்க அவசியமான மென்பொருள் Easeus Backup

    கணிணியைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தான் சிரமப் பட வேண்டியிருக்கிறது. திடிரென்று வைரஸ் தாக்குதலின் காரணமாக கணிணியில் உள்ள கோப்புகளை இழக்க வேண்டியிருக்கும். கணிணி கிராஷ் ஆகி பூட்டிங் ஆக மறுக்கும். மறுபடியும் விண்டோஸ் நிறுவ வேண்டியிருக்கும். சில கணிணிகளில் ஹார்ட் டிஸ்க் செயல் இழந்து மொத்தமாக எல்லா கோப்புகளையும் தொலைக்க வேண்டி வரும். நம்மில் எத்தனை பேர் கணிணியை பேக்கப் செய்து

    Saturday, May 14, 2011

    விளையாட்டுகளுக்கு ஏற்ப கணிணியின் திறனை மேம்படுத்த Game Booster

    கணிணியின் திறன் நன்றாக இருப்பின் கணிணியில் விளையாட்டுகளை விளையாடுவது சிறப்பானதாகும். இல்லையென்றால் கணிணி சில நேரங்களில் தொக்கி நிற்கும். மேலும் விளையாட்டுகளை கணிணியில் பயன்படுத்த கணிணியின் வன்பொருள்களின் டிரைவர்கள் சரியாக அப்டேட் செய்யப் பட்டிருக்க வேண்டும். நமக்குத் தெரியாமல் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் செயல்பாடுகளால் விளையாட்டுக்குத் தேவையான நினைவகம் கிடைக்காமல் போகலாம். முக்கியமாக

    Friday, May 13, 2011

    பிளாக்கர் வலைப்பதிவில் லேபிள்களை சுருக்க விரிக்க எளிமையாக்க

    பிளாக்கர் வலைப்பதிவுகளில் எழுதும் ஒவ்வொரு பதிவுகளுக்கும் நாம் லேபிள்கள் (Labels) எனப்படும் வகைகள் கொடுப்போம். வகைகள் கொடுப்பதால் படிப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட வகையில் மற்ற பதிவுகளை எளிதாகப் பார்ப்பதற்கும் தேடுவதற்கும் உதவுகின்றன. இந்த வகைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நேரத்தில் வலைப்பதிவின் முக்கிய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இவைகளை சுருக்கி வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில்

    யூடியுப் வீடியோக்களை எளிதாக mp3, mp4, flv, HD வகைகளில் தரவிறக்க பயர்பாக்ஸ் நீட்சி

    யூடியுப் இணையதளத்தில் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு ஏகப்பட்ட படங்கள் உள்ளன. படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவருகிறதோ இல்லையோ இதில் முன்கூட்டியே வெளியிடப்படும். இதில் படங்களைப் பார்ப்பவர்கள் பிடித்திருந்தால் தரவிறக்க வேண்டும் என நினைப்பார்கள். சிலர் மென்பொருள்களின் மூலமும் சில இணையதளங்களின் மூலமாகவும் படங்களைத் தரவிறக்கம் செய்வார்கள். இதில் படங்கள் FLV என்ற வடிவத்தில் இருக்கும். இதனால்

    Tuesday, May 10, 2011

    பிளாக்கர் பதிவுகளில் Twitter Share பட்டனை இணைப்பது எப்படி?

    கடந்த 2010 ஆம் வருடத்தில் மிக பிரபலமான இணையதளங்களில் டுவிட்டரும் ஒன்றாகும். டுவிட்டரில் 140 எழுத்துகளில் செய்திகளை பகிர்ந்து கொண்டு உலகெங்கும் உள்ள நண்பர்களுக்கு பரப்ப முடியும். பிளாக்கரில் வலைத்தளம் வைத்திருப்பவர்கள் தங்களது பதிவுகளை ஒருமுறையாவது பதிவின் இணைப்பை டுவிட்டரில் பகிர்வது அவசியம். இது எதற்காக என்றால் டுவிட்டரில் நம்மை பின் தொடரும் நண்பர்களுக்காக பகிர்வோம். நமது வலைப்பதிவை படிக்கும்

    பயர்பாக்ஸ் உலவியின் வேகத்தைக் குறைக்கும் 9 நீட்சிகளின் பட்டியல்

    பயர்பாக்ஸ் உலவி இணைய உலகில் பலரால் விரும்பப்படுகிறது. இதன் சிறப்பான தோற்றம், வேகம், எளிமை, அதிக அளவிலான நீட்சிகள், எந்தவொரு இணைப்பையும் கையாளும் தன்மை போன்றவை சிறப்பம்சங்கள். ஆனாலும் பயர்பாக்ஸ் கணிணியில் முதன் முதலாக திறக்கப்படும் போது கொஞ்சம் வேகம் குறைவாகத் தான் இருக்கும். இதற்குக் காரணம் ஆட் ஆன்கள் (Firefox Add ons) அல்லது நீட்சிகளை அதிகமாகப் பயன்படுத்துவது தான். நீட்சிகள் என்பவை வலை உலவியில்

    Monday, May 9, 2011

    BSNL 3G இண்டர்நெட்டை மொபைலில் பயன்படுத்துவது எப்படி?

    தமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையை அனைத்து நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி விட்டன என்றாலும் அனைத்து நகரங்களிலும் முழுமையாக இன்னும் வரவில்லை. இந்த சேவையில் முந்திக் கொண்ட BSNL நிறுவனம் நகரங்கள், மாவட்டங்கள், முக்கிய ஊர்களில் நன்றாக சேவையை வழங்குகிறது. 3G சேவையை பயன்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று 3G வசதியுடைய மொபைல்கள். இரண்டாவது 3G டேட்டா கார்டுகள் என அழைக்கப்படும் யூஎஸ்பி மோடம்கள் (Data cards /

    Sunday, May 8, 2011

    BSNL 2G லிருந்து 3G க்கும் 3G லிருந்து 2G க்கும் மாறுவது எப்படி?

    BSNL நிறுவனத்தின் 3G இணைய சேவையை பயன்படுத்த புதிய சிம் 180 ருபாய்க்கு வழங்கப்படுகிறது. இதில் 120 ருபாய்க்கு அழைப்புக்கான பேலன்ஸ் மற்றும் 200 Mb டேட்டா அளவுக்கு இணையப் பயன்பாடும் தரப்படுகிறது.BSNL 2G -> BSNL 3Gஉங்களிடம் ஏற்கனவே BSNL 2G சிம் இருப்பின் அதிலிருந்து அப்படியே 3G சேவைக்கு மாறிக் கொள்ள முடியும். முதலில் உங்கள் மொபைல் போனில் 50 ருபாய் பேலன்ஸ் இருக்க வேண்டியது முக்கியம். பிறகு உங்கள் 3G

    பிளாக்கர் பதிவுகளில் Facebook Like பட்டனை இணைப்பது எப்படி?

    பேஸ்புக் இணையதளம் சமுக வலைத்தளங்களில் பிரபலமான இணையதளமாகும். இதில் நாள்தோறும் உலா வருவோரின் எண்ணிக்கை மிக அதிகம். நமது வலைப்பூவின் பதிவுகளை பேஸ்புக்கில் இணைப்பதால் நமது நண்பர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் என்று பெரிய கூட்டமே படிக்க வாய்ப்புள்ளது. நமது பதிவைப் படிக்கும் பலரும் தங்களது பேஸ்புக் இடத்தில் நமது பதிவுகளின் இணைப்பை பகிருவதால் இணைய வரத்தும் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

    Saturday, May 7, 2011

    இலவச டிக்ஸ்னரி டவுன்லோட்

    இலவச டிக்ஸ்னரி டவுன்லோட்( free dictionary download ) செய்ய இங்கே http://wordweb.info/free/ செல்லவும்..
    இதை நீங்கள் இன்ஸ்டால்(install) செய்தபின் alt+ctrl+w ஆகிய பட்டன்களை ஒன்றாக அமித்தினால் இந்த சாப்ட்வேர் திறக்கப்படும்..

    உதாரணமாக நீங்கள் ஒரு வார்த்தையை தேர்வு செய்து, பின் alt+ctrl+w ஆகிய பட்டன்களை ஒன்றாக அமித்தினால் அந்த வார்ததைக்கான பொருள் இந்த(word web) சாப்ட்வேரால் காண்பிக்கப்படுகின்றது.



    Friday, May 6, 2011

    பிளாக்கர் பதிவுகளில் Google Buzz பட்டனை இணைப்பது எப்படி?

    இணையத்தில் நமது எண்ணங்கள், ஒளிப்படங்கள், வீடியோ போன்றவற்றை பகிர்ந்து கொள்ள உதவும் சமூக வலைத்தளங்களைப் போல ஒரு சேவை தான் கூகிளின் பஸ் (Google Buzz). பலரின் வலைத்தளத்தில் பதிவின் எதாவது ஒரு இடத்தில் கூகிள் பஸ் பட்டனைப் பார்த்திருக்கலாம். இதன் மூலம் படிக்கும் வாசகர்கள் பட்டனைக் கிளிக் செய்து அவர்களின் கூகிள் பஸ் பக்கத்தில் நமது பதிவைப் பற்றி பகிர்ந்து கொள்ள முடியும். இந்த சேவையை குறிப்பிட்ட

    Thursday, May 5, 2011

    பயர்பாக்ஸ் உலவியின் டேப்களை வண்ணமயமாக்க FabTabs

    இணைய உலவிகளில் தற்போது டேப் (Tabs) பயன்பாடு அவசியமான ஒன்றாகி விட்டது. முன்பெல்லாம் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer) உலவியில் இணையம் பயன்படுத்தும் போது வேறு பக்கத்தை பார்க்க அல்லது மற்ற எதாவது இணைப்புகளை (Links) புதிய விண்டோவில் தான் பார்க்க முடியும். ஒவ்வொரு முறையும் புதிய விண்டோ திறக்கும் அனுபவம் எரிச்சலானது. திரும்பவும் எந்த விண்டோவிற்கு செல்வது என்ற குழப்பமும் அதிகம். இப்போது ஒரே

    Monday, May 2, 2011

    மைசூர் அரண்மனை

    மைசூர் பேலஸ்( Mysore Palace ) ஆன்லைனில் சுற்றிப்பார்க்க இங்கே செல்லவும்(www.mysorepalace.tv). 360 டிகிரி பார்க்கும் வசதி, ஆங்கில வர்ணனை, போட்டோ கேலரி என எளிதாக பார்க்க முடிகின்றது. செலவில்லாமல் மைசூர் அரண்மனையை சுற்றிப்பாருங்கள்..

    http://www.mysorepalace.tv/360_Eng/index.html

    Sunday, May 1, 2011

    விண்டோஸ் 7 இயங்குதளத்தை விண்டோஸ் 8 ஆக மாற்ற Transformation Pack

    விண்டோஸ் 7 இயங்குதளம் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகம், வேகமான லோடிங், கண்ணைக் கவரும் பயன்பாடுகள் என இதன் வசதிகள் அதிகம். மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பாக விண்டோஸ் 8 ஐ அறிவித்துள்ளது. அடுத்த வருடத்தில் இந்த பதிப்பு வெளியிடப்படும் என்றுசொல்லப்படுகிறது. அதற்கு முன்பாகவே விண்டோஸ் 8 இயங்குதளத்தின் வசதிகள் எவ்வாறு இருக்கும் என்பதனை

    Saturday, April 30, 2011

    வந்துவிட்டது வெள்ளை நிற‌ ஐபோன் 4

    வெள்ளை நிற‌ ஐபோனை (4) அறிமுகப்படுத்திய பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஆப்பிள் நிறுவன உயர் அதிகாரி பில் ஷில்லர் கூறியதாவது, தற்போது நடைமுறையில் உள்ள ஐபோனுக்கும், இந்த வெள்ளை ஐபோனுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்றாலும், இது சற்று தடிமனானது. கருப்பு ஐபோனை விட, இந்த வெள்ளை ஐபோன் 4, 0.2 மிமீ தடிமன் கொண்டது என்றும், மெட்டல் ஆண்டெனா இரண்டிலும் ‌ஒரேபோல் உள்ளபோதிலும், கிளாஸ் பேனல்கள், புதிய ஐபோனில் சற்று தடிமனாக உருவாக்கப்பட்டுள்ளது. புறஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் விதமாக, இதில் சிறப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


    Thursday, April 28, 2011

    பள்ளி பாடப்புத்தகங்கள்

    தமிழ்நாடு அரசு பள்ளி பாடப்புத்தகங்கள்(1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை ) பிடிஎப்(PDF) வடிவில்..டவுன்லோட்( Download ) செய்ய இங்கே செல்லவும்
    http://www.textbooksonline.tn.nic.in

    சமச்சீர் கல்வி 10ம் வகுப்பு பாட நூல்கள் டவுன்லோட்( Download ) செய்ய

    Wednesday, April 27, 2011

    இலவசமாக மொபைல் அப்பிளிகேஷன்ஸ்

    இலவசமாக மொபைல் அப்பிளிகேஷன்ஸ்( Free Mobile Applications) டவுன்லோட்( Download ) செய்ய இங்கே செல்லவும்..

    http://www.freewarelovers.com/

    அன்ட்ராய்டு(ANDROID), பால்ம்(PALM OS), பிளாக்பெர்ரி(BLACKBERRY), சிம்பியன்(SYMBIAN) போன்ற மொபைலுக்கான இலவச அப்பிளிக்கேஷன்கள் இங்கே கிடைக்கின்றன.

    Tuesday, April 26, 2011

    உங்கள் வெப்சைட் மதிப்பு எவ்வளவு?!

    ஒரு வெப்சைட்டினை மதிப்பீடு(website value) செய்வது எப்படி? வெப்சைட்டின் பண விகிதம், விளம்பரங்கள் மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டும்? என்பதை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்..


    இந்த பிளாக்கின் மதிப்பு $58 என காட்டுகின்றது..பலே!! பலே!!
    அலக்ஸா ரேங்க்(Alexa Traffic Ranking): 9,067,664

    Monday, April 25, 2011

    விண்டோஸ் கிளினர்


    விண்டோஸ் சிஸ்டம் இயக்கத்தில், பைல்களை நிர்வகிப்பதில் உலகளவில் பயன்படுத்தப்படும் புரோகிராம்களில் புகழ் பெற்றது சிகிளீனர் (CCleaner) ஆகும். அவ்வப் போது ஏற்படும் தற்காலிக பைல்கள், குக்கீஸ், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்றவற்றை நீக்கி, ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்து வதில் சிறப்பாக இது இயங்குகிறது. இதனைத் தயாரித்து வழங்கும் பிரிசாப்ட் (Pirisoft) நிறுவனம், அண்மையில் இதன் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பினை (பதிப்பு 3.0.5) வெளியிட்டுள்ளது. http://www.piriform.com/ccleaner/download/standard என்ற முகவரியில் உள்ள இதன் இணைய தளத்திலிருந்து இந்த புரோகிராம் பைலை இறக்கி, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

    Wednesday, April 20, 2011

    வெப்சைட் - VOIP கைடு

    உலக நாடுகளுக்கு போன் பேச வேண்டுமா?அதற்கு ஏற்ற VOIP சாப்ட்வேர் எது? மிகவும் குறைவான கட்டணம் வசூலிப்பது எந்த சாப்ட்வேர். காலின்(calling) தரம் சாப்ட்வேர் உபயோகிக்கும் முறை அனைத்தும் சரியாக உள்ளதா? இப்படி பல விசயங்களை ஆராய்கின்றது இத்தளம். மிகவும் உதவியான தளம்.
    வெளிநாடுகளுக்கு VOIP மூலம் கால்(call) பண்ண வேண்டும் என நினைப்பவர்களுக்கு இத்தளம் உதவியாக உள்ளது.

    Monday, April 18, 2011

    C புரோகிராமிங் - பகுதி 3

    சி 1969 முதல் 1973 இடையேயான காலத்தில் டென்னிஸ்ரிச்சி(Dennis Ritchie) என்பவரால் பெல் (AT&T Bell Telephone Laboratories) சோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்டது.

    யுனிக்ஸ் என்பது ஒரே நேரத்தில் பல வேலை செய்யக்கூடிய (Multi-tasking) மற்றும் பல பயனாளர்கள் (Multi-User) கையாளக் கூடிய இயக்குதளமாகும்(Operating System).1969ல் முதலில் யுனிக்ஸானது அஸம்பிளி லாங்குவெஜால் (Assembly Language) AT&T Bell Telephone Laboratories நிறுவன பணியாளர்களால் உருவாக்கப்பட்டது. அதில் டென்னிஸ் ரிச்சியும் ஒருவர்.

    பின் 1973ல் யுனிக்ஸ் முழுமையும் சியால் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. இதில் சியானது மேலும் பல சிறப்புகளை புகுத்த உதவியது. மேலும் வேறுபட்ட வன்பொருளிளும் யுனிக்ஸை எளிதாக புகுத்தி (Portable)இயங்கும்படி செய்வதில் சி உதவியது.

    சியில் எழுதப்பட்ட புரோகிராமானது எந்தவொரு ஆப்பரேட்டிங்சிஸ்டத்திலும் கம்பைலர் உதவிகொண்டு மெசின் கோடாக மாற்றி நாம் இயக்கவல்லது. இதற்கு நாம் கோடில் ஒருசில மாற்றங்களை செய்தாலே போதுமானது.சியானது எளிதாக வன்பொருளின் நினைவகத்தை கையாளக்கூடியது. எனவேதான சி-யானது மைக்ரோ கண்ரோலர் (Micro Controller) முதல் சூப்பர் கம்யூட்டர் (Super Computer) வரை உபயோகிக்கப்படுகின்றது.

    சி-யில் எழுதப்பட்ட புரோகிராமை இயக்க நமக்கு கம்பைலர் உதவியாக உள்ளது. டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சி கம்பைலர்கள், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் கம்பைலர்கள், யுனிக்ஸ் இயக்கத்தில் இயங்கும் கம்பைலர்கள் உள்ளன். இவற்றிற்குள்ள ஒரே வேறுபாடு பிராசசர் அளவு மட்டுமே.

    நீங்கள் உங்களுக்கு பிடித்த, தகுந்த கம்பைலரை உபயோகித்து புரோகிராம் எழுதிபார்க்கலாம்.சில கம்பைலர்களை பற்றி அடுத்த பதிப்பில் பார்க்கலாம்..

    Friday, April 15, 2011

    கம்ப்யூட்டர் சிரிப்பு


    கம்ப்யூட்டர் படித்த மாப்பிள்ளையை நிச்சயம்பண்ணுனது தப்பாப்போச்சு..

    ஏன்?என்னாச்சு?வரதட்சணை அதிகமா கேக்குறாரா?

    அப்படி கேட்டுடாதான் பரவாயில்லையே ஹம்..வீடியோ காண்பரன்சிலதான் தாலிய கட்டுவேனு ஒத்த காலுலல்ல நிக்குறாரு..

    பிரின்ட் வெப்சைட்


    இணைய பக்கத்தை நீங்கள் விரும்பிய வண்ணம் பிடிஎப்(PDF) ஆக ஆன்லைன்ல்(online) மாற்றுங்கள்.
    இங்கே சென்று உங்களுக்கு பிடித்த இணையதளத்தின்(webpage) முகவரியை கொடுத்து அதனை பிடிஎப்(PDF), ஆகவோ ஹச்டிமெல்(HTML) ஆகவோ அல்லது நேரடியாக பேப்பரில் பிரின்டோ எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு செய்கையில் உங்களுக்கு அந்த இணையதளத்தில் வரும் படங்கள், விளம்பரங்கள் இணைக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பதையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். சந்தோஷம்தானே?!

    எந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிகளில் பயன்படுத்த அற்புத மென்பொருள்

    கணிணியில் இண்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்த நாம் மொபைல், தரைவழி பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் ஒரு இணைப்பில் ஒரே கணிணியை மட்டுமே பயன்படுத்துவோம். இரண்டு கணிணிகளில் இணைத்துப் பெற வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்துவர். இதை விட எளிமையான வழியில் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் பல கணிணிகளில் பயன்படுத்த வழிவகுக்கிறது ஒரு அற்புத

    Wednesday, April 13, 2011

    விண்டோஸ்-7 பூட் டைம் குறைக்க


    சில நேரங்களில் விண்டோஸ் பூட்(boot) ஆக நேரம் எடுக்கும். அதற்கு முக்கிய காரணம் கணினி இயக்கத்தை துவங்கும்போது போது பல புரோகிராம்கள் தங்கள் இயக்கத்தை ஆரமிக்கின்றன.

    இதனை தடுத்தாலே பூட்(boot) வேகம் அதிகரிக்கும். அதற்கான வழிகள்,
    • கிளிக் ஸ்டார்ட் பட்டன்
    • msconfig என டைப் செய்து தேடவும்
    • System Configuration என்ற டயலாக் பாக்ஸ் தோன்றும்
    • Startup என்ற டேபை தேர்வு செய்யவும்
    அதில் உள்ள உங்களுக்கு தேவையில்லாத பூட் நேரத்தில் இயங்கும் அப்பிளிகேஷன்களை டிக்கை(tick) நீக்கி 'Apply' பட்டனை அமுத்தவும்.

    அடுத்தமுறை கம்யூட்டர் பூட்டாகும் போது
    நீங்கள் நீக்கிய புரோகிராம்கள் துவங்காமல் இருக்கும். கணினியின் பூட்(boot) நேரமும் மிச்சமாகும்.



    விண்டோஸ் 7 ஸ்டிக்கி நோட்ஸ்
    ஸ்டார்ட் சர்ச் பாக்ஸில், sticky என டைப் செய்திடவும். இதன் மூலம் ஸ்டிக்கி நோட்ஸ் சிறிய புரோகிராமினை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம்.

    Monday, April 11, 2011

    வந்துவிட்டது யுஸ்பி 3


    இதுவரை யுஸ்பி-2(USB-2) வை நாம் உபயோகித்து வந்த நமக்கு யுஸ்பி-3(USB-3) ஒரு வரப்பிரசாதம். யுஸ்பி-3யானது யுஸ்பி-2 வை விட 10 மடங்கு வேகத்துடன் இயங்கவல்லது. யுஸ்பி-3ல் சில பின்கள்(pins) புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இது நொடிக்கு 3.2 முதல் 4 ஜிகாபைட்(gigabyte) வேகத்திற்கு உதவுகின்றன. ஒரே நேரத்தில் டேட்டாவை வேகமாக அனுப்பவும் பெறவும் இதனால் முடியும்.

    யுஸ்பி-2 ஹை ஸ்பீடு(Hi-Speed) என அழைக்கப்பட்டது. யுஸ்பி-3 சூப்பர் ஸ்பீடு(Super Speed) என அழைக்கப்படுகின்றது. யுஸ்பி-2 ல் சப்போர்ட் செய்த அனைத்து சாதனங்களும் யுஸ்பி-3யிலும் இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் செப்டம்பர் மாதம் யுஸ்பி-3 சப்போர்டானது லினக்ஸ் கெர்னலில் (linux kernel)இணைக்கப்பட்டுவிட்டது. வின்டோசும் அதற்கான வேலைகளில் களம் இறங்கியுள்ளது. நாம் யுஸ்பி-3க்கு மாறும்காலம் வெகுதொலைவில் இல்லை. மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இப்போதே யுஸ்பி-3 சப்போர்ட் (support)செய்ய கூடிய சாதனங்கள் வர துவங்கிவிட்டன.

    Sunday, April 10, 2011

    C புரோகிராமிங் பகுதி-2

    ஹைகை லெவல் லாங்குவேஜ்(High Level Language)
    இது படிப்பதற்கும் புரிந்து கொள்ளுவதற்கும் எளிதாக இருக்கும்.
    புரோகிராமர்கள் எளிதில் புரிந்துகொண்டு கோடு எழுத வழிமுறைகளை(syntax) கொண்டுள்ளது. இதில் எழுதப்பட்ட புரோகிராமை மெஷின் கோடாக மாற்ற கம்பைலர்(compiler) உபயோகிக்கப்படுகின்றது.

    லோ லெவல் லாங்குவேஜ்(Low Level language )
    இது படிப்பதற்கும் புரிந்து கொள்ளுவதற்கு சற்று கடினமானது. பொதுவாக இதனுடைய புரோகிராம் கோடானது மெமோனிக் கோடால்(mnemonic code) எழுதப்பட்டிருக்கும்.

    மைக்ரோபிராசசர்(microprocessor), மைக்ரோகன்ரோலர்(micro-controller) போன்றவை இந்த லாங்வேஜை உபயோகிக்கின்றன.நேரடியாக கம்யூட்டர் ரிஜிஸ்டர்(register), நினைவகத்துடன்(memory) தொடர்புடைய கோடுகளை கொண்டது. உதாரணமாக அஸம்பிளி லாங்வேஜை(assembly language) நாம் கூறலாம். இதில் எழுதப்பட்ட கோடை மெஷின் கோடாக மாற்ற அஸம்ளர்(assembler) உபயோகிக்கப்படுகின்றது.

    சி லாங்குவேஜ்(C Language)
    சியானது ஒரு ஹைகை லெவல்(highlevel) லாங்குவேஜ். சியில் நாம் எளிதாக மெம்மரியை(memory) கையாலுவதால் சியானது மிடில் லெவல் லாங்குவேஜ்(middle level language) எனவும் அழைக்கப்படுகின்றது. கம்பைலர் லாங்குவெஜ்(compiler language) எனவும் அழைக்கப்படுகின்றது.

    Thursday, April 7, 2011

    IPL4 T20 கிரிக்கெட் மேட்சுகளை இணையத்திலும் மொபைலிலும் லைவ் ஆக பார்க்க…

    கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றதும் சூட்டோடு சூடாக உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 4 வது சீசன் ஏப்ரல் 8 நாளை முதல் தொடங்குகிறது. கடந்த முறை இணையத்தில் IPL கிரிக்கெட் விளையாட்டுகளை நேரலையாக யூடியுப் நிறுவனம் தனது இணையதளத்தில் Live Streaming செய்து மிகுந்த புகழை அடைந்தது. பல நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் வேலையை மறந்து IPL கிரிக்கெட்டை அலுவலகத்திலேயே திருட்டுத்தனமாக பார்த்து

    பிரவுசர் புதிய பதிப்பு

    கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்கு ஒருமுறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற கூகுள் நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில், குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர். பின்னர், பழகிப்போன சில வசதிகளுக்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும் பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத் தொடங்கினால், மற்றவற்றை நாட மாட்டார்கள் என்ற பொதுக் கருத்து இப்போது நிலவுகிறது. இந்த புதிய குரோம் பிரவுசரின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.
    முதல் அம்சமாக, மீண்டும் அதன் வேகத்தைக் கூறலாம். முதல் முதலாக வந்த குரோம் பிரவுசரைக் காட்டிலும் இதன் வேகம் பத்து மடங்கு கூடுதலாக இருப்பதாக, இதனைச் சோதித்துப் பார்த்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. Crankshaft JavaScript இதற்குத் துணை செய்கிறது. குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டினை மேற்கொண்ட போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு 1,184 மில்லி விநாடிகளில் இணையப் பக்கத்தினை இறக்கிக் காட்டியது. அதே சோதனையை மற்றவற்றில் நடத்திய போது, பயர்பாக்ஸ் (பதிப்பு 3.6.15) 945 மில்லி செகன்ட்ஸ், ஆப்பிள் சபாரி 422.1 மில்லி செகண்ட்ஸ், பயர்பாக்ஸ் (பதிப்பு 4 பீட்ட 12) - 388 மில்லி செகண்ட்ஸ், புதிய குரோம் (பதிப்பு 10)321 மில்லி செகண்ட்ஸ் வேகத்தைக் காட்டின.

    குரோம் பிரவுசரை இலவசமாக http://www.google.com/chrome என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் பிரவுசரைப் பயன்படுத்தக் கூடாது என்று மக்களைக் கேட்டுக் கொள்வதற்காக, ஓர் இணைய தளத்தை உருவாக்கி உள்ளது.
    http://www.ie6countdown.com/ என்ற தளம் அதைத்தான் செய்கிறது. "பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரவுசர் ஒன்று பிறந்தது. அதன் பெயர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6. இப்போது அதற்கு விடை கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது' என்ற வாசகத்துடன் இந்த தளம், மக்களை இன்டர்நெட் பிரவுசர் பதிப்பு 6லிருந்து விலகிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறது. இந்த பிரவுசரைப் பயன்படுத்துவதனால் என்ன என்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று எச்சரிக்கப்படுகிறது. ஏன் பிரவுசரை அப்கிரேட் செய்து, பின்பு வந்த பிரவுசர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று விவரமாக எடுத்துச் சொல்லப்படுகிறது.

    Tuesday, April 5, 2011

    தமிழ்நாடு 2011 தேர்தல்


    2004 முதல் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெற்ற தேர்தலில் நின்ற வேட்பாளர்களின் விபரங்கள் இங்கே கிடைக்கின்றன. வேட்பாளர்களின் படிப்பு விபரம், சொத்து மதிப்பு( நாமினேஷன் செய்யும் போது அவர்கள் தெரிவித்தது ) மற்றும் அவர்களின் மேல் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை இவற்றையும் சுட்டி காட்டுகின்றது.

    இந்த தருணத்தில் பார்க்க வேண்டிய வெப்சைட்..


    தமிழ்நாடு 2011

    பெரிய கோப்புகளை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள் GSplit

    கணிணியில் பெரிய அளவிலான கோப்புகள் நிறைய வைத்திருப்போம். பென் டிரைவில் ஏற்றி வேறு எங்கேனும் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தால் இடம் பத்தாது. இல்லையென்றால் டிவிடியில் எழுதி எடுத்துப் போகலாம் என்று நினைத்தாலும் இடமிருக்காது. இப்படித்தான் நண்பர் 5 GB அளவுள்ள படமொன்றைக் காப்பி செய்து டிவிடியில் எழுதித் தரச்சொன்னார். பென் டிரைவின் அளவோ 4 GB தான். வீடியோ கோப்பும் பல கோப்புகளாக இல்லாமல் ஒரே கோப்பாக 5

    செய்தி - தெரிஞ்சுகோங்க

    உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி தொலைக்காட்சியில் அதிகம் பேர் பார்த்துசாதனை
    மும்பையில் கடந்தசனிக்கிழமை நடைபெற்ற இந்தியா - இலங்கை இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நாடு முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இப்போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியை, தொலைக்காட்சியில் கண்டு ரசித்தவர்கள் குறித்த ஆய்வறிக்கையை, ஆடியன்ஸ் மெஷர்மென்ட் அண்டு அனலிட்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை, 6 கோடியே 76 லட்சம் பேர் சராசரியாக 4 மணிநேரத்திற்கும் அதிகமாக கண்டு ரசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.டி.வி.ஆர்., எனப்படும் தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டின்படி, இப்போட்டி இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு 13.7 புள்ளிகளைப் பெற்றுள்ளது. போட்டியின் இறுதிக் கட்டத்தில், இது, 21.44 புள்ளிகள் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. நாட்டில் கேபிள் மற்றும்சாட்டிலைட் வசதி மூலம் தொலைக்காட்சி பார்க்கும் இல்லங்களில் 64சதவீத குடும்பத்தினர், இறுதிப் போட்டியை கண்டு ரசித்துள்ளனர்.உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி வரை தொலைக்காட்சியில் கண்டு ரசித்தோர் குறித்த மதிப்பீட்டின்படி, 3.7 புள்ளிகள் என்ற அளவில் குறைந்திருந்தது. இது காலிறுதியில் 5 புள்ளிகளாகவும், அரையிறுதி ஆட்டத்தில் 11 புள்ளிகளாகவும் உயர்ந்து இறுதிப் போட்டியில் 13.6 புள்ளிகள் என்றசாதனை அளவை எட்டியது. இது இதுவரை இல்லாத புதியசாதனையாகும். மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல், காமன்வெல்த் விளையாட்டு தொடக்க விழா, ஐ.பி.எல் சீசன் 3, உலகக் கோப்பை கால்பந்து போட்டி உள்ளிட்டவற்றை தொலைக்காட்சியில் பார்த்தவர்களை விட, உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்த்தவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    'டிவி'யில் அதிகம் பேர் பார்த்த ஐந்து நிகழ்ச்சிகள்

    *2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - 6.76 கோடி

    *2011-12 மத்திய பட்ஜெட் தாக்கல் -3.70 கோடி

    *காமன்வெல்த் விளையாட்டு தொடக்க விழா - 3 கோடி

    *ஐ.பி.எல்., சீசன் 3 - 96 லட்சம்

    *2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டி - 15 லட்சம்

    Monday, April 4, 2011

    விண்டோஸ் 7 ல் கணிணியின் வெப்பநிலையை வண்ணத்தில் காட்ட இலவச மென்பொருள்

    நாம் பயன்படுத்தும் கணிணியானது குறிப்பிட்ட வெப்பநிலையில் இயங்கிவருகிறது. கணிணி மிக அதிகமான வெப்பநிலைக்குச் (Over heating) சென்றால் அதன் காரணமாக விண்டோஸ் பூட் ஆகும் போது சிக்கல் ஏற்படலாம். மேலும் சிபியுவில் எதேனும் நுண்ணிய பாகங்கள் பழுதடையும் வாய்ப்பும் உள்ளது. கணிணியின் வெப்பநிலையை காட்டுவதற்கு மென்பொருள்கள் நிறைய உள்ளன.கணிணியின் டாஸ்க் பாரை (Task bar) அவ்வப்போது மாறிவரும் வெப்பநிலைக்கு ஏற்றவாறு

    Sunday, April 3, 2011

    வலைப்பதிவில் ஒளிப்படங்களைத் தேடியந்திரங்களுக்கு ஏற்றபடி பயன்படுத்துவது எப்படி?

    கூகிளின் தேடுதலில் நாள்தோறும் 1 பில்லியன் புகைப்படங்களுக்கு மேல் தேடுவதாக கணக்கிடப் பட்டுள்ளது. அதனுடைய தேடல் தரவுத்தளத்திலும் ஒளிப்படங்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டு வருகிறது. வலைப்பதிவில் கட்டுரைகளின் இடையே தேவையான இடங்களில் செய்திக்கேற்ற ஓளிப்படங்களைப் பயன்படுத்துவோம். தேடியந்திரங்கள் (Search engines) நமது வலைப்பதிவைப் பார்வையிடும் போது ஒளிப்படங்கள் முறையான வகையில் இருந்தால் அதிலிருக்கும் சில

    வெப்சைட் - தமிழ்நாடு அரசு


    தமிழ்நாடு அரசு அறிவிப்புகள் மற்றும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.
    தமிழில் படிக்க

    இங்கே டிரைவிங் லைசன்ஸ், ரேசன் கார்டு, ஜாதி சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், பிறந்தநாள் சான்றிதழ், தண்ணீர் குழாய் புது இணைப்பு, வில்லங்கச் சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா மாற்றுதல், வாகனங்கள் பதிவு சான்றிதழ், போன்றவற்றிக்கான மேலும் பல விண்ணப்பப்படிவங்களை இங்கே இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இதற்கான ஆன்லைன் சேவையும் இங்கே கிடைக்கின்றது.


    இதேபோல் சென்னை மாநகராட்சியின் வெப்சைட் இதுதான்
    தமிழில் படிக்க