Tuesday, September 28, 2010

ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க

ஜிமெயில் இலவசமாக இருப்பதனால் மட்டுமின்றி, அதன் அளவற்ற ஸ்டோரேஜ் இடம், கூடுதல் வசதிகள், இணைந்த அதிவேக தேடல் வசதி, இதனால் கிடைக்கும் மற்ற கூகுள் தள வசதிகள் ஆகியவற்றால், இணையம் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளனர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களை வெவ்வேறு பெயர்களில் வைத்துள்ளனர். ஆனால் இதில் ஒரு சிக்கல் எழுகிறது. சில பிரவுசர்கள், ஒரு நேரத்தில் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை மட்டுமே திறக்க அனுமதிக்கின்றன.

எடுத்துக் காட்டாக, நான் பயர்பாக்ஸ் பிரவுசரில், முதலில் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்து பார்த்து, பின்னர், இன்னொரு டேப்பில் அடுத்த ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்தேன். என்னைக் கேட்காமலேயே, முதல் அக்கவுண்ட் முடித்துவைக்கப்பட்டது. இது ஏன் என ஆங்காங்கே சென்று பார்த்தபோது, அது அப்படித்தான் என்பது போல செய்தி கிடைத்தது. ஆனால் இன்னொரு வழியை இங்கு கையாண்டேன். இன்னொரு முறை பயர்பாக்ஸ் பிரவுசர் ஐகானில் கிளிக் செய்து, இரண்டாவதாகவும் இந்த பிரவுசரில், ஜிமெயில் தளம் திறந்து, இன்னொரு அக்கவுண்ட்டைத் திறந்தேன். இரண்டும் இயங்கியது. மூடப்படவில்லை.

ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 பிரவுசரில் இதற்கு வேறு ஒரு வழி கிடைத்தது. அதன் படி, முதலில் இந்த பிரவுசரைத் திறந்து கொள்ளவும். ஜிமெயில் தளம் செல்லவும். அங்கு “Remember Me” என்ற ஆப்ஷன் இயக்கப்படவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளவும். இதன் பின்னர், முதல் அக்கவுண்ட்டினை சைன் இன்(Sign In) செய்து திறக்கவும்.

அடுத்து, ஆல்ட்+ எப்+ஐ அழுத்தவும். பின்னர் என்டர் தட்டவும். இதனால், இன்னொரு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கம் (Session) ஒன்று திறக்கப்படும். இங்கு மீண்டும் ஜிமெயில் தளம் சென்று,“Remember Me”என்ற ஆப்ஷன் இயக்கப்படாமல், அடுத்த அக்கவுண்ட்டினை சைன் இன் செய்திடவும். இதே போல ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களைத் திறக்க அனுமதிக்காத, வெப் மெயில்கள் அனைத்தையும் இந்த முறையில் திறந்து பயன்படுத்தலாம்.

ஒரே கிளிக்கில் எல்லா பயன்பாடுகளையும் மூட...

நாம் கணினியை பயன்படுத்தும் போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருள்கள் அல்லது பயன்பாடுகளை திறந்து வைத்திருப்போம். திடிரென்று கணினியை அணைக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் என்ன செய்வோம்? ஒவ்வொரு பயன்பாடாக சென்று மூடிக்கொண்டிருப்போம். ஆனால் எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் மூடிவிட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.இதற்கு தான் ஒரு மென்பொருள் உள்ளது. Close All என்ற இந்த மென்பொருள் கணினியில் நாம்

Wednesday, September 8, 2010

Mp3 பாடல்களை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள்

நண்பர்கள் சிலர் ஒரு முழு mp3 பாடலில் இருந்து குறிப்பிட்ட வரிகளை மட்டும் வெட்டி எடுத்து பயன்படுத்த விரும்புவார்கள். சில நேரம் குறிப்பிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட சிறுபாடல்களை இணைத்து முழு பாடலாக மாற்ற விரும்புவார்கள். கல்லூரி நிகழ்ச்சிகளில் ஆடல்பாடல்களில் பல பாடல்களை கோர்வையாக ஒளிபரப்பி நாடகம் போடுவார்கள். இந்த நேரத்தில் நமக்கு உதவும் மென்பொருள் தான் Mp3 Split and Joiner.இந்த மென்பொருளை வைத்து

Friday, September 3, 2010

விளையாடலாம் வாங்க! பசுமாட்டின் அட்டகாச விளையாட்டு - Supercow

சிறையிலிருந்து தப்பிய ஒரு பேராசிரியர் ஒரு சின்ன கிராமத்தின் விலங்குகளை எல்லாம் பிடித்துக்கொண்டு அவற்றை பலமடங்காக குளோன் செய்து பூமியை அழிக்க திட்டமிடுகிறார். இச்செய்தியை கேள்விப்பட்ட Supercow என்ற பசுமாடு பேராசிரியரை அழிக்க முயற்சி செய்கிறது. இப்போது உங்கள் கைகளில் Supercow. விளையாட சுவாரசியமான இந்த விளையாட்டின் அளவு 78 MB தான்.இதில் மொத்தம் 10 stage களும் அதில் நிறைய நிலைகளும் (levels) உள்ளன.

Wednesday, September 1, 2010

இலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்

கணினியில் எந்த மென்பொருள் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஆண்டிவைரஸ் போடாமல் இருக்க முடியாது. நமக்கு எப்படி நமது உடல்நிலைக்கு உணவு முக்கியமோ அந்தளவுக்கு கணினிக்கு ஆண்டிவைரஸ் முக்கியம். தற்சமயத்தில் காசு கொடுத்து வாங்கினாலும் சில ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் உபயோகமாக செயல்படுவதில்லை. ஆனால் இலவசமாக வழங்கப்படும் அவாஸ்ட் ஆண்டிவைரசின் செயல்பாடு குறிப்பிடும்படியாக உள்ளது.அவாஸ்ட் ஆண்டிவைரசின் புதிய